☰ உள்ளே....

கிளிக் + (புதிய பகுதி அறிமுகம்).


விளையாட்டாக ஆரம்பித்தது மொபைல் போட்டோகிராபி பழக்கம்.
ஊர் சுற்றும் பறவை வாழ்க்கை கிடைத்ததால்  எங்கு சென்றாலும் எதையாவது கிளிக்கிவிடுவது வாடிக்கையாகிவிட்டது. அவ்வாறு கிளிக்குவதில் சில புகைப்படங்கள் எதார்த்தமாக அமைந்துவிடும், சிலவற்றிற்கு கொஞ்சம் மெனக்கெடல் தேவைப்படும். கிடைத்தவைகளை தேர்ந்தெடுத்து அவற்றில் சிறந்ததை எனது பக்கங்களில் இங்கு சேமித்து வைத்திருக்கிறேன். சிலவற்றை வேண்டாம் என ஒதுக்கியும் வைத்திருக்கிறேன். "வேண்டாம் என ஒதுக்கி வைப்பவைகளில்தான் உன்னதம் ஒளிந்திருக்கிறது" என்பதற்கேற்ப ஒதுக்கி வைத்திருக்கும் புகைப்படங்கள் எதையோ உணர்த்துவதுபோல் தோன்றியது. சிறு சிறு குறைகளுடன் இருக்கும் அந்த புகைப்படங்களை பட்டி டிங்கரிங் பார்த்து அதனுடன் வாசகங்களை இணைத்து வெளியிடலாம் என்ற எண்ணம் உதித்தது. அதுதான் "கிளிக் +" (Click + Add).

ஒரு சிறிய முயற்சி.