இடுகைகள்

April, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
☰ உள்ளே....

Waiting.

படம்

Yes am Single.

படம்

Paper man - காதலாகி.

படம்
ஆண்பாலோ, பெண்பாலோ எதிர்பாலை ஈர்க்க சிறுவயதில் காகிதத்தில் ராக்கெட் செய்து காற்றில் பறக்கவிட்ட அனுபவம் அனைவருக்கும் இருக்கும். விளையாட்டாகவோ, விபரீதமாகவோ அது பறந்து சென்று திருப்பிக் கொண்டு வந்த நினைவுகள் அனைத்தும் பசுமையாக இருக்கும். இந்த குட்டி அனிமேஷன் சினிமாவின் கதாநாயகனும் அதுபோலத்தான் காகித ராக்கெட்களை செய்து விடுகிறான். அவை அனைத்தும் அவனை அழகிய காதலிடம் கொண்டு சேர்க்கிறது .
ஜார்ஜ் தான் தினசரி அலுவலகம் செல்லும் ரயில்நிலையத்தில் காத்திருக்கும்போது தவறுதலாக தன் கையிலிருக்கும் காகிதங்களை பறக்க விடுகிறான். அவற்றில் ஒன்று அங்கு வரும் மெக் என்பவளின் முகத்தில் விழுகிறது. அவளது உதட்டுச் சாயத்துடன் அந்த காகிதம் ஜார்ஜின் கைக்கு திரும்பக் கிடைக்கிறது. இந்த வேடிக்கையில் இணைந்த இருவரும் பிரியும் நேரத்தில் கண்களால் உணர்வுகளை பரிமாறிக் கொள்கின்றனர். ஜார்ஜ் அலுவலகம் வந்தபின்பும் ரயில் நிலையத்தில் பார்த்த மெக்கின் நினைவாகவே இருக்கிறான். அவள் உதட்டுச் சாயம்பட்ட காகிதத்தை கையிலே வைத்திருக்கிறான். எதேச்சையாக ஜார்ஜ் வேலை பார்க்கும் அலுவலக கட்டிடத்தின் அருகே மெக் தென்படுகிறாள். ஜார்ஜ் அவளைப் பார்த்த…

Pink.

படம்

வத்தைக்குழம்பு ரசம் ராஜா.

படம்
திங்கட்கிழமை மதியம் வெறும் வயிற்றில் தொடங்கும் அந்த குழப்பம். இன்னக்கி எங்க சாப்பிடலாம்? என்ன சாப்பிடலாம்?. மதியம் தொடங்கி இரவு கடந்து அடுத்த நாள் செவ்வாய் புதன் என அந்த குழப்பம் தொடர்ந்து கொண்டே இருக்கும். குழப்பத்தின் நடுவே எதோவொரு ஹோட்டலையோ மெஸ்சையோ கையேந்தி பவனையோ தேடிப்பிடித்து இரைப்பைக்கு இரைபோட்டால் எப்படா வீட்டிற்கு (சொந்த ஊருக்கு) போகலாம் என பசிக்கும். ஞாயிற்றுக்கிழமை அல்லது விடுமுறை தினத்தில், வீட்டில், என்னடா சமைக்க சிக்கனா? மட்டனா? என அம்மா கேட்க, அதெல்லாம் ஒன்னும் வேணாம் வத்தக்கொழம்பும் முட்டை பொடிமாசும் வை, இல்லைன்னா ரசம் வச்சி உருளைக் கிழங்கு வறுத்து வை என சொன்னதும் தயாராகும் பாருங்கள் அந்த சாப்பாடு, அடடா! தேவர்கள் அசுரர்கள் பாற்கடல் மேருமலை வாசுகிபாம்பு இல்லாமல் அவள் கைப் பக்குவத்தில் கிடைக்கும் அமிர்தம். அதுபோலத்தான் ராஜாவின் பாடல்களும். என்னதான் ஹிந்தி ஆங்கிலம் தெலுங்கு மலையாளம் பெங்காலி பாப் ராப் ஜாக் ராக் என பாடல்களைத் தேடித் தேடி அலைந்தாலும் கடைசியில் ராஜாவிடம் தாயன்போடு சரணடைவது பரம ஆனந்தமாய் அமையும்.
ஹெட்போனில் காதலிபோல் காதில் சினுங்காமல் சில நேரங்களில் பாடல்க…

The Shiny red.

படம்

சம்மர் ஃபீலிங்.

படம்

Little Terrorist - எல்லையில்லா அன்பு.

படம்
ஆங்கிலேய அதிகாரி அரைபோதை மயக்கத்தில் கிழித்த கோடு (இந்தியா-பாகிஸ்தான் எல்லை), பொக்கைவாய் கிழவனின் பேச்சைக் கேட்காமல் காதி உடையும் லினன் கோட்டும் ஏற்படுத்திய பிரிவினை (யார் என்று தெரிந்ததே). காவியும் பச்சையும் கலந்து எண்ணெய் ஊற்றி எழுபது ஆண்டுகளாக அனையாமல் எரிக்கப்படும் தீ (இந்து முஸ்ஸீம் கலவரம்) இவற்றிற்கிடையே எது நடந்தாலும், வாயும் வயிறும் வேறாயினும் ரத்தமும் சதையும் ஒன்றே என மனித நேயத்துடன் வாழ்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அத்தகைய எளிய மனிதரின் மனித நேயத்தை அழகாக வெளிக்காட்டும் குறும்படம்தான் "Little Terrorists".
பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் கிரிக்கெட் பந்து தடுப்பு வேலியைத்தாண்டி இந்திய எல்லைக்குள் விழுகிறது. பத்து வயதான ஜமால்(சலீம்) அதனை எடுக்க தடுப்பு வேலியைத் தாண்டுகிறான். சாமர்த்தியமாக நுழைந்த அவன் பந்தை எடுத்துக் கொண்டு வெளிவரும் நேரத்தில் தூரத்தில் கண்காணிப்பிலிருக்கும் இந்திய வீரர்களின் கண்களில் படுகிறான். அவர்களிடமிருந்து தப்பித்து ஓடி அருகில் இருக்கும் இந்திய கிராமத்திற்குள் செல்லும் பாதையில் ஒளிகிறான். பிறகு அவ்வழியே…

குட்டிக்குட்டி சினிமா - புதிய பகுதி அறிமுகம்.

படம்
விழிப்புணர்வு, சமூக அவலங்கள், மனித உறவுகளின் போராட்டம் இவற்றை மையமாகக் கொண்ட கதைக்கரு; துள்ளியமான காட்சிகள், நேர்த்தியான ஒளிப்பதிவு, வருடும் இசை என இயல்பான தொழில்நுட்பம்; அறிமுகமில்லாத முகங்கள், அலட்டிக் கொள்ளாத நடிப்பு, குறைவான நேரம் என்ற தேர்வு; இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் குறும்படங்கள் ஒரு படைப்பாளியின் எண்ணத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாகத் திகழ்கிறது என்பது மிகையில்லை. புத்தகம் சினிமா பாடல்களைப் போன்று ரசனை மிகுந்த அத்தகைய குறும்படங்களின் தேடுதலும், தேடலில் கிடைத்த பட்டியலும் அடியேனிடம் இருக்கிறது. கிடைத்ததை எல்லாம் இந்த சிறிய கூட்டிற்குள் பத்திரப்படுத்தும் நான் அவற்றையும் சேமிக்கலாம் எனத் தோன்றியது.
"குட்டிக்குட்டி சினிமா என்ற இந்தப் புதிய பகுதியில் அடியேன் ரசித்து மெய்சிலிர்த்த குறும்படங்கள் இருக்கும், நீட்டி முழக்கி வர்ணித்து கதைசொல்லி விமர்சனம் செய்யாமல் குறும்படம் போலவே அவற்றைப் பற்றிய அறிமுகமும் இருக்கும். தொடர்ந்து இணைந்திருங்கள்.

Autumn.

படம்

The Letters - அன்னை ..

படம்
அது ஒரு மாலைப்பொழுது, கல்கத்தாவின் சேரிகள் நிறைந்த பகுதியில் நடந்து கொண்டிருந்த அவளுக்கு கால்கள் தடுமாறியது, லேசாக தலை சுற்றுவதுபோல் இருந்தது, கண்களுக்கு முன் தோன்றிய நீர்த்திரை பாதையை மறைக்க அவள் மிகவும் களைத்திருந்தாள், அதற்கு காரணம் பசி. கல்கத்தாவில் அவளுக்கென சொல்லிக் கொள்ளும் படியான சொந்த பந்தம் என யாரும் கிடையாது, வசிப்பதற்கு வீடோ கையில் பணமோ பொருளோ எதுவும் அவளிடம் இல்லை. ஆனால் கண்ணில் கருணையும் இதயத்தில் அன்பையும் எப்போதும் வைத்திருப்பாள். அதனைக் கொண்டு பலரது பசியை போக்கியிருக்கிறாள், அதனால் பலநேரம் அவள் பசித்து இருந்திருக்கிறாள். அன்றும் அப்படித்தான் நிகழ்ந்தது.
இதற்குமேல் நடக்கவே முடியாது என உணர்ந்த அவளுக்கு அருகில் தேவாலயம் ஒன்று தென்பட்டது. தமக்கு நன்கு தெரிந்த தேவாலயம் என்பதால் மெல்ல நடந்து உதவி கேட்க அதன் கதவைத் தட்டினாள். கதவிலிருந்து வெளிப்பட்ட தேவாலயத்தின் குருவை கண்டதும் அவள் முகம் மலர்ந்தது. அந்த தேவாலயத்தின் குருவிற்கும் இவளைத் தெரியும் என்பதால் அவரும் மெல்லிய புன்னகையை உதித்தார். தமது தற்போதைய நிலையை எடுத்துக் கூறி தனது பசிக்கும் தன்னுடயை அரவணைப்பில் இருக்கும் கு…

Sun Set Flight View.

படம்

Sister.

படம்

ஹெட்டி - ஒரு நாடோடியின் கதை பகுதி - 6.

படம்
(சாப்ளின் தனது முதல் காதலையும் காதலியின் நினைவுகளையும் அசைபோட்டபடி பல வருடங்களுக்குப் பிறகு அவளை மீண்டும் காணப்போவதை நினைத்து மகிழ்ச்சிக் கடலில் மிதந்து கப்பலில் லண்டனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முந்தைய பதிவின் தொடர்ச்சி).
இளம்வயது கனவுகளோடு இருந்த சாப்ளினுக்கு தினசரி பழகும் ப்ரெட் கார்னோ குழுவின் மம்மிங் பேர்ட் என்ற நாடக ஒத்திகை சலிப்புத் தட்டியது, சரி கொஞ்ச நேரம் உலாத்துவோம் என லண்டனின் புகழ்பெற்ற எம்பையர் விடுதியின் வராண்டாவில் சுற்றிக் கொண்டிருந்தார். அதே விடுதியில் மற்றொரு பகுதியிலுந்து பெண்கள் பாலே நடனமாடும் சப்தம் கேட்க சாப்ளின் அங்கு நுழைந்தார். வெள்ளை உடையில் பளிங்குபோன்ற தரையில் அவர்கள் பூப்போல மிதக்க அந்த பெண்களின் ஒய்யாரத்தை சாப்ளின் மறைவாக நின்று ரசித்துக் கொண்டிருந்தார். அவர்களின் ஒத்திகை முடிந்து ஒவ்வொருவராக கலைந்து செல்ல, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சாப்ளின் அங்கிருந்து எவ்வாறு வெயியேறுவது எனத் தெரியாமல் தவறுதலாக பெண்கள் உடைமாற்றும் அறைக்குள் சென்றார். 'யாரது இங்கு என்ன செய்கிறாய்?' என மிரட்டிய குரல் கேட்டு திரும்பிய அவரது கையில் அந்த குரலுக்கு சொந்தக்க…

பூனைக்குட்டி.

படம்

கிளிக் + (புதிய பகுதி அறிமுகம்).

படம்
விளையாட்டாக ஆரம்பித்தது மொபைல் போட்டோகிராபி பழக்கம். ஊர் சுற்றும் பறவை வாழ்க்கை கிடைத்ததால்  எங்கு சென்றாலும் எதையாவது கிளிக்கிவிடுவது வாடிக்கையாகிவிட்டது. அவ்வாறு கிளிக்குவதில் சில புகைப்படங்கள் எதார்த்தமாக அமைந்துவிடும், சிலவற்றிற்கு கொஞ்சம் மெனக்கெடல் தேவைப்படும். கிடைத்தவைகளை தேர்ந்தெடுத்து அவற்றில் சிறந்ததை எனது பக்கங்களில் இங்கு சேமித்து வைத்திருக்கிறேன். சிலவற்றை வேண்டாம் என ஒதுக்கியும் வைத்திருக்கிறேன். "வேண்டாம் என ஒதுக்கி வைப்பவைகளில்தான் உன்னதம் ஒளிந்திருக்கிறது" என்பதற்கேற்ப ஒதுக்கி வைத்திருக்கும் புகைப்படங்கள் எதையோ உணர்த்துவதுபோல் தோன்றியது. சிறு சிறு குறைகளுடன் இருக்கும் அந்த புகைப்படங்களை பட்டி டிங்கரிங் பார்த்து அதனுடன் வாசகங்களை இணைத்து வெளியிடலாம் என்ற எண்ணம் உதித்தது. அதுதான் "கிளிக் +" (Click + Add).
ஒரு சிறிய முயற்சி.