☰ உள்ளே....

குட்டிக்குட்டி சினிமா - புதிய பகுதி அறிமுகம்.விழிப்புணர்வு, சமூக அவலங்கள், மனித உறவுகளின் போராட்டம் இவற்றை மையமாகக் கொண்ட கதைக்கரு; துள்ளியமான காட்சிகள், நேர்த்தியான ஒளிப்பதிவு, வருடும் இசை என இயல்பான தொழில்நுட்பம்; அறிமுகமில்லாத முகங்கள், அலட்டிக் கொள்ளாத நடிப்பு, குறைவான நேரம் என்ற தேர்வு; இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் குறும்படங்கள் ஒரு படைப்பாளியின் எண்ணத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாகத் திகழ்கிறது என்பது மிகையில்லை. புத்தகம் சினிமா பாடல்களைப் போன்று ரசனை மிகுந்த அத்தகைய குறும்படங்களின் தேடுதலும், தேடலில் கிடைத்த பட்டியலும் அடியேனிடம் இருக்கிறது. கிடைத்ததை எல்லாம் இந்த சிறிய கூட்டிற்குள் பத்திரப்படுத்தும் நான் அவற்றையும் சேமிக்கலாம் எனத் தோன்றியது.

"குட்டிக்குட்டி சினிமா என்ற இந்தப் புதிய பகுதியில் அடியேன் ரசித்து மெய்சிலிர்த்த குறும்படங்கள் இருக்கும், நீட்டி முழக்கி வர்ணித்து கதைசொல்லி விமர்சனம் செய்யாமல் குறும்படம் போலவே அவற்றைப் பற்றிய அறிமுகமும் இருக்கும். தொடர்ந்து இணைந்திருங்கள்.