☰ உள்ளே....

Back Street Boy.டிரைவர் அண்ணாமலை அண்ணன், மாமா வீட்டின் ஆம்பாசிடர் கார், Pioneer KP707 ஸ்டிரியோ செட்,  சிங்கப்பூரிலிருந்து வந்த TDK60 கேசட்டுகள் இவைகள்தான் அடியேனின் ஆங்கில பாடல்களை கேட்கும் ஆர்வத்திற்கு அடிப்படையாக இருந்தது. ராஜாவின் ரசிகனான அண்ணாமலை அண்ணன் ஒரு டஜனுக்கும் மேலான கேசட்டுகளை எப்பொழுதும் காரில் வைத்திருப்பார். MJ, மடோனா பிரிட்னி தொடங்கி புதிய வரவுகளின் ஆங்கில ஆல்பமும் அந்த தொகுப்பில் இருக்கும். அவருடனான சிறுவயது பயணங்களில் அந்த தொகுப்பிலிருந்து "Backstreet boys" ஆல்பத்தையும் அதில் இடம்பெற்ற "You're the one for me" (Get Down) பாடலையும் முதன்முதலாக கேட்ட நினைவு இன்றும் இருக்கிறது.

அமேரிக்காவின் ஒர்லாண்டோ மாகானத்தில் வசித்துவந்த A.J. McLean மற்றும் Howie D என்ற இரண்டு பள்ளித்தோழர்கள் இணைந்து உள்ளூர் பள்ளிகளிலும் திருவிழாக்களிலும் பாடிவந்தனர். ஒரு கலைநிகழ்ச்சியில் Nice Carter என்பவரை சந்திக்க அவர்மூலம் டிஸ்னியில் வேலைசெய்த Kevin Richerson அவரது உறவினர் Brain Littrell என்பவர்களின் நட்பும் இவர்களுக்கு கிடைத்தது. இந்த ஐவரும் இணைந்து 1993-ல் Back Street Boys (BSB) என்ற இசைக்குழுவைத் தொடங்கினர். போட்டிகள், நட்சத்திர ஹோட்டல்கள், கல்லூரிகளில் வெற்றிகரமாக பாடிக்கொண்டிருந்த இவர்கள் ஒர்லாண்டோ மாகானத்தில் பெயர்சொல்லும் அளவிற்கும் புகழ்பெற்றனர். 1996 ஆம் ஆண்டு Back Street Boys என்ற தமது குழுவின் பெயரிலே உலகலாவிய முதல் ஆல்பத்தை வெளியிட்டனர். ஒருவர் பாடலைத் தொடங்க மற்றவர் பிறகு வரிசையாக தொடர இறுதியில் மொத்தமாக சேர்ந்து முடிக்க என இந்த ஐவரின் பாடல்கள் 90-களின் காலகட்டத்தில் பாப் உலகின் ரசிகர்களுக்கு புதுமையாக திகழ்ந்தது. அதுவே அனைவரையும் கவணிக்க வைத்தது. Back Street Boys ஆல்பம் வெற்றிக்குப்பின் 1997-ல் வெளிவந்த Back Street Back ஆல்பமும் பெருவாரியாக விற்று தீர்ந்தது. 1999-ல் Millennium ஆல்பமும் அதன் "Show Me the Meaning of Beeing lonly" பாடலும் ஆவர்களை புகழின் உச்சிக்கு கொண்டு சேர்த்தது. 2000 ஆண்டில் Black & Blue, 2005-ல் Never Gone, 2007-ல் Unbreakable, 2009-ல் This is Urs, 2013-ல் In a world Like this போன்ற குறைந்த ஆல்பங்களையே வெளியிட்டிருந்தாலும் தனக்கென ஒரு ரசிகர்களை இந்தக்குழு தக்க வைத்திருக்கிறது. 2006 ஆம் ஆண்டு இந்த குழுவிலிருந்து Kavin Richerdson கருத்து வேறுபாடு காரணமாக விளக ஐவர் கொண்ட குழு நான்காக மாறியது. 2013-ல் Richerdson மீண்டும் இணைய தற்போது 90 -களின் நினைவுகளை அசைபோட்டபடி உலகமெங்கும் பல இசை நிகழ்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறது இந்த Back Street Boys குழு. அதே அந்த 90 -களின் நினைவுகளோடு BSB பாடல்களில் சிலவற்றை நானும் கொஞ்சம் இங்கு அசைபோடுகிறேன்.

1. Get down (You're the one for me) - album Backstreet Boys.

2. Everbody - album Backstreet Back.

3. Show me the meaning of being lonely - album Millennium.

4. We've got it going on - album Backstreet Boys.

5. I'll never break your heart - album Backstreet Boys.

6. The Call - album Black & Blue.

7. This is end 2013 - album In a world like this.