உண்மையும்,நேர்மையும்
கடல் எல்லை (சில தகவல்கள்).சோமாலியாவிற்கு அடுத்தபடியாக கடல் பற்றிய தினசரி செய்தி தமிழக மீனவர்கள் பற்றிய செய்தியாகத்தான் இருக்கும். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், கைது, துப்பாக்கி சூடு என தினமும் அவர்களின் வாழ்க்கை கருவாட்டிற்கு காயும் மீனைப்போல கழிந்துக் கொண்டிருக்கிறது. எல்லை தாண்டினார்கள் அதனால்தான் பிடித்தோம், சுட்டோம் என்று இலங்கை தரப்பில் ஒவ்வொரு முறையும் பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இங்கிருக்கும் ஆட்சியாளர்களோ கடிதம் எழுதியே காலத்தை ஓட்டுகிறார்கள் (முதல்ல அந்த லெட்டர் பேடை ஒழிச்சு வைக்கனும்). இதுவரை எழுதிய கடிதம் எல்லாம் டில்லியில் இருக்கும் நாயர் டீ கடைக்கு வடை மடிக்க மட்டுமே பயன்பட்டிருக்கிறது. இந்த பிரச்சனைக்கு அடிப்படையாக பேசப்படுவது "கடல் எல்லை" என்னும் விசயம்தான். இந்த கடலில் ஏது எல்லை? அப்படி எதாவது இருக்கிறதா? அப்படி இருந்தால், எதை வைத்து கடல் எல்லையை வரையறை செய்கிறார்கள்?.

Hard Brush Stroke (Mobile Art).

Dinky Duck (சுவை).மிக்கி மவுஸ், டொனால்ட் டக், டாம் & ஜெர்ரி, ரோடு ரன்னர், பாப்பாய் வரிசையில் அடுக்கப்பட்டிருந்த கார்டூன் டிவிடி தொகுப்புகளை மேய்ந்து கொண்டிருந்தபோது ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த டிங்கியை பார்த்ததும் ஒரு இருபது வயதை குறைத்துக் கொண்டு ஓடிச்சென்று தூக்கிக் கொண்டேன். அடியேனின் மனம் கவர்ந்த கார்டூன் கதாபாத்திரங்களுள் டிங்கியும் (Dinky) ஒன்று. குறிப்பாக அதன் குரலின் ரசிகன் நான்.

மடந்தை (என் தமிழ்).அந்த அழகான ஜோடிக்கு (தலைவன் - தலைவி) புதிதாக திருமணம் முடிந்திருந்தது. சின்னஞ்சிறுசுகள் அப்படி இப்படித்தான் இருப்பார்கள் என்பதற்கேற்ப அப்படி இப்படித்தான் இருந்தார்கள். கோவில் குளங்களுக்கு செல்வது, ஷாப்பிங் செய்வது, இயற்கையை ரசிப்பது, நண்பர்கள் மற்றும் சொந்தபந்தங்களின் அழைப்பை ஏற்று விருந்தில் கலந்துகொள்வது, ஒரு இளநீர் இரண்டு ஸ்ட்ரா, ஒரு ஐஸ்கிரீம் ஒரு கரண்டி, ஒரு கடலை இரண்டு வாய் என காதல் பறவையாக சுற்றித் திரிந்தனர். என்னதான் பகலில் ஊர் சுற்றினாலும் இரவானதும் கூட்டில் அடைந்து ஈருடல் ஓருயிராக கலந்தனர்.

"பெற்றோர்கள் பார்த்து மணமுடிக்கும் திருமணத்திற்கு பின்பு வரும் காதல் அலாதியானது இன்னார்க்கு இன்னார் என எழுதிவைத்ததின் படி
உனக்கு நான் எனக்கு நீ என போடப்பட்ட முடிச்சினை பற்றிக்கொண்டு வாழ்க்கை பின்னலைத் தொடங்கும் தருணம் அது".

Chotodar Chobi (சினிமா).இஞ்சி மரப்பா, புளிப்பு மிட்டாய், பாப்பின்ஸ் என கத்திக்கொண்டே ஒவ்வொரு பேருந்தாக ஏறி தன் பலகுரல் வித்தையால் குழந்தைகளை மகிழ்வித்து இருந்ததை விற்றுவிட்டு இறங்கிச் செல்லும் அவரை, சிறுவயதில் எங்கள் ஊர் பேருந்து நிலையத்தில் பார்ப்பதென்றால் குதுகலமாக இருக்கும். தோற்றம், பலகுரல் மற்றும் செய்யும் சேட்டை என குழந்தைத்தனமான செயல்களுக்காக அவரிடம் மிட்டாய்களை வாங்கிய பயணச் சிறுவன்களில் நானும் ஒருவன்.

Raunaq (ரஹ்மான் ஆல்பம் பாடல்கள்).பஞ்சாபில் பிறந்து சட்டம் பயின்று இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராக இணைந்து வழக்கரிஞர், மனித உரிமைகள் ஆணையத் தலைவர், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர், ராஜ்யசபா எம் பி, சட்ட ஆலோசகர், என இந்திய அரசியல்வாதிகளில் குறிப்பிடத் தகுந்தவராக விளங்குபவர் கபில் சிபல் (Kapil Sibal) பொது வாழ்க்கையில் பன்முகம் கொண்டவரான அவர் தனிப்பட்ட முறையில் சிறந்த எழுத்தாளர் மற்றும் மிகச் சிறந்த கவிஞரும் கூட.  அவரது I Witness, My World Within என்ற புத்தகங்களில் இருந்த கவிதைகளை வாசித்த ரஹ்மான் அதில் லயித்து அதற்கு இசைவடிவம் கொடுக்க நினைத்தார். காதல், பெண்மை, சோகம், தாலாட்டு, என பல உணர்சிகளை வெளிப்படுத்தும் அவரது வரிகளுக்கு உயிர்கொடுத்து  "Raunaq" என்ற ஆல்பத்தை 2014-ல் வெளியிட்டார்.

I am Nujood ' Age 10 and Divorced ' (புத்தகம்)..அவசர அவசரமாக காரிலிருந்து இறங்கிய அவள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஏமன் நாட்டின் நீதிமன்ற வளாகத்திலிருந்த ஒரு பகுதியில் நுழைந்தாள். நீதிபதி எங்கே? நீதிபதி எங்கே? என அரபுமொழியில் கத்திக்கொண்டே நுழைந்த அவளை சிலர் அதிசயமாக பார்த்தனர், ஒருசிலர் தடுத்து நிறுத்தினர். ஆனாலும் அவள் எதையும் பொருட்படுத்தாது திரும்பத் திரும்ப நீதிபதி எங்கே? என கேட்டுக் கொண்டிருந்தாள். 'இங்கு இருப்பவர்கள் அனைவருமே நீதிபதிகள்தான், இது நீதிபதிகள் தங்கும் அறை உனக்கு என்ன வேண்டும்? சொல்' என ஒருவர் கேட்க சற்று ஆசுவாசமான அவள் மூச்சை இழுத்துவிட்டு 'எனக்கு விவாகரத்து வேண்டும் தாருங்கள்' என்றாள். அதனைக்கேட்ட அங்கிருந்தவர்கள் திகைத்துப் போனார்கள் அந்த இடம் முழுவதும் சற்று நிசப்தமானது.
பெண்களின் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகள் நிறைந்த ஏமன் நாட்டில் விவாகரத்து பெறுவதற்கு நீதிமன்றம் வருவது அரிதானது. அதற்கு அந்த நாட்டின் சட்டத்திட்டங்களும் மதக் கொள்கையும் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. இருந்தும் துணிச்சலாக ஒரு பெண் நீதிமன்றம் ஏறியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதிலும் அந்தப் பெண்ணிற்கு 10 வயதே நிரம்பியிருந்தது.

Back Street Boys (பாடல்கள்) .டிரைவர் அண்ணாமலை அண்ணன், மாமா வீட்டின் ஆம்பாசிடர் கார், Pioneer KP707 ஸ்டிரியோ செட்,  சிங்கப்பூரிலிருந்து வந்த TDK60 கேசட்டுகள் இவைகள்தான் அடியேனின் ஆங்கில பாடல்களை கேட்கும் ஆர்வத்திற்கு அடிப்படையாக இருந்தது. ராஜாவின் ரசிகனான அண்ணாமலை அண்ணன் ஒரு டஜனுக்கும் மேலான கேசட்டுகளை எப்பொழுதும் காரில் வைத்திருப்பார். MJ, மடோனா பிரிட்னி தொடங்கி புதிய வரவுகளின் ஆங்கில ஆல்பமும் அந்த தொகுப்பில் இருக்கும். அவருடனான சிறுவயது பயணங்களில் அந்த தொகுப்பிலிருந்து "Backstreet boys" ஆல்பத்தையும் அதில் இடம்பெற்ற "You're the one for me" (Get Down) பாடலையும் முதன்முதலாக கேட்ட நினைவு இன்றும் இருக்கிறது.

மடலேறுதல் (என் தமிழ்) .காளையை அடக்கி கல்லைத் தூக்கினால்தான் என் மகளை உனக்கு கட்டித் தருவேன் என கண்டிஷன் போடும் அப்பாக்களுக்கு மத்தியில், டைனோசாரை அடக்கினால்கூட உனக்கு என் பெண்ணை கட்டித் தரமாட்டேன் என முரண்டுபிடித்த தளபதி திரைப்படத்தில் வரும் சாருஹாசன் அப்பாக்கள் சங்க காலத்திலும் வாழ்ந்திருக்கிறார்கள். ஏற்கனவே செய்கூலி சேதாரம் எல்லாம் போக இரண்டு இதயங்களை எக்ஸ்சேஞ் செய்தபின் மாட்டேன் என முரண்டுபிடிக்கும் அந்த அப்பாவையும் ஊரில் உள்ள மற்றவர்களையும் சம்மதிக்க வைத்து ஒரு ஆண் தன் காதலியை கைப்பிடிக்க அந்த காலத்தில் செய்யத்துணிந்த காரியம்தான் மடலேறுதல். அதனையும் தவிர்த்து இதெல்லாம் சரிபட்டுவராது நான் எங்க அப்பா சொன்னவரைத்தான் கட்டிக்கொள்வேன் என அடம்பிடிக்கும் பெண்களை அடிபணிய வைக்கவும் இந்த மடலேறுதல் என்ற அஸ்திரத்தை ஆண்மகன் கையில் எடுத்தான்.  அது என்ன மடலேறுதல்?

பஞ்ச தந்திரம் (குட்டித் தகவல்).பஞ்ச தந்திரம் என்றதும் நமக்கெல்லாம் இரண்டு விஷயங்கள் சட்டென நினைவுக்கு வரும். காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது என விலங்குகளை மையமாக வைத்து சிறுவயதில் கேட்டு ரசித்த வாழ்க்கைக்கு பயனுள்ள பஞ்ச தந்திரகதைகள் மற்றும் கமலின் பஞ்ச தந்திரம் என்ற நகைக்சுவை திரைப்படம். இந்த இரண்டும் குதுகலமானவையே.