☰ உள்ளே....

Baale - An Anthem for Womanhood.மீபத்தில் ஐநா சபையே பரதத்தால் ஆடியது. மன்னிக்கவும் ஐநா சபையில் பரதம் ஆடியது சர்ச்சைக்கு உள்ளானது அனைவருக்கும் தெரிந்ததே. சமூக ஊடகமான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றில் மீமிஸ்களை உருவாக்கி அந்த மானாடிய மயிலாடிய Mind Blowing நடனத்தை கிழிகிழி என கிழித்துவிட்டார்கள் (பக்கம் பக்கமாக எழுதி கவணிக்க வைப்பவர்களை விட மீம்ஸ் கிரியேட்டர்கள் ரசிக்கவும் திரும்பிப் பார்க்கவும் வைக்கிறார்கள். இன்றைய அவசரகதி உலகத்திற்கு அத்தகைய இன்ஸ்டன்ட் Tissue Paper தகவலே தேவையெனப்படுகிறது). அந்த களோபரங்களுக்கிடையே நண்பர் ஒருவர் "Baale" என்ற அழகு பாடலை அனுப்பியிருந்தார். இரண்டொரு நிமிடங்களில் நம் தென்னகத்தின் பாரம்பரியமான நடனங்களை ரசிக்க அந்த பாடல் உதவியது.

வளர்ந்துவரும் மலையாள இசையமைப்பாளர் சுதீப் இசையமைப்பில் சுருதி நம்பூதிரி என்பவர் உலக இசைத் திருவிழா அமைப்பிற்காக (WMF) உருவாக்கிய பாடல்தான் Baale. பாலி என்றால் பெண் என பொருள். மலையாள மொழியில் சுருதி நம்பூதிரியின் வரிகளில் பெண்மையின் கீதமாக ஒலிக்கிறது இந்த பாடல். பரதநாட்டியத்திற்கு மீனாட்சி சீனிவாசன், மோகினியாட்டத்திற்கு நந்திதா பிரபு, கொடியாட்டத்திற்கு கபிலா வேனு, ஒடிசி நடனத்திற்கு ஆருஷி முகால், கதகளியாட ஹரிப்பிரியா நம்பூதிரி, மற்றும் நவீன கால நடனத்திற்கு ரீமா ராஜன் என பிரபலமான ஆறு நடனக் கலைஞர்களைக் கொண்டு ஆறு வகையான நடனங்களை மெல்லிய அசைவுகளோடு அழகாக காட்சிப்படுத்தி உள்ளனர். பாடலின் நடுவே ஒலிக்கும் சுமேஷ் பரமேஷ்வரின் கிடாரும், ரகுநாதனின் புல்லாங்குழலும் பாவ்யா லக்ஷ்மியின் வயலினும் மனதை வருடிச் செல்கிறது. மொத்தத்தில் இந்த Baale (பெண்) குப்பைகளுக்கிடையே அனைவரையும் கவர்கிறாள்.