எல்லேலமா.

எக்ஸ்யூஸ்மி பாஸ்.... தீப்பெட்டி இருக்கா? 

டாஸ்மாக் பாரிலும் தியோட்டரிலும் கிடைக்கும் 
அந்த இரண்டு நிமிட நட்பு 
அலாதியானது.

ஏதாவது பிரச்சனை என்றால் 
உடனே ஓடிவருகிறான் உயிர் நண்பன்.
வழக்கமாக சரக்கடிக்கும் டாஸ்மாக் பாருக்கு..  

பேச்சுலர்ஸ் பார்ட்டி வைக்காத 
திருமண அரங்கில்
நண்பர்கள் இருக்கை 
பெரும்பாலும் காலியாகத்தான் இருக்கின்றன.

இன்னமும்
பாட்டி வடை சுடுகிறாள்
காகம் அதை திருடுகிறது
நரி தந்திரம் செய்கிறது.
இரண்டு மூன்று தலைமுறைகள் தாண்டி..

பேருந்து படிக்கட்டுகளில் 
இன்னமும் தொங்கிக் கொண்டிருக்கிறது 
கல்லூரி கால நினைவுகள். 

எரிந்து முடித்த கொசுவர்த்தி
ஒருசில சிகரெட் சாம்பலை
கூட்டுவதிலும்
பெருக்குவதிலும்
தொடங்குகிறது
பேச்சுலர்ஸ்
காலைப்பொழுது.

ஆம்லெட்டோ?
ஆப்பாயிலோ?
முட்டையுடன் முடியாத
இரவு உணவை
பேச்சுலர்ஸ் ரசிப்பதில்லை...

ஒரு வடை + 
ஒரு டீ + 
ஒரு சிகரெட்.
= Bachelor's breakfast 
 
ஸ்டேட்டஸ் என்னும் சட்டையைக்
கழட்டி வைத்துவிட்டு ஷாப்பிங்  கிளம்பினால் 
தரமான பொருட்களுடன் வீடுதிரும்பலாம்.

முதல் பெக் - ஆசுவாசம்
இரண்டாவது பெக் - நினைவுகள்
மூன்றாவது பெக் - தத்துவம்
வந்தால்!
- மச்சி நீ தேறிட்ட.. டா.


வயிறும்  வழுக்கையும்தான் அழகு.
- 46 வயதினிலே.


வெள்ளையாக இருந்தால்
உப்புமா..
மஞ்சளாக இருந்தால்
கிச்சடி..
-ஹோட்டல் தத்துவம்.
 

ஆபிஸ்க்கு ரெயின் கோட் எடுத்துட்டு போகலாமா.? வேண்டாமா.?
குழப்பத்தில் இருந்தேன்..
நல்லவேளை ரமணன் டீவியில் வந்தார்.

வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்.
ஆங்காங்கே மிதமான முதல் கனத்த மழை பொழியும்...

...அப்போ.! எடுத்துட்டு போகவேண்டாம்...


பெரும் பசியோடு சாப்பிட கைக்கழுவ நிற்கையில், 
ஹோட்டல் வாஷ்பேஷனில் சிலர் 
பல்லு விலக்கி, முகம்கழுவி சோப்பு போட்டு குளிக்கிறார்கள்.. 
- வழிவிடுங்கடா பசிக்கிறது..


கஞ்சா, அபின், பிரௌன் சுகரைக் கூட 
ஈசியா கொண்டு போயிடலாம் ஆனா 
இந்த ஊருகாய் பாட்டிலை மட்டும் 
புடிங்கி வச்சிக்கிறாங்க ஏர்போட்ல.
- ரொம்ப கஸ்டம்ஸ்.

டியூஷன் கிளாஸ்
டான்ஸ் கிளாஸ்
கராத்தே கிளாஸ்
டிராயிங் கிளாஸ்
ஸ்போர்ட்ஸ்
ஸ்விம்மிங் என 
பறந்து விடுகிறாள்
இறக்கை முளைக்காத
பட்டாம்பூச்சி.
வாரநாட்களில் கிடைக்கும்
முத்தம் கூட கிடைப்பதில்லை
ஞாயிற்றுக் கிழமையில்...
 
பெரிய ஹோட்டலின் முன்
பர்ஸ்ஸை சோதித்துப் பார்த்துவிட்டு நுழைகிறது 
மிடில்கிளாஸ் வயிறு....

 தண்ணியோ!  சோடாவோ!  
எதுவும் மிக்ஸ் பன்னாம ராவா அடிச்ச சரக்கு மாதிரி 
சும்மா ஜிவ்வுனு ஏறிச்சி  "மதுவிலக்கு போராட்டம்".
ஆனா இப்போ! 
கத்தரி வெயிலுல மூனு பீர் அடிச்சிட்டு 
ஒண்ணுக்கு போனதுபோல ச..ர்ர்ர்ர்..ன்னு இறங்கிடுச்சி.
ஒருவேளை இந்த சரக்கும் போலியோ?


சாம்பார் எது? 
ரசம் எது?
புளிக்குழம்பு எது?
அது பொறியல்!
இது மோர்!
இது பாயாசம்!
- என கிண்ணத்தில் எழுதிவைப்பது உத்தமம்.
இது? 
எது? 
அது?
தெரியாமல் தடுமாறிப்போகிறது
ஃபுல்மீல்ஸ் ஹோட்டல் பசி. 
 
ரஜினிக்கு வயதாகிவிட்டது என்பதைவிட
அனுக்ஷாவுக்கு வயதாகிவிட்டது
என்பதுதான் பெரும் கவலை..
(ஹி.ஹி..லிங்கா பாத்தாச்சி)


சூப்பர் ஹிட் தமிழ் சினிமாப் பாடல் என்பது
லோக்கல் பாரிலோ அல்லது
ஹைக்கிளாஸ் பப்பிலோ பாடப்படுவதாகும்..


மல் நடித்த  படங்களை தேடித்தேடி பார்ப்பவரா நீங்கள்,
அப்படியானால் நீங்கள் பக்குவமடைந்து விட்டீர்கள் அல்லது
உங்களுக்கு வயதாகிறது என்று அர்த்தம் ..
 

காலையில் அலுவலகம் செல்லும் வழியில் 
மிகவும் கூட்டமாக இருந்தது 
என்ன காரணம்? என விசாரித்தேன். 
இன்னக்கி "புலி" வருகிறது என்றார்கள். 
இரவு திரும்புகையில் அங்கு யாரையும் காணோம்.
ஒருவேளை புலி அடித்திருக்குமோ!


Miss u Trisha
Now
Miss Trisha.
(டார்லிங்.....நமக்குதான்)
 
குழந்தைகளின் மழலையை கவனியுங்கள்..
ஹாரிஸ் ஜெயராஜ் மெட்டிற்கு பாடல் எழுதலாம்.
எல்லேமா.....