☰ உள்ளே....

ஏனோ வானிலை மாறுதே - Jammin (Yaara).ஏனோ வானிலை மாறுதே
மணித்துளி போகுதே
மார்பின் வேகம் கூடுதே..
....
....
எழுதும் வலிகள்
எழுதா மொழிகள்.

- தற்போது அடியேன் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் இது (ரஹ்மான் ஸ்பெஷல்). ரஹ்மான் இசையமைக்கும் திரைப்பட பாடல்களின் தொகுப்பிற்கு ஒரு குணமுண்டு அதாவது இசைவெளியீட்டிற்கு பிறகு அந்த தொகுப்பில் இடம்பெறும் ஒரு பாடல் பிரபலமாகும். திரைப்படம் வெளிவந்த பிறகு ஒரு பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்கும். இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு அந்த தொகுப்பிலிருக்கும் மற்றொரு பாடலை கேட்கும்போது அடடா! மற்ற பாடல்களைவிட இதில் ஏதோ இருக்கிறதே? எனத் தோன்றும். அதுதான் ரஹ்மானின் மாயாஜாலம்.

சமீபத்தில் வெளிவந்த 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் இத்தகையதே. குறிப்பாக 'ஏனோ வானிலை மாறுதே' பாடலை ஆரம்பத்தில் கேட்டபோது சாதாரணமாகத் தெரிந்தது. போகப்போக ஏதோ! மெஸ்மரிசம் செய்வதுபோல் தோன்றியது. அதற்குத் தகுந்தார்போல் தற்போது அந்தப் பாடலை ரஹ்மான் தனியே 'Jammin - Yaara' என ஹிந்தி பதிப்பாக வெளியிட்டிருக்கிறார். அவருடன் Saanam, Shraddha Sharma, Siddharth Slathia, Arjun Kanungo, Jonita Gandhi, Sanah Moidutty, Raaga Trippin, Maati Baani என ஒரு டஜன் யு- டியூப் புகழ் பாடகர்களை புது முயற்சியாக பாட வைத்து அழகு பார்த்திருக்கிறார். "To Change of the World" என அதனை காட்சிப்படுத்திய விதமும் ரசிக்க வைக்கிறது. தமிழில் கேட்டு மயங்கிய ஏனோ வானிலை மாறுதே பாடலுக்கு இது கூடுதல் பொழிவைத் தருகிறது. இணையத்தில் எதார்த்தமாக பொறுக்கிக் கொண்டிருந்தபோது கிடைத்த அந்த ஹிந்தி பாடல் தங்களின் ரசனைக்காகவும்.