256 லைக் 112 ஆழ்ந்த அனுதாபங்கள்.



தோற்றம்
என்ற இடத்தில்
நான் பிறந்த அதே தேதி.
மறைவில்
இன்றைய நாள்.
கண்ணீர் அஞ்சலி என
எழுதப்பட்ட வாசகத்தின்மேல்
கிடத்தப்பட்டிருக்கும் சவத்தின் படத்தை
சற்று உற்று நோக்கினேன்.
அது நான்தான்,
நானேதான்.
யாரோ ஒருவர்
நான் இறந்த செய்தியை
எனக்கான அஞ்சலியாக
என்னிடமே அனுப்பி
என்னுடனே பகிர்ந்திருந்தார்.
யார் அவர்?
எதற்காக செய்தார்?
அவருக்கு பின்னால்?
அதற்கு பின்னால்?
லாபம் என்ன?
உண்மையா?
பொய்யா?
நான் சவமா?
யோகிக்க நேரமின்றி
எனக்குத் தெரிந்தவர்களுக்கு
நானும் அதை பகிர

256 லைக்
112 ஆழ்ந்த அனுதாபங்கள்.