☰ உள்ளே....

ஏழு அதிசயங்கள்.உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய் பேசும் பெண்ணே நீ எட்டாவதசிசயமே.
அழகான பாடல்வரிகள். அந்த எட்டாவது அதிசயத்திற்கு வயதாகி விட்டதால் மற்ற ஏழை மட்டும் பார்க்கலாம். அது என்ன ஏழு அதிசயங்கள் ஒரு 10, 15, 24, 36 ஏன் 2, 3 இருக்கக் கூடாதா? ஏன் அதிசயங்களை (Ancient Wonders) ஏழு என்ற எண்ணிக்கையில் வைத்திருக்கிறார்கள்.

கி.மு 400 - 300 வருடத்தில் பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்த Anti Pater, Herodotus, Cyrene போன்ற தத்துவஞானிகளே ஏழு அதிசயங்களை தொகுத்தனர். அதிலும் ஆன்டிப் பேட்டர் (Anti Pater) என்பவரே முதன்முதலாக ஏழு அதிசயங்களை பட்டியலிட்டு அப்லோடு செய்தார். பிலிப் இரண்டாம் மன்னன் மற்றும் மாவீரன் அலெக்சாண்டர் அரசவையில் அங்கம் வகித்த ஆன்டிப் பேட்டர் கிரேக்கம் என அழைக்கப்பட்ட ரோம் நாட்டின் சிறந்த மாமேதையாக விளங்கினார். தன் நாட்டின் பெருமையை போற்றும் விதமாக நாட்டைச் சுற்றியுள்ள அதிசயமான இடங்களை ஒலிம்பிக் திருவிழாவின் போது (ஒலிம்பிக் போட்டிகள் அப்போதே நடைபெற்றது) பெரிதாக பட்டியலிட்டார். கிரேக்கர்களுக்கு ஏழு என்ற என் புனிதமானதாகவும் இராசியானதாகவும் இருந்ததால் அவற்றின் எண்ணிக்கையை ஏழாக மாற்றியமைத்தார். அதுவே உலகின் முதல் ஏழு அதிசயங்களாகும். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த இடங்களை காண வேண்டும் என்ற கான்செப்டோடு அவர் தொகுத்த முதல் பட்டியல்

The great Pyramid at "Giza" - Egypt.

Hanging Gardens of "Babylon" 

The Statue of "Zeus" at Olympia - Greece.

The temple of "Artemis" at Ephesus.

The Mausoleum at "Halicarnassus".

The Colossus of Rhodes.

The Lighthouse at Alexandria - Egypt.

பிறகுவந்த காலங்களில் உலக அதிசயங்கள் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. அவரவர் தங்களுக்கு பிடித்தார்போல் மாற்றிக் கொண்டே வந்திருக்கின்றனர் இருந்தும் ஏழு என்ற எண்ணிக்கையை யாரும் சீண்டவில்லை. இதில் கவணிக்கத்தக்க விதமாக எகிப்தின் பிரமிடுகள் ஆன்டிப் பேட்டர் வாழ்ந்த காலத்திலிருந்து இன்று வரை எந்த மாற்றமில்லாமல் அந்த பட்டியலில் அதே முதல் இடத்தில் தொடர்வது அதிசயத்திலும் அதிசயமே.