☰ உள்ளே....

மனிதம் - ஒரு நாடோடியின் கதை பகுதி - 3.
நீங்கள் சந்திக்க விரும்பும் நபர் யார்? என ஒருமுறை ரஷ்யாவின் லெனினை கேட்டபோது அவர் அளித்த பதில் சாப்ளின். லெனின் மட்டுமல்லாமல் உலக பிரபலங்கள் பெரும்பானவர்களுக்கு சாப்ளினை வாழ்வின் ஒருமுறையாவது சந்தித்து விடவேண்டும் என்ற ஆசை இருந்தது. சிலர் அதை நிறைவேற்றிக் கொண்டனர் சிலருக்கு அது கனவாகவே இருந்தது. சாப்ளினும், டக்ளஸ் பேர், கிரிஃபித், ஐசன்ஸ்டீன் போன்ற சினிமா பிரபலங்களுடனும், பெர்னாட்ஷா, ஹெச். ஜி. வெல்ஸ் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களுடனும், ராம்ஸே, வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற அரசியல் தலைவர்களுடனும், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என பல முக்கிய பிரபலங்களுடனும் நட்பில் இருந்தார். புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டின் சில நேரங்களில் தனது E=Mc2 யை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு சாப்ளினோடு சேர்ந்து அவரது திரைப்படத்தை முதல்நாள், முதல்காட்சி, முதல் இருக்கையில் அமர்ந்து விசிலடித்து ரசித்து மகிழ்ந்து கண்கலங்கியிருக்கிறார். சாப்ளினின் திரையுலக காலகட்டத்திற்குப் பிறகு பிறந்தவர்கள் கூட அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசையை வைத்திருந்தனர். ஆனால் சாப்ளிக்கு ஒரு ஆசை இருந்தது வாழ்நாளில் ஒருமுறையாவது அந்த மகானை சந்திக்க வேண்டும்.

கடவுள் எப்படிப்பட்டவர் என அறியாத வயதில் சிறுவன் சாப்ளின் தன் தாயுடன் தேவாலயங்களுக்குச் சென்று வருவான். சிலுவையில் அறையப்பட்டிருக்கும் இயேசுநாதரைக் காட்டி யாரும்மா இது? என கேட்டதற்கு இறைத்தூதனின் கதையை அவன் தாய் கூறியிருக்கிறாள். அந்த கதையில் வருதைப்போல நீயும் மக்களின் நன்மைக்காக மகத்தான காரியங்களை செய்ய வேண்டும், அன்பும் கருணையையும் நீ கடைசிவரை கடைபிடிக்க வேண்டும், அதற்காக நீ எந்த தியாகத்தையும் செய்யவேண்டும் என அவனது தாய் அவனிடம் அன்பாக கேட்டுக் கொண்டிருக்கிறாள். சிறுவயதில் தன் தாய் கூறியதை சாப்ளின் அவரது வாழ்க்கையில் கடைபிடித்தாரா என்பது சந்தேகமாக இருந்தாலும், அவர் சந்திக்க நினைக்கும் அந்த மகான் அதை கடைபிடித்து வந்தார். சிறுவயதில் தன் தாய் கூறிய தேவதூதனைப் போல அந்த மகான் நிஜ உலகில் வாழ்வதாக அவர் நம்பினார். அவரது அகிம்சா கொள்கையில் மனதை பறிகொடுத்திருந்த சாப்ளின் அதன் தாக்கத்தை தான் தயாரித்த திரைப்படங்களிலும் புகுத்தினார். உலகில் தீய சக்திகள் அழிந்து மனித குலம் உயரும், அன்பும் மனிதநேயமும் தோன்றி உலகம் அமைதியும் சாந்தியும் பெரும் என்ற அந்த மகானின் கொள்கையையே "தி கிரேட் டிக்டேட்டர்" என்ற திரைப்படத்தின் கருத்தாகவும் அமைத்திருந்தார். அத்தகைய சிறப்பு வாய்ந்த அந்த மகான் லண்டன் வந்திருக்கிறார் என்ற செய்தி சாப்ளினுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

நாட்டின் விடுதலைக்காக சில அரசியல் முடிவெடுக்க வந்திருக்கும் அந்த மனிதரை சந்திப்பது அத்தனை சுலபமாகாது என சாப்ளினுக்குத் தெரியும் அதனால் தனது நண்பர் சர்ச்சிலின் உதவியை நாடினார். முறையான அனுமதி வேண்டி கடிதமும் அனுப்பினார். பாபுஜி-சாப்ளின் உங்களை சந்திக்க கடிதம் அனுப்பியிருக்கிறார் என அந்த மகானின் உதவியாளர் கடிதத்தை பிரித்து முழுதாக படிப்பதற்குள் who is Chaplin? என அந்த மகான் அதிரடியாக கேட்டிருந்தார்.  He is a film acter என உதவியாளர் விளக்க "Film are not my cup of tea so what could i have in common with films and film's acters?" என்ற தனக்கே உரித்தான குறும்புடன் சாப்ளினை சாந்திக்க மறுத்தார் அந்த மனிதர். சாப்ளினின் இளமைக்கால வாழ்க்கையையும் அவரது திரைப்படங்களின் கருத்துக்களையும் உதவியாளர் எடுத்துச் சொன்ன பிறகு அனுமதியளித்தார்.

22 செப்டம்பர் 1931, London, Beckton Road, Canning Town,  இந்தியர்கள் வாழும் பகுதி Dr. Katial என்பவரின் வீட்டிற்குமுன் மாலை வேளையில் சாப்ளினின் கார் நின்றது. வீட்டின் மாடியில் உள்ள சிறிய அறையில் சாப்ளின் அந்த மகானை சந்திக்க பதட்டத்துடன் ஷேபாவில் அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில் பொக்கைவாய் சிரிப்புடன் Welcome Mr. Chaplin என அந்த அரை நிர்வாண கிழவன் அவரை வரவேற்க, சாப்ளினின் நீண்ட நாள் ஆசை அன்று நிறைவேறியிருந்தது. வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இல்லை என்றாலும் சாப்ளின் அந்த நிகழ்வை பாக்கியமாகக் கருதினார் தள்ளாத வயதில் அந்த நிகழ்வை "காந்தியைப் பார்த்த அந்த நிமிடம், அவரது எளிமையான தோற்றம், உள்ளம் சுடும் அவரது உண்மை என் இதயத்தை அந்த அறையைப்போல ஒளி வெள்ளத்தால் நிரம்பச் செய்தது"என தன் சுயசரிதையிலும் மறக்காமல் குறிப்பிட்டிருந்தார்.

வாழ்வின் சிலரது சந்திப்புகள் பயண ஓட்டத்தை திசை திருப்பிவிடும். காந்தியுடனான அந்த சந்திப்பு சாப்ளின் கலையுக பயணத்தை கொஞ்சம் மாற்றியிருந்தது. அதன் பிறகு சிரிக்க மட்டுமே வைத்துக்கொண்டிருந்த அவரது திரைப்படங்கள் சிந்திக்கவும் வைத்தது. சாப்ளின் தனது திரைப்படங்கள் முழுவதிலும் காந்தியின் அந்த ஒற்றைக் கருத்தை மையமாக வைக்கத் தொடங்கினார் அதுதான் "மனிதம் ".

துணுக்குச் செய்தி ..

காந்திஜியின் பாதை வேறு, சாப்ளினின் பாதை வேறு இவர்களின் சந்திப்பு சுவாரசியமற்ற ஒன்றாகும். அதன் பேச்சுகளும் அர்த்தமற்றதாக இருக்கும். இதனை சாப்ளின் நன்கு உணர்ந்திருந்தார். அதனால் காந்தியிடம் கேட்பதற்காக ஒரு கேள்வியை சர்வ ஜாக்கிரதையாக தயாரித்து வைத்திருந்தார். மகாத்மா காந்தியை வீழ்த்த ஒரு கேள்வியை வில்லில் பூட்டி அம்பாக அவர்மீது தொடுத்தால், பதிலை துப்பாக்கி குண்டின் வேகத்திற்கு திருப்பியனுப்பக் கூடியவர். அத்தகைய காந்தியை வீழ்த்த சாப்ளின் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும்.

"I am all for the freedom of your country and its people. But there is one thing that I don’t understand. Why do you oppose the use of machines? Don’t you think that a lot of work would come to a standstill if machines are not used?”

“I am not against machines but I cannot bear it when these very machines take away a man’s work from him. Today we your slaves because we cannot overcome our attraction, for your goods. Freedom will surely be ours if we learn to free ourselves from this attraction.”


இந்த பதிலின் மகத்துவத்தை உணர்ந்த சாப்ளின் தனது முதல் பேசும் படமான தி கிரேட் டிக்டேட்டர் என்னும் திரைப்படத்தின் கடைசி காட்சியில் அதனை பேசி நடித்திருந்தார். இன்றளவும் அந்த வசனம் திரையுலகின் புகழ்பெற்றதாகக் கருதப்படுகிறது.

சாப்ளினின் திரைப்பட வரிசையில் அடுத்து-

11. Twenty Minutes of Love (1914).


12. Caught in a Cabaret (1914).


13. Caught in the Rain (1914).


14. A Busy Day (1914).


15. The Fatal Mallet (1914).16. Her Friend the Bandit (1914).


17. The Knockout (1914).


18. Mabel's Busy Day (1914).