சாரதா கபூர் (பாடல்கள்) .புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரான இவரது அப்பா சக்தி கபூர் ஹிந்தி சினிமாவின் மூன்று தலைமுறை ஹீரோக்களுடன் சுமார் 700 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். பற்றாக்குறைக்கு இவரின் சொந்த பந்தங்களான கபூர் குடும்பமே பாலிவுட்டில் கோலோச்சியிருக்கிறது. இருந்தும், என்பது மற்றும் தொன்னூறுகளின் சினிமா நடிகர் நடிகைகளின் வாரிசுகள் எல்லாம் வரிசையாக திரைப்படங்களில் நடிக்க வர, இவர் மட்டும் நடிப்பதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என தான் உண்டு தன் சைக்காலஜி படிப்பு உண்டு என ஆரம்ப காலகட்டத்தில் ஒதுங்கியிருந்தார். ஆனால் இன்று 'இந்த கதாபாத்திரத்திற்கு இவர்தான் பொருத்தமாக இருப்பார்' என தேடும் அளவிற்கு பாலிவுட்டின் ஆர்ப்பாட்டமில்லாத நடிகையாக விளங்குகிறார். அவர்தான் சாரதா கபூர் (Shraddha Kapoor).

The Bang Bang Club (சினிமா) .
இயற்கை காட்சிகள், அதிசயங்கள், அபூர்வங்கள், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள், திருவிழாக்கள், வரலாற்று நிகழ்வுகள், சமூகம் சார்ந்த பிரச்சனைகள், பேரிடர்கள், சோக நிகழ்வுகள் போன்ற வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் புகைப்படமாக எடுப்பது என்பது தேர்ந்த ஒரு கலை.  எந்தத்துறைக்கு பயன்படுகிறதோ இல்லையோ செய்தித்துறையில் இந்த புகைப்படக்கலையின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும். பக்கம் பக்கமாக எழுதி புரியவைக்க முடியாத ஒரு செய்தியை சிறந்த புகைப்படம் ஒன்று அப்பட்டமாக விளங்க வைத்துவிடும். ஆப்கானிஸ்தானின் பச்சைநிற கண்ணழகி, உகாண்டா நாட்டு குழந்தையின் சூம்பிப்போன கை, ரொட்டித்துண்டிற்காக கையேந்தும் சோமாலியா குழந்தைகள், போருக்குச் செல்லும் தந்தையை பிரியும் சிறுவன், பூகம்பத்தில் புதைந்த தம்பதிகள், தன் தலைவனின் இருதி ஊர்வலத்தில் வாசிக்கும் இராணுவ வீரன். இறந்து கரை ஒதுங்கிய சிரியாநாட்டு குழந்தை, போபால் விசவாயு தாக்கப்பட்ட குழந்தை,  அல்பேனியாவின் அகதிகள் முகாம்,  ஹிட்லரின் வதை முகாம், என புகழ்பெற்ற சில புகைப்படங்களே இதற்கு சாட்சியாகும். குறிப்பாக வியட்நாம் போரின்போது எடுக்கப்பட்ட எரியும் புத்தபிட்சுவின் படமும் நிர்வாண சிறுமியின் அலரலும் இந்த உலகையே உளுக்கியது குறிப்பிடத்தக்கது. உலகின் கவணத்தைத் திருப்ப இத்தகைய புகைப்படங்களை எடுக்க புகைப்படக்காரர்கள் பலர் தங்கள் உயிரையும் பணயம் வைக்கின்றனர். போர், கலவரங்கள், போராட்டங்கள், பேரிடர்கள் என அந்த கால சூழ்நிலையில் அத்தகைய உணர்வுபூர்வமான புகைப்படங்களை எடுக்கும் அவர்கள் எத்தகைய சிரமத்திற்கு உள்ளாகின்றனர்? அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? அவர்களின் நாட்கள் எவ்வாறு கழியும்?. இதனை நான்கு புகைப்படக்காரர்கள் மற்றும் அவர்களின் அனுபவம் மூலம் அழகாக விவரிக்கிறது இந்த திரைப்படம் "தி பேங் பேங் கிளப்" (The Bang Bang Club). 

மயானம் (என் தமிழ்) .
மயானம் அல்லது சுடுகாடு என்றால் அனைவருக்கும் ஒரு பயம், ஒரு சிறிய தயக்கம் இருக்கும். அட ஏன்? மயானம் இருக்கும் பக்கம் கூட நாம் கால் வைக்க மாட்டோம். அதையும் மீறி அவ்வழி செல்வதாக இருந்தால் அடிவயிற்றில் ஆரஞ்சு நிறத்திலிருக்கும் அட்ரினல் சுரக்க ஒரு வித கிலியுடன் கடந்து செல்வோம். பேய் பிசாசு ஆவி மோகினி ராகினி கவுதமி என அதற்கு காரணமாக இருந்தாலும், இதுதான் நிரந்தரம் ஒருநாள் இங்குதான் வருவோம் என்ற எண்ணமும் பயமும் நம்மில் யாருக்குமே கிடையாது. அதனால்தான் பிக்பாஸ் என அத்தனை ஆட்டத்தையும் ஆடுகிறோம்.


யாழ் - சிவயநம (பாடல்).சங்ககாலத்தில் தமிழால் இசையால் பாடல்களால் மக்களை மகிழ்வித்த "பாணர்கள்" என்பவர்களைப் பற்றி என்தமிழ் என்ற பகுதியில் எழுதியிருந்தேன் அதற்கான தகவல்களை திரட்டும்போதுதான் இந்தப் பாடல் எதேச்சையாக கிடைத்தது. பாணர்கள் பல இசைக் கருவிகளை வாசிக்க கற்றிருந்தனர் அதில் குறிப்பிடும்படியாக "யாழ்" எனும் நரம்பு இசைக் கருவியின் வாத்தியத்தில் அவர்கள் கைதேர்ந்தவர்களாக விளங்கினர். இந்த யாழ் எனும் இசைக் கருவியே இன்று புழக்கத்திலிருக்கும் வீணை, சித்தார், மேண்டலின் போன்ற நரம்பு இசைக் கருவிகளுக்கு முன்னோடியாகும். மேலும் தமிழர்கள் வாசித்த முதல் இசைக் கருவி இதுதான் என்று நம்பப்படுகிறது. யாழ் கருவியை வாசிக்கும் பாணர்களின் ஒரு பிரிவினர் யாழ் பாணர்கள் என அழைக்கப்பட்டனர். இலங்கை நாட்டின் முக்கிய பகுதியான யாழ்பாணம் என்ற இடத்தில் பண்டைய காலத்தில் இந்த பாணர்களின் பிரிவினர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தனர். அதனால்தான் அந்த பகுதிக்கு யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்ததாக வரலாறும் இருக்கிறது. அத்தகைய பாணர்களின் வரலாற்றையும் சிறப்பு வாய்ந்த யாழ் எனும் இசைக் கருவியின் பெருமையையும் அழகான ஓவியத்துடன் நமக்கு காட்டுகிறது இந்தப் பாடல்.


ஈரேழு உலகங்கள் (சில தகவல்கள்).
'ஈரேழு உலகமும் கண்டிராத அழகி அவள்' என்ற சொல்லாடலை கேள்விப்பட்டிருப்போம். அதன்படி ஈரேழு பதினான்கு உலகத்தில் காணக் கிடைக்காத ஒரு பேரழகி இருக்கிறாளா என்ன? என்பது சந்தேகமாக இருந்தாலும் ஈரேலு உலகம் என்பது இருக்கிறது. அப்படி என்றால் நாம் வாழும் இந்த உலகத்தைப் போல அச்சு அசலாக இன்னும் பதின்மூன்று உலகங்கள் இருக்கின்றன. இதனை அறிவியல் பூர்வமாக நிறுபிக்க "இணை பிரபஞ்சம்" என ஏற்கனவே எழுதிவிட்டேன் அதனால் இந்தமுறை பழமை வாய்ந்த இந்து மதத்தின் புராணக் கதை பக்கம் தாவுகிறேன்.

Bus 44 (குட்டிக்குட்டி சினிமா).நடுப்பகல் நேரம், மக்கள் நடமாட்டம் நிறைந்த இடம், கேமரா கண்கள் உட்பட பலரது நிஜப் பார்வைகளும் படும்படி ஒரு கொலை நடக்கிறது. சுற்றியிருந்தவர்கள் தடுக்க நினைத்திராத அந்த சம்பவம் பிறகு ஊடகங்களின் வெறும் வாயில் மெல்லப்பட்டு பலரது ஆறுதல்களையும் விமர்சனங்களையும் பெறுகிறது. இது ஒரு சிறிய எடுத்துக்காட்டாக இருந்தாலும் சிறுசிறு திருட்டுகள் தொடங்கி கடத்தல் கொலை கற்பழிப்பு என இன்று துணிச்சலோடு நடக்கும் குற்ற சம்பவங்கள் அனைத்தும் சிலரின் பார்வை படும்படி அப்பட்டமாகவே நிகழ்கிறது. யாரோ? எவரோ? என்னதான் பிரச்சனையோ? உனக்கேன் அக்கறை? நமக்கேன் வம்பு என தடுக்க நினைக்காது ஒதுங்கிச் செல்லும் மனிதத் தன்மையின் அலட்சியப் போக்கே இத்தகைய துணிச்சலான குற்ற சம்பவங்களுக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்துவிடுகின்றன. மனித மனதின் அத்தகைய அலட்சியப் போக்கிற்கு சாட்டையடி கொடுக்கிறது இந்த குட்டி சினிமா "Bus 44".

Larvae (கொஞ்சம் புதுசு).மிக்கி மவுஸ், டாம் அண்ட் ஜெர்ரி, ரோடு ரன்னர் போன்ற பிளாக் காமெடி மற்றும் ஸ்லாப்டிக் வகை காமெடி கலந்த கார்டுன் தொடர்களை தற்போது காண்பது என்பது அரிதாகிப்போனது. அட்வெஞ்சர் வகையரா தொடர்களாலும் தொழில்நுட்பம் கலந்த மாயாஜால கதைகளாலும் இன்றைய கார்டுன் உலகம் நிறைந்திருக்கிறது. அழுதுவடியும் மெகா சீரியல்கள் சேனல்களைப் போல அல்லது எதாவது ஒரு செய்தி சேனல்களைப் போல வெறும் சப்தங்களால் கார்டுன் சேனல்கள் இருபத்து நான்கு மணிநேரமும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. அதாவது குழந்தைகளை மட்டும் இலக்காக குறிவைத்து வியாபார தந்திரத்தோடு அவைகள் அழகாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை. அதற்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக எப்போதாவது சில தொடர்கள் அனைவரையும் கவரும் விதத்தில்  அரிதாக ஒளிபரப்பப்படுகின்றன. அந்த வகையைச் சார்ந்த தொடர்தான் லார்வா (Larvae).

Coffee & Allah (குட்டிக்குட்டி சினிமா) .பெரும்பாலான புதிய உறவுகளும் நட்புகளும் ஒரு கோப்பை குளம்பியில் தொடங்குகிறது (குழம்பிக் கொள்ள வேண்டாம் காஃபி என்பதற்கு தூய தமிழில் குளம்பி). வாங்களேன் ஒரு கப் காஃபி சாப்பிடலாம் என்பதற்கு பிறகான உறையாடலும் அதனைத் தொடரும் நட்பும், ஒரு வாய் காஃபியாவது சாப்பிட்டுவிட்டுதான் போகனும் என்ற அன்பான உபசரிப்பும், காஃபி குடிச்சா எல்லாம் சரியாகிவிடும் என்ற புத்துணர்ச்சியும், ஒரு கப் உள்ள போனால்தான் காலைக்கடன் கலகலகல என்பதும், இரவு காஃபி குடித்துவிட்டு படுத்தால் .... ம்ம்ம்ம்ம் என்ற நினைப்பும் அலாதியானது. அதுபோல அதிகாலை படுக்கைக்கு வரும் காஃபி மற்றும் கெஞ்சல் முத்தம் தீண்டல் ஊடல் என காமத்துப்பால் கலந்த இல்லறவியல் காஃபி, கூட குறைச்சல் இருந்தாலும் தனிமையை ஆசுவாசப்படுத்த நாமே போட்டுக்கொள்ளும் செல்பி காஃபி என காஃபியை விட காஃபி குடிக்கும் தருணங்கள் சுவையானது. அதனால்தான் கசக்குமோ இனிக்குமோ பிடிக்குமோ பிடிக்காதோ உலகின் மூன்றில் ஒருவர் தினமும் ஒரு குவளையாவது காஃபியை சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் (உறிஞ்சி விடுகின்றனர்).

டோங்கிரி to துபாய் (புத்தகம்).இந்தியாவின் ஒரே டான் இவன்தான். ஹாலிவுட் ஸ்டைலில் காட்பாதர் என்றாலும் படு லோக்கலாக தாதா என்றாலும் இவன் ஒருவனே நினைவுக்கு வருவான். இந்தியா மட்டுமல்லாமல் ஆசியாவின் தலை சிறந்த முடிசூடா கடத்தல் மன்னனும் இவன்தான். கொலை, கொள்ளை, திருட்டு, ஆள்கடத்தல், பணம்பறிப்பு, போதை மாஃபியா, ஆயுதபேரம், ஹவாலா முதல் உஜாலா வரையிலான பண பரிமாற்றம், கள்ளநோட்டு, லாட்டரி, சூதாட்டம், கிரிக்கெட் பெட்டிங், சினிமா, திருட்டு விசிடி, சுபாரி தொழில், ரியல் எஸ்டேட், அரசியல், தீவிரவாதம் மற்றும் சாதாரண கட்டப் பஞ்சாயத்து முதல் வீரபாண்டிய கட்டப் பஞ்சாயத்து வரை இவன் கால் வைக்காத நிழல் உலக தொழில்களே இல்லை எனலாம். (திருட்டு விசிடி மூலம் இவன் ஒருவருடம் சம்பாதிக்கும் பணம் மட்டும் 1500-4000 கோடி என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்).

Sunrise @ flight view (Mobile Photography) .

I think it's my topest photography. Click from SriLankan Airlines upon Arabian Sea. 

சச்சின் ஏ பில்லியன் டிரீம்ஸ் (பாடல்கள்).இந்த இருவருக்கும் மக்களை மகிழ்விக்கக் கூடிய வேலை. இந்த இருவரும் தேர்ந்தெடுத்த அவரவர் வேலையை கடவுளை விட மேலாக கருதக் கூடியவர்கள். உலகமெங்கும் இருக்கும் இருவருக்குமான ரசிகர்கள் எந்தவித பேதமற்றவர்கள். இந்த இருவரும் இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்தவர்கள். இவர்கள் இந்தியாவின் மாபெரும் சொத்து. இவர்கள் இருவரும் கடந்து வந்த பாதைகள் கடினமானது. தங்கள் பேச்சு செயல் திறன் என அனைத்திலும் சிறந்து விளங்கும் இவர்கள் தனிப்பட்ட சொந்த வாழ்க்கையிலும் சோடை போகாதவர்கள். தோற்றத்தை எடுத்துக் கொண்டால் இருவர்களின் உயரம் சற்று குறைவு ஆனால் இவர்களது சாதனைகள் யாரும் தொட முடியாத உச்சம். ஒருவர் கிரிக்கெட் உலகின் கடவுள், மற்றவர் இசையுலகின் மாமேதை. அந்த இருவர் சச்சின் மற்றும் ரஹ்மான். மேலும் இருவரும் அடியேனின் ஆதர்சன நாயகர்கள். வேறென்ன வேண்டும் சச்சின் ஏ பில்லியன் டிரீம்ஸ் பாடல்களை ரசிக்க.

சிட்னி (சாப்ளின் பகுதி - 7).1965 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் நாள் பிரான்ஸிலிருந்து வந்த அந்த துக்கச் செய்தியை கேட்டு 75 வயதான சாப்ளின் உடைந்துபோய் அப்படியே நார்க்காலியில் சாய்ந்தார். பதறிப்போன அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அவரைச் சூழ அவருக்கு தனிமை தேவைப்பட்டது. அனைவரும் அவரைவிட்டு சற்று விலகிச் செல்ல அவர் தன் பால்ய கால நினைவுகளில் மூழ்கத் தொடங்கினார். அவரது இமை மூடிய கண்களிலிருந்து நீர் கசிய உதடுகள் மெல்ல அந்த பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தது. சிட்னி ... சிட்னி...என் அண்ணா..

Pumzi (குட்டிக்குட்டி சினிமா) .ஆட்டம் காட்டும் வட கொரியா, அதிரடிக்கு காத்திருக்கும் அமேரிக்கா, அமைதியாக பதுங்கியிருக்கும் ரஷ்யா, அலப்பரை கொடுக்கும் சீனா, அழிய ஆசைப்படும் அரபு தேசங்கள், அவ்வபோது பயமுறுத்தும் ஐ.எஸ்.ஐ என இவற்றையெல்லாம் பார்க்கும் போது மூன்றாம் உலகப்போர் எப்போது தொடங்கும் என்ற அச்சம் நமக்கு வரக்கூடும். ஆனால் தொழில்நுட்பமும் அறிவியலும் அபரிவிதமாக வளர்ச்சியடையத் தொடங்கிய இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே  மூன்றாம் உலகப்போருக்கான விதை விதைக்கப் பட்டுவிட்டது என சூழ்நிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதாவது அறிவியல் என்ற ஆயுதம் கொண்டு நாம் அனைவரும் போர் வீரர்களாக களத்தில் நின்று இந்த உலகை அதன் இயற்கையை அதனோடு தொடர்புடைய உயிர்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கத் தொடங்கிவிட்டோம் என்பது அவர்களின் கருத்து.

நிலவின் முதுகு (குட்டித் தகவல்).'நிலவின் முதுகும் பெண்ணின் மனதும் என்றும் ரகசியம் தானா' - அற்புதமான பாடல் வரிகள்.

2015 ஆம் வருடம் நாசா அனுப்பிய DSCOVR (Deep Space Climate Obeservatory) என்ற செயற்கைக்கோள் தன்னிடம் உள்ள சக்தி வாய்ந்த EPIC (Earth Poly Chromatic Imaging) கேமரா மூலம் வான்வெளியில் உள்ள ஓசோன் படலம் மற்றும் வளிமண்டல தூசு துரும்பு குப்பை கூழங்களை மிகத் துள்ளியமாக புகைப்படம் எடுத்து அடிக்கடி அப்டேட் செய்து வருகிறது (பல லட்ச லைக்குகளையும் வாங்கியிருக்கிறது). அது சமீபத்தில் சூரிய ஒளி வீசும் பூமியின் பக்கமாக நிலவு நகரும் சமயம் பார்த்து பத்துலட்சம் கி.மீ தூரத்திலிருந்து அழகாக பல புகைப்படங்களை கிளிக்கி அனுப்பியது. அதில் இதுவரை தெரியாத மற்றும் சந்தேகத்துடன் இருந்த நிலவின் மறுபக்கத்தின் இருள் சூழ்ந்த புகைப்படமும் இருந்தது (கருப்பு நிலா). நிலவிற்கு மறுபக்கம் உள்ளதா? அது கருப்பாக இருக்குமா? கற்பனையா? நிஜமா? என்றால்! நிஜம்தான். 


மேடம் பவாரி (புத்தகம்).பிரெஞ்சு இலக்கியம் உலக இலக்கியத்திற்கு கொடுத்த கொடைகள் ஏராளம். இதுவரை 15 முறை இலக்கியத்திற்கான நோபல் பரிசினை பிரெஞ்சு இலக்கியங்கள் அதிகபட்சமாக பெற்றதே அதற்கான சாட்சியாகும். 18 ஆம் நூற்றாண்டில் Voltaire, Jean, Jacques Rousseau, Danies Diderot மற்றும்; 19 ஆம் நூற்றாண்டில் Honore de Balzac, Gustare Flaubert, Emile Zola மற்றும்; 20 ஆம் நூற்றாண்டில் Macel Proust, Jean Ganet, Louie Ferdinaud Celine போன்ற எழுத்தாளர்களும், கவிதைக்கு Victor Hugo, Arthuer Rimbaud, Lafontaine நாடகத்திற்கு Moliere, Samual Beckett, சரித்திரத்திற்கு Blaise Pascal சிந்தனைக்கு Lespenseas போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களும் இதற்காக அரிய பணியாற்றி பிரெஞ்சு இலக்கியத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தினர். (இவற்களைத் தவிர்த்து இன்னும் பலர் இருக்கிறார்கள்). அவர்களின் வரிசையில் 1856 ஆம் ஆண்டு "குஸ்தாவ் பிளாபெர்ட்" (Gustave Flaubert) என்பவர் எழுதிய இலக்கிய படைப்புதான் இந்த புத்தகம் "மேடம் பவாரி" (Madame Bavary).

Dogani - The Crucible (சினிமா).எதார்த்தங்கள், உண்மைச் சம்பவங்கள், புத்தகங்கள் இவற்றை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களே தரமான திரைப்படங்களாக மக்கள் மனதில் நிற்கும். அவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தி மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் புரட்சிக்கும் ஒரு திரைப்படம் வித்திட்டால் அதைவிடச் சிறந்த படைப்பு வேறெதுவும் இருக்காது. அத்தகைய தரமான படைப்புதான் இந்த கொரியன் திரைப்படம் "The Crucible". தென் கொரியாவில் உள்ள Gwangju மாகாணத்தில் 2005 -ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தை "Gong-Ji-Yong" என்பவர் புத்தகமாக எழுதினார் அதனை "Hawang Dong -Hyuk" என்பவர் திரைப்படமாக எடுத்திருந்தார். இந்த இருவர்களின் உழைப்பு வெளிவந்த பிறகு பார்வையாளர்களிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் அரசாங்கத்தையும் சட்டத்தையும் அது போட்டிருக்கும் அழுக்குச் சட்டையையும் பிடித்து உலுக்கிப் பார்த்தது. அப்படி என்ன நடந்தது? அந்த சம்பவத்தையும் அந்த திரைப்படம் வெளிவந்த பிறகு அது ஏற்படுத்திய தாக்கத்தையும் பார்க்கலாம் வாருங்கள்.

பாணர்கள் (என் தமிழ்)."வாழ்க்கை கர்மவினையின் சுழற்சியாக கருதப்பட்டாலும் கொண்டாட்டங்களால் நிறைந்தது". ஆடல், பாடல், இசை, நாடகம் போன்ற கலைகளால் சங்ககாலம் முதல் இன்றுவரை அந்த கொண்டாட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தில் அந்த கலைகளும் கொண்டாட்டங்களும் வேறொரு பரிணாமத்தில் நம் வீடுதேடி வரவேற்பறைக்கே வருகிறது. அவற்றிற்கெல்லாம் சங்க காலத்தில் வாழ்ந்தவர்களே அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். அவ்வாறு சங்க காலத்தில் பாடல்களைப் பாடி இசைக்கருவிகளை வாசித்து அதற்கு தகுந்தார்போல் நடனமாடி மக்களை மகிழ்வித்து கலைகளை வளர்த்தவர்கள் பாணர்கள் என அழைக்கப்பட்டனர், அவர்களின் பெண்பால் பாடினிகள். ஐம்பெரும் காப்பியமான சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் இவர்களைப் பற்றி அழகாக குறிப்பிட்டுள்ளார்.

இசையுடன் பண்ணப்படுவது பண்.
பண்ணிசையுடன் பாடுபவர் பாணர்.
பண்ணிசை பொருந்த ஆடுபவர் பொருநர்.
பாடற்பொருளை மெய்படுத்திக் காட்டி ஆடுபவர் விறலியர்.
கதைப்பாட்டுடன் ஆடுபவர் கூத்தர்.

சுருக்கமாகச் சொன்னால் இவர்கள், அன்றைய கால சூப்பர் சிங்கர் மானாட மயிலாட அசத்தப்போவது யாரு சூப்பர் ஜோடி கோஸ்டிகள்.

Autumn Leaves (குட்டிக்குட்டி சினிமா).உன்னதமான உலக சினிமாக்களை வரிசைகட்டினால் ஈரானிய திரைப்படங்களே முதல் இடத்தில் நிற்கும். பிரம்மாண்ட படைப்புகளோ, ஆச்சரிமூட்டும் கதையோ, வியக்க வைக்கும் தொழில்நுட்பங்களோ ஈரானிய படைப்பாளிகளுக்கு தேவைப்படாது. தெருவில் வித்தைகாட்டும் சாதாரண பாம்பாட்டியை ஒரு கையடக்க கேமராவில் படம்பிடித்து சத்தமில்லாமல் மயக்கி சகல விருதுகளையும் அவர்கள் தட்டிச் சென்றுவிடுவார்கள். "Children of Heaven, The White Ballon, The Cow, Bashu, Where is my Friend's Home இன்னும் பல திரைப்படங்களை இதற்கு எடுத்துக்காட்டுகளாக கூறலாம். குறும்படங்களை எடுத்துக்கொண்டால் அதிலும் அவர்களுக்கு முதலிடம்தான். தரமான ஒரு படைப்பைத் தர அவர்களுக்கு ஒரு சிறிய பொறி போதும் சிலசமயம் அது கூட தேவையிருக்காது. அந்த வகையைச் சார்ந்ததுதான் இந்த குறும்படம் "Autumn Leaves".

A Long Way Gone (புத்தகம்).குழந்தைத் தொழிலாளர்கள் என்பதே சட்டத்திற்கு புறம்பான செயல் அதிலும் குழந்தை வீரர்கள் என்பது மனிதத்தையும் மீறக்கூடிய செயல். உலகம் கண்ட இரண்டு பெரும் போர்களிலும் குழந்தை வீரர்கள் (சிறுவர் - சிறுமியர்) ஈடுபடுத்தப் பட்டிருக்கிறார்கள். வளர்ந்த நாடுகள் என இன்று மார்தட்டிக் கொள்ளும் நாடுகள் கூட போர்களில் சிறுவர்களை கணிசமான அளவு பயன்படுத்தி இருந்தனர். ஆனால் இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு விழித்துக் கொண்ட உலகம் சிறுவர்களை இராணுவத்தில் அனுமதிப்பதை தடை செய்தது மேலும் இராணுவத்தில் சேர்வதற்கான கட்டாய வயது வரம்பைக் கொண்டுவந்தது. இன்று இராணுவத்தில் சிறுவர்களை எந்த நாடும் அனுமதிப்பதில்லை. அதற்கு மாற்றாக புரட்சி, விடுதலை, சுதந்திரம், மதம் என தீவிரமாக செயல்படும் சில இயக்கங்களின் மூலம் அவர்களின் கையில் விளையாட்டு பொருட்களுக்கு பதிலாக விபரீதமாக ஆயுதங்கள் திணிக்கப்படுவது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஈராக் யுத்தம் தொடங்கி வியட்நாம், ஆப்கானிஸ்தான் போர், ஆப்பிரிக்க நாடுகளின் உள்நாட்டு கலவரங்கள், ஏன்! நமக்கு நன்கு பரிச்சியமான இலங்கை யுத்தத்திலும் கணிசமான அளவு சிறுவர்கள் ஒற்றர்களாகவும் மனித வெடிகுண்டாகவும் கேடையமாகவும் பற்றாக்குறை வீரர்கள்களாகவும் முன்நிறுத்திய வரலாறு நமக்கு தெரிந்ததே. அவ்வாறு தன் நாட்டின் கலவரத்திற்காக, ஒரு இயங்கத்தின் செயல்பாட்டிற்காக பதப்படுத்தப்பட்ட - பயன்படுத்தப்பட்ட சிறுவன் ஒருவனின் சுயசரிதைதான் இந்த புத்தகம் "A Long Way Gone".