கதைக் கரு - ஒரு நாடோடியின் கதை பகுதி - 1.




தோல் சுருங்கினால் வாய்ப்புகளும் சுருங்கிவிடும் என்பதற்கேற்ப நடன விடுதிகளில் பாடிக்கொண்டிருந்த ஹென்னாவிற்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கின. 16 வயதில் பட்டாம்பூச்சியாக Lilly Harley என்ற பெயரில் லண்டனில் உள்ள British Music அரங்கத்தில் அவள் பாடியபோது கைத்தட்டி விசிலடித்து மெய்மறந்த கூட்டம் தற்போது நிராகரித்து ஒதுக்கியிருந்தது. தனக்கு முன் ஒரு கையில் சுருட்டு மறு கையில் மதுக்கோப்பையுடன் மிடுக்கான தோற்றத்தில் சில்லரைகளை வாரியிறைக்கும் வசதியானவர்களைப் போன்று ஒரு கணவன் கிடைத்து, அவனுடன் விலையுயர்ந்த ஆடை, நகைகள், மனக்கும் வாசணை திராவியங்களுடன் லண்டன் வீதிகளில் ஜட்கா வண்டியில் ஆடம்பரமாக உலாவரும் வாழ்க்கையை வாழ அவள் கனவாக வைத்திருந்தாள். ஆனால் எல்லாம் விதிப்படிதான் நடக்கிறது என்பதற்கேற்ப "Sydney Hawke" என்ற பணக்காரன் மற்றும் "Charles Chaplin" என்ற குடிகாரன் இருவரிடமிருந்து இரண்டு குழந்தைகளும் வறுமையும் மட்டுமே அவளுக்கு வாழ்க்கைத் துணையாக கிடைத்திருந்தது. அந்த வறுமையுடன் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தை நோக்கிய சாலையில் ஒரு மதுபானவிடுதிக்கு எதிரே அமைந்த குறுகளான வெளிச்சமற்ற வீட்டில் வாழ்ந்து வந்த அந்த மூன்று ஜீவன்களுக்கு, ஒற்றை நிலா, மின்னும் நட்சத்திரங்கள், நடுங்கும் குளிர், பசி என்ற நான்கையும் இறைவன் பலநாள் பல இரவிற்கு படியளந்திருந்தார். பெரியவன் சிட்னியாவது பசியை பொருத்துக் கொள்வான் ஆனால் சிறியவன் சாப்ளின் "அம்மா பசிக்கிறது" என வயிற்றை பிடித்துக்கொண்டு நிற்பான். இரண்டு குழந்தைகளின் பசியை போக்க ஹென்னா புதிய யுக்தியை கண்டுபிடித்தாள் அதுதான் கதை சொல்வது.

"கதைகேட்டறியும் குழந்தைகள் வாழ்வில் தோற்காது"

ஹென்னாவில் கதையில் புராண இதிகாசங்கள் மற்றும் தேவ தூதனின் சாகசங்கள் இருக்காது, அதற்குப் பதிலாக தினமும் அவள் தன் குழந்தைகளுக்காக புதிய புதிய கதைகளை உருவாக்குவாள். தெருவில் தென்படும் பிச்சைக்காரன், கண் தெரியாத பூ விற்பவள், சர்க்கஸ் கோமாளி, திருடன், நாடோடி, அநாதைச் சிறுவன் என சாதாரண கதாபாத்திரங்களைக் கொண்டு ஒரு கதையைத் தொடங்குவாள். "அம்மா பசிக்கிறது" என சாப்ளின் மறுபடியும் கெஞ்ச தன் கதையில் நகைச்சுவைகளை புகுத்துவாள். நேரம் போகப்போக அவளது கதை திசைமாறும் பிச்சைக்காரன் பணக்காரனாவான். கண்தெரியாத பூ விற்பவளுக்கு அன்பானவன் துணையாகக் கிடைப்பான், திருடனை ஊரே போற்றும், அநாதை சிறுவன் தாயுடன் இணைவான் என தன் மனம்போன போக்கில் கதையை மாற்றியமைப்பாள். சுருக்கமாகச் சொன்னால் தான் வாழும் வாழ்கையையும், வாழ நினைத்த வாழ்க்கையையும் இடைச்சொருகளாக நுழைத்து கதை சொல்லுவாள். சாப்ளினுக்கு கதைகேட்க பிடிக்கும் என்பதால் அம்மா சொல்லும் கதைகளை கண்ணைமூடி மனதில் காட்சிகளாக ஓட்டிப் பார்த்து பசி மறந்து தூங்கிப்போவான். அன்று அவன் அம்மா சொன்ன கதைகள்தான் "தி கிட், சிட்டி லைட்ஸ், மாடர்ன் டைம்ஸ் சர்க்கஸ் போன்ற சார்லி சாப்ளினின் புகழ்பெற்ற திரைபடங்களின் கதைக் கருவாக அமைந்தது.

துணுக்குச் செய்தி ..

சாப்ளினின் தாய் "Hannah Harriet Pedlingham Hill" (சுருக்கமாக ஹென்னா) 1865 ஆம் ஆண்டு அகஸ்ட் 6 ஆம் நாள் லண்டனில் உள்ள Walworth நகரத்தில் Charles Frederick - Marry Ann Hodges தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தாள். அவளது தந்தை நகரில் ஷூக்களை தயாரித்து விற்றுக்கொண்டிருந்தார். தாய் Marry Ann நாடகங்களுக்கு கதை எழுதும் திறமை பெற்றவர். ஒரு விபத்தில் ஹென்னா தன் தாயை பரிகொடுக்க அன்றுதான் விதி முதன்முதலில் கருப்புத்துணியை கண்ணில் கட்டி அவளது வாழ்க்கையின் கண்ணாமூச்சி ஆட்டத்தை தொடங்கியது*

சாப்ளினின் திரைப்பட வரிசை..

1. Making a Living (1914).


2. Kid Auto Races at Venice (1914).


3. Mabel's Strange Predicament (1914).


4. Between Showers (1914).



5. A Film Johnnie (1914)