இடுகைகள்

March, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
☰ உள்ளே....

அரச பாரம்.

படம்
தொன்னூற்று இரண்டு நாட்கள் கண்ணாமூச்சி விளையாட்டு, விளையாட்டின் முடிவில் ஒரு மரணம், அதனைத் தொடர்ந்து யார் நாற்காலியில் அமர்வது என்ற போராட்டம், இதற்கிடையில் அவர் வருவார், இவர் வருவார், அதுதான் நடக்கும், இதுதான் நடக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கையில் ஏதேதோ நடந்து, எவரோ ஒருவர் அரியணையில் அமர்ந்து, என்னமோ போடா ஆட்சி தற்போது நடந்து கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசாட்சி நடத்துபவர் தன் ஆட்சிக் காலத்தில் இறந்துவிட்டால் அவருக்கு பதிலாக வேறொருவர் அரியணையில் அமரும் போது ஏற்படும் இந்த குழப்பங்கள் நமக்கு புதிதாக இருந்தாலும் சங்க காலத்திலிருந்து நடந்து வந்திருக்கிறது. மன்னன் இறந்துவிட்டால் அவனது வாரிசுகளில் மூத்தவனா, இளையவனா அல்லது ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட, மூன்றுவிட்ட மகன்களில் (அரசன் என்றால் சொந்தப்புரம் அந்தப்புரம் என இருக்குமே) யார்? ஆட்சிக்கு வந்தால் நாடு செழிக்கும் என்ற கவலை அப்போது அரச பாரமாக இருந்து வந்தது.
இந்த அரச பாரம் என்பதைப் பற்றிய கவலையும் சந்தேகமும் சங்க காலத்தில் வாழ்ந்த சோழ மன்னன் "நலங்கிள்ளி" என்பவனுக்கு வந்தது. உடனே தன் நாட்டில் உள்ள அறிஞர்களை கூப்பிட்டு இ…

Wallpaper.

படம்

10 Information (பயாஸ்கோப்)

படம்
10 Information must read before purchase of Food Products.

Shiny Green.

படம்

Baale - An Anthem for Womanhood.

படம்
மீபத்தில் ஐநா சபையே பரதத்தால் ஆடியது. மன்னிக்கவும் ஐநா சபையில் பரதம் ஆடியது சர்ச்சைக்கு உள்ளானது அனைவருக்கும் தெரிந்ததே. சமூக ஊடகமான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றில் மீமிஸ்களை உருவாக்கி அந்த மானாடிய மயிலாடிய Mind Blowing நடனத்தை கிழிகிழி என கிழித்துவிட்டார்கள் (பக்கம் பக்கமாக எழுதி கவணிக்க வைப்பவர்களை விட மீம்ஸ் கிரியேட்டர்கள் ரசிக்கவும் திரும்பிப் பார்க்கவும் வைக்கிறார்கள். இன்றைய அவசரகதி உலகத்திற்கு அத்தகைய இன்ஸ்டன்ட் Tissue Paper தகவலே தேவையெனப்படுகிறது). அந்த களோபரங்களுக்கிடையே நண்பர் ஒருவர் "Baale" என்ற அழகு பாடலை அனுப்பியிருந்தார். இரண்டொரு நிமிடங்களில் நம் தென்னகத்தின் பாரம்பரியமான நடனங்களை ரசிக்க அந்த பாடல் உதவியது.
வளர்ந்துவரும் மலையாள இசையமைப்பாளர் சுதீப் இசையமைப்பில் சுருதி நம்பூதிரி என்பவர் உலக இசைத் திருவிழா அமைப்பிற்காக (WMF) உருவாக்கிய பாடல்தான் Baale. பாலி என்றால் பெண் என பொருள். மலையாள மொழியில் சுருதி நம்பூதிரியின் வரிகளில் பெண்மையின் கீதமாக ஒலிக்கிறது இந்த பாடல். பரதநாட்டியத்திற்கு மீனாட்சி சீனிவாசன், மோகினியாட்டத்திற்கு நந்திதா பிரபு, கொடியாட்…

The Colour full (Mobile Photography) .

படம்

உலாத்துவோம்.

படம்

மிர்தாதின் புத்தகம்.

படம்
அதிகாலையில் ஆல் இந்தியா ரேடியோவில் தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் சொன்ன குட்டிக்குட்டி கதைகளை அப்படியே சுட்டு; ஆங்காங்கே பொறுக்கிய நறுக்கிய தத்துவங்களை சக்கையாகப் பிழிந்து; கதவைத் திற, சன்னலை சாத்து, மொட்டைமாடிக்கு வா என கிளுகிளுப்பான ஒரு தலைப்பை வைத்து; காவி உடை, கழுத்துவரை நீண்ட தாடி, ருத்ராட்சம், கமண்டலம் இவற்றோடு; புலி, மான், கரடி போன்ற அனிமல் பிளானட் தோலில் செய்யப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்து; ஹைட்டெக்கான இந்த உலகையே தாம்தான் காப்பது போல் கை காலை விரித்து அண்ணார்ந்து பார்த்து ஒரு ரொமான்டிக் லுக்குவிட்டு அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்து; பூஜ்ஜியஸ்ரீ, ராஜ்யஸ்ரீ, நித்யஸ்ரீ, தத்குரு, -------னந்தா என எதாவது ஒரு பெயரில்; யாரவது ஒரு எழுத்தாளர் அடிமையை வைத்து எழுதும்- எழுதிய ஆன்மீகம், தத்துவம், சித்தாந்தம், வாழ்க்கை ஞானம் இவற்றை உள்ளடக்கிய புத்தகங்களை அடியேன் சீண்டிப் பார்த்ததில்லை.
சில வாரப்பத்திரிக்கைகளைத் திறந்தால் ஏதாவது ஒரு நடிகையின் உ.பி, ம.பி, இ.பி தெரிகிறதா என பார்க்கும் வயதுதான் ஆகிறது என்பதாலும், இன்னும் கொஞ்சம் முடிகள் நரைக்கட்டும் பிறகு ஆன்மீக தத்துவ ஞானங்களை ஒரு கை பார்த்து…

Home Made (Mobile Photography) .

படம்

மங்கல இசை.

படம்
ஒரு திருமண நிகழ்சிக்காக வேலூர் சென்றிருந்தேன். சட்டையில் பொத்தான்களைப் போடாமல் இளைய தளபதி ஒருபக்கமும் டிப்டாப்பாக கோட்சூட் கூலிங்கிளாஸ் சகிதம் தல மறுபக்கமும் பிரம்மாண்ட கட்டவுட்டுகளாய் வாசலில் நின்று வரவேற்றனர். திருமணத்தை அழகாக்க இருவீட்டாரும் இணைந்து இன்னிசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்ட தனி மேடையில் அந்த இன்னிசை நிகழ்ச்சியில் ஒருவர் "கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே என்பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்" என பாடிக் கொண்டிருந்ததை கேட்டபடி உள்ளே சென்று அமர்ந்தேன்.
ஒவ்வொரு திருமண விழாக்களில் கலந்துகொள்ளும்போதும் குறிப்பாக இரண்டு விஷயங்களை கவணிப்பேன். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மதத்தவரும் ஒவ்வொரு பிரிவினரும் திருமணத்தை அவர்களின் சாஸ்திர சம்பிரதாயப்படி எப்படி நடத்துகிறார்கள் என்பதையும் திருமணப் பெண்ணின் தோழிகளையும் (ஹி.ஹீ) தீர்க்கமாக கவணிப்பேன். ஆனால் அன்று அதை மறந்து இன்னிசை நிகழ்ச்சியை கவணித்துக் கொண்டிருந்தேன் (அதற்கு காரணம் அந்த பாடல்). கிராப்பு கோழியைப்போல் தலையை வைத்திருந்த ஒருவன் மேடைக்குச் சென்று பாடுபவரின் காதில் ஏதோ கிசுகிசுத்தான் கல்…

பருவமழை.

படம்

Hugging.

படம்

லண்டன் பயணமும் முதல் காதலும் - ஒரு நாடோடியின் கதை பகுதி - 5.

படம்
பறவைபோல் உலகமெங்கும் சுற்றினாலும் தன் சொந்த ஊருக்கு நினைவுகளை அசைபோட்டபடியே திரும்புவது சுகமான பயணமாக அமையும். அப்படியொரு பயணம் 1921 -ஆம் ஆண்டு சாப்ளினுக்கு கிடைத்தது. தந்தையை இழந்து, தாயை மனநல காப்பகத்தில் அனுமதித்து, பசியோடும் வறுமையோடும் நாடோடியாக தெருக்களில் சுற்றித் திரிந்து, பேப்பர் போடுபவனாக பூ விற்பவனாக ஹோட்டல்களில் எடுபிடிவேலை செய்பவனாக வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு, கிடைத்த சந்தர்ப்பத்தில் அழுகையை மறைத்து அரிதாரம் பூசி, நாடகக்குழுவில் பத்தோடு பதினொன்னாவது ஆளாக ஒட்டிக்கொண்டு அமேரிக்கா வந்து திரைப்படங்களில் நடித்து பேரும் புகழும் சம்பாதித்து பத்து வருடங்கள் கழிந்த பின் தன் சொந்த நாடான லண்டன் புறப்பட அவர் தயாராகிக் கொண்டிருந்தார்.
இடைப்பட்ட இந்த பத்து வருடங்களில் சாப்ளின் புகழின் உச்சியை அடைந்திருந்தார். உச்சி என்றால் சிகரத்தின் விளிம்பு. அமேரிக்கா மட்டுமல்லாமல் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகன் அவர், அரண்மனை போன்ற வீடு, தினம் ஒரு உடை, மேசை வழியும் சாப்பாடு, வாய் கொப்பளிக்க உயர்வகை மது, வகைவகையான கார்கள், கூப்பிட்டவுடன் ஓடிவரும் வேலையாட்கள், கட்டில் சுகத்திற்கு கணக்கில்லாத பெண…

Mashup with Vidya Vox.

படம்
சை பிரியர்களுக்கு மிகவும் பரிச்சியமான வார்த்தை Mashup. இந்த Mashup Song என்றால் என்ன?.
ஒரு கப் நறுக்கிய வெங்காயம், இரண்டு தக்காளி, கவுச்சி பிரியரென்றால் இரண்டு முட்டை, நான்கைந்து பச்சை மிளகாய், மதியம் வைத்த குருமா, கொஞ்சம் கருவேப்பிலை, அதனுடன் கொத்தமல்லி, சிறிதளவு மிளகுத்தூள் இவற்றோடு ஏற்கனவே சுட்டு வைத்த புரோட்டாவை பிய்த்துப்போட்டு தாளத்தோடு தோசைக் கல்லில் கொத்தினால் சுவையான கொத்து பரோட்டா ரெடி என்பதற்கேற்ப பிரபலமான பல மொழிப் பாடல்கள், அல்லது பிரபலமானவர்களின் பாடல் தொகுப்புகள், கொஞ்சம் ராகம், கொஞ்சம் தாளம், கொஞ்சம் பல்லவி இவற்றோடு ஸ்ருதிஹாசன் சேர்ந்து தமக்கு தெரிந்த வாத்தியங்களின் கலவையில் பாடல்களை கொத்துவதே Mashup Song எனப்படும். யூ-டியூபில் தேடினால் இவ்வாறான பாடல்கள் எக்கச்சக்கம் கிடைக்கும். சில நேரங்களில் இசைக்கான தனி சேனல்களிலும் அவற்றை தரிசிக்கலாம்.
வேடிக்கையாகச் சொன்னாலும் அவ்வாறான பாடல்களில் சில ரசிக்கத் தக்கவையாகவும் சுவையானதாகவும் இருக்கிறது என்பதே உண்மை. அந்த வகையில் அவ்வாறான பாடல்களை உருவாக்குபவர்களில் கொஞ்சம் கவணிக்க வைப்பவர் "வித்யா ஐயர்" (Vidya Iyer). அமேரிக…

இணை பிரபஞ்சம்...

படம்
பருவநிலை மாற்றம் இயற்கை சீற்றம் அவ்வபோது பயமுறுத்தும் விண்கற்கள் இவற்றை கவணிக்கும்போது இந்த உலகம் அழியப்போகிறதா? அவசர அவசரமாக உலக விஞ்ஞானிகள் அமேரிக்காவில் கூடினர். உலகம் அழிந்தால் என்ன செய்வதென விவாதித்தனர். ஆளுக்கொரு கதையும் அதற்கு தீர்வும் கூற கடைசியில் நியூயார்க் சிட்டி யூனிவர்சிட்டியில் பணிபுரியும் "மிஷியோ காக்கூ (Michio Kaku)" என்பவருக்கு பேசும் வாய்ப்பு கிடைத்தது. "இந்த உலகம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் விரிவடைந்துக் கொண்டே வருகிறது அதனால் நம் பிரபஞ்சமே அழிந்துவிடும் அதற்குள் நாம் அடுத்த பிரபஞ்சத்திற்கு சென்றுவிடலாம்" என படு இயல்பாக பென்சிலால் காது குடைந்தபடி மிஷியோ காக்கூ பேசி முடித்தார். மேலும் தனது பிரம்மிக்க வைக்கும் கண்டுபிடிப்பையும் அப்போது போட்டு உடைத்தார். பார்ப்பதற்கு ஐன்ஸ்டீனின் சைனா தயாரிப்புபோல் இருக்கும் மிஷியோ காக்கூ சாதாரணமானவர் இல்லை ஐன்ஸ்டீன் முடிக்காமல் விட்டுச்சென்ற ஆராய்ச்சிகளை இன்று தொடர்பவர் அவரின் கண்டுபிடிப்புதான் "இணை பிரபஞ்சம்" (Parallel Universe).
முதலில் பிரபஞ்சம் என்றால் என்ன? பார்த்துவிடலாம்.
கடவுள் இந்த உலக…

Mistakes are better than Perfection ..(Mobile Photography) .

படம்
Mistakes are better than Perfection .. (My Perfection and Mistake of Mobile Photo shoot).

ஜுராசிக் பார்க், தி மம்மி, கிங்காங் (டிரைலர் டைம்).

படம்
அதிரடியாக நுழைந்து, சந்தையில் மாமுல் வாங்கும் லுங்கி கட்டிய ரவுடிகளை துவைத்தெடுத்து, அங்கிருக்கும் சட்டி பானை அண்டா குண்டா தட்டுமுட்டுச் சாமான்களை எல்லாம் உடைத்து சந்தையையே நாசமாக்கி (அதற்கு பதிலாக மாமூலே கொடுத்திருக்கலாம்), வில்லனை பகைத்துக்கொண்டு, மாடர்ன்டிரஸ் போட்டிருக்கும் அவர் மகளையே டாவடித்து, கட்டிப் புரண்டு முத்தம் கொடுத்து மலையைச் சுற்றி டூயட் பாடி, கடத்திக்கொண்டுபோன அம்மாவையும் தங்கச்சியையும் காப்பாற்றி, வில்லனை பழிவாங்கி, கடைசியில் முதலிரவு அறையில் விளக்கை அணைத்து சுபம் போடும் வழக்கமான தொன்னூறுகளின் சினிமாவிற்கு மத்தியில் ஹாலிவுட் திரைப்படங்கள் உச்சரிப்பு பிழையின்றி தமிழில் அழகாக பேசத் தொடங்கின. கற்பனைக்கெட்டாத கதைகள், பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், ஆச்சரியமூட்டும் கிராபிக்ஸ், அதிசயமூட்டும் கதாபாத்திரங்கள், வியக்க வைக்கும் சண்டைக் காட்சிகள் என அவ்வாறு வெளிவந்த திரைப்படங்களில் "ஜுராசிக் பார்க், தி மம்மி, கிங்காங்" என்ற மூன்றையும் அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது.
ஜுராசிக் பார்க் (Jurassic Park).

60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமி முழுவதும் வாழ்…

புசித்து ருசி.

படம்

The Red Rose (Mobile Photography) .

படம்

ஏழு அதிசயங்கள்.

படம்
உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய் பேசும் பெண்ணே நீ எட்டாவதசிசயமே. அழகான பாடல்வரிகள். அந்த எட்டாவது அதிசயத்திற்கு வயதாகி விட்டதால் மற்ற ஏழை மட்டும் பார்க்கலாம். அது என்ன ஏழு அதிசயங்கள் ஒரு 10, 15, 24, 36 ஏன் 2, 3 இருக்கக் கூடாதா? ஏன் அதிசயங்களை (Ancient Wonders) ஏழு என்ற எண்ணிக்கையில் வைத்திருக்கிறார்கள்.

கி.மு 400 - 300 வருடத்தில் பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்த Anti Pater, Herodotus, Cyrene போன்ற தத்துவஞானிகளே ஏழு அதிசயங்களை தொகுத்தனர். அதிலும் ஆன்டிப் பேட்டர் (Anti Pater) என்பவரே முதன்முதலாக ஏழு அதிசயங்களை பட்டியலிட்டு அப்லோடு செய்தார். பிலிப் இரண்டாம் மன்னன் மற்றும் மாவீரன் அலெக்சாண்டர் அரசவையில் அங்கம் வகித்த ஆன்டிப் பேட்டர் கிரேக்கம் என அழைக்கப்பட்ட ரோம் நாட்டின் சிறந்த மாமேதையாக விளங்கினார். தன் நாட்டின் பெருமையை போற்றும் விதமாக நாட்டைச் சுற்றியுள்ள அதிசயமான இடங்களை ஒலிம்பிக் திருவிழாவின் போது (ஒலிம்பிக் போட்டிகள் அப்போதே நடைபெற்றது) பெரிதாக பட்டியலிட்டார். கிரேக்கர்களுக்கு ஏழு என்ற என் புனிதமானதாகவும் இராசியானதாகவும் இருந்ததால் அவற்றின் எண்ணிக்கையை ஏழாக மாற்றியமைத்தார். அதுவே உலகின் …