☰ உள்ளே....

அரிதாக கேட்கும் பாடல்கள்ஒரு திரைப்படத்தின் நீளம் அகலம் உயரத்திற்காக இசைவெளியீட்டில் இருக்கும் பாடல்கள் ஒன்றிரண்டை அந்த திரைப்படம் வெளியாகும்போது நீக்கிவிடுவார்கள். 24 மணிநேரமும் தேய்ந்துபோன இசைத்தட்டைபோல நீங்கள் கேட்டவைகளாக திரும்ப திரும்ப ஒளிக்கும் தொலைக்காட்சிகளின் பாடலை தவிர்த்து நீக்கப்பட்ட அந்த பாடல்களை பன்பலைகளில் மட்டுமே மிக அரிதாக கேட்ட முடியும். தேனீர் கடையில் கோப்பையை விழுங்கிய சிறிய ஆசுவாசத்தில், நெரிசல் நிறைந்த பேருந்தின் வியர்வை நாற்றத்தில், நகரம் உறங்கும் வேலையில் பக்கத்து அறையின் கரகர சப்தத்தில் என மிக அரிதாக கேட்ட அந்த பாடல்களின் முதல் வரியை பிடித்துக்கொண்டு அதன் ஜாதகங்களைத் தேடி சேமித்து வைத்திருக்கிறேன். அவற்றை சில நேரங்களில் மீண்டும் கேட்கும்போதெல்லாம் இந்த பாடல்கள் காட்சிகளாக இருந்தால் எப்படியிருக்கும் என மனதிற்குள் பயாஸ்கோப் ஓட்டிப் பார்த்ததுண்டு. அத்தகைய பாடல்களை அதன் பயாஸ்கோப்பை நமக்குத் தெரிந்த கட்டிக் ஒட்டிங் வேலைப்பாடுகளை செய்து தங்களின் பார்வைக்கு வைக்கலாம் எனத் தோன்றியது.