ரசித்த ஒன்று, எதிர்பார்க்கும் இரண்டு.சமீபத்தில் ரசித்த ஒரு திரைப்படமும் எப்பொழுது வெளிவரும் என எதிர்பார்ப்போடு காத்திருக்கும் இரண்டு திரைப்படங்களும் அதனைப்பற்றிய சிறிய அலசலும்.

A Millionaire's First Loveஆர்ப்பாட்டமில்லாத சாதாரண தயாரிப்பு, அனைவருக்கும் தெரிந்த பாட்டி வடைசுட்ட காலத்து கதை, ஜவுளிக்கடை பொம்மைபோல் ஹீரோ, அதே சைஸில் ஹீரோயின். நாலு தெரு இரண்டு சந்து ஆறு அல்லது புல்வெளி லொக்கேஷன், தாலாட்டும் வயலின் இசை, சலனமில்லாத ஒளிப்பதிவு இவற்றை வைத்துக்கொண்டு உணர்வுபூர்வமான திரைப்படத்தை கொரியன் சினிமாவால் மட்டுமே தரமுடியும். அதிலும் காதல் ஸ்பெஷல் என்றால் அவர்கள் வெளுத்து வாங்கி விடுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் ரசித்த திரைப்படம் "A Millionaire's First Love". பெரும் மலையையும் சமுத்திரத்தையும் புரட்டிப்போட்டுவிடும் பொல்லாத காதல் 18 வயது பணக்கார இளைஞன் ஒருவனின் வாழ்க்கையில் நுழைகிறது. அதன் விபரீதங்களை திடீர் மழையும் அதனைத் தொடர்ந்து வரும் வானவில் காட்சியைப் போன்றும், தென்றலின் நடுவே அமர்ந்து ஒரு இனிமையான கவிதையை வாசிப்பதை போன்றும் அழகாக படைத்திருக்கிறார்கள்.

மக்கள் கலைஞர்."டேய்! டேய்! ஒரு நிமிசம் அத வைடா"- என கரண்டியை காட்டி மிரட்டி டிவி ரிமோட்டை பிடுங்கி சப்தத்தை அதிகப்படுத்திவிட்டு அடுப்படியில் ஏதாவது வேலை செய்துகொண்டே அம்மா முணுமுணுக்கும் பாடல்கள் ஏராளம். ஆனால் அப்பாவிற்கு என்ன பாடல் பிடிக்கும்? அவர் எப்போதாவது ஒரு பாடலை மெய்மறந்து பார்த்து கேட்டு ரசித்து பாடியிருக்கிறாரா என்பது சந்தேகமே. காலையில் சுப்ரபாதத்தோடு எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜையறையில் பய பக்தியோடு சப்தமில்லாமல் சில ஸ்லோகங்களை அவர் உச்சரிப்பார். மங்கள இசையும் கர்நாடக சங்கீதமும் அவருக்கு கொஞ்சம் பிடிக்கும். அதனைத் தவிர்த்து அவருக்கு பிடித்த திரைப்பட பாடல்கள் என்றால் அது ஜெய்சங்கர் நடித்த படங்களிலிருந்து இருக்கக்கூடும்.


Village Girl - Street walk.

ஒத்திகை.

பிரமிடுகள் - சுவார(க)சிய தகவல்.
பிரமிடுகள் என்பது எழு அதிசயங்களில் ஒன்று என பாஸ்போர்ட் சைஸ் படம் போட்ட புத்தகத்தில் பார்த்த, படித்த நமக்கு சங்கர் புண்ணியத்தில் ஐஸ்வர்யாராயும் பிரசாந்தும் ஜீன்ஸ் படத்தில் முதன்முதலாக ஆடிப்பாடி சுற்றிக்காட்டினர். அதற்குப்பின் வெளிவந்த "தி மம்மி" என்ற ஹாலிவுட் திரைப்படம் பிரமிடுகளை வெகு அருகில் சென்று நமக்கு காட்டியது. இதனைத் தவிர்த்து எகிப்தில் இருக்கும் பிரமிடுகளும் அதில் புதைந்துள்ள உண்மைகளும் பரம இரகசியமானது. பிரமிடுகளின் உள்ளே சென்று ஆராய்ச்சி செய்வது பிரம்மிக்கத்தக்க ஒன்றாக இருக்கும் என்பதை விட, ஒரு தூரமாக ஓரமாக வெளியில் நின்று அண்ணார்ந்து பார்த்தால் கூட அது பிரம்மிக்கத்தக்க அதிசயமாகத்தான் தெரியும் ஏனென்றால் பிரமிடுகளை கட்டியது மனித செயல்களுக்கு அப்பாற்பட்ட ஒன்று. அதனை உண்மையாக்கும் விதத்தில் டாக்டர் "ஆலா ஷாஹீன்" (Ala Shaheen) என்பவர் எகிப்தில் சிறிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் உட்கார்ந்துகொண்டு பேரிச்சம்பழத்தை தின்று கொட்டையை துப்பிவிட்டு ஒரு செய்தியை வெளியிட்டார். அந்த செய்தி சாதாரண குல்ஃபி விற்கும் வியாபாரி முதல் நாசா விஞ்ஞானிகள் வரை திரும்பிப் பார்க்க வைத்தது.

அரிதாக கேட்கும் பாடல்கள்ஒரு திரைப்படத்தின் நீளம் அகலம் உயரத்திற்காக இசைவெளியீட்டில் இருக்கும் பாடல்கள் ஒன்றிரண்டை அந்த திரைப்படம் வெளியாகும்போது நீக்கிவிடுவார்கள். 24 மணிநேரமும் தேய்ந்துபோன இசைத்தட்டைபோல நீங்கள் கேட்டவைகளாக திரும்ப திரும்ப ஒளிக்கும் தொலைக்காட்சிகளின் பாடலை தவிர்த்து நீக்கப்பட்ட அந்த பாடல்களை பன்பலைகளில் மட்டுமே மிக அரிதாக கேட்ட முடியும். தேனீர் கடையில் கோப்பையை விழுங்கிய சிறிய ஆசுவாசத்தில், நெரிசல் நிறைந்த பேருந்தின் வியர்வை நாற்றத்தில், நகரம் உறங்கும் வேலையில் பக்கத்து அறையின் கரகர சப்தத்தில் என மிக அரிதாக கேட்ட அந்த பாடல்களின் முதல் வரியை பிடித்துக்கொண்டு அதன் ஜாதகங்களைத் தேடி சேமித்து வைத்திருக்கிறேன். அவற்றை சில நேரங்களில் மீண்டும் கேட்கும்போதெல்லாம் இந்த பாடல்கள் காட்சிகளாக இருந்தால் எப்படியிருக்கும் என மனதிற்குள் பயாஸ்கோப் ஓட்டிப் பார்த்ததுண்டு. அத்தகைய பாடல்களை அதன் பயாஸ்கோப்பை நமக்குத் தெரிந்த கட்டிக் ஒட்டிங் வேலைப்பாடுகளை செய்து தங்களின் பார்வைக்கு வைக்கலாம் எனத் தோன்றியது.


இரண்டு நிமிட நட்பு.

எக்ஸ்யூஸ்மி பாஸ் தீப்பெட்டி இருக்கா?

டாஸ்மாக் பாரிலும் தியோட்டரிலும் கிடைக்கும் அந்த இரண்டு நிமிட நட்பு அலாதியானது.

ஸ்டார்ஸ் சூப்பர் சிங்கர் (அனுபவம்) .
"மச்சான் எங்க இருக்க? ஸ்டார்ஸ் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ரெண்டு விஐபி டிக்கெட் இருக்கு ரெடியா இரு" என நண்பனிடம் இருந்து அழைப்பு வந்தது. போகலாமா? வேண்டாமா? என்ற இரண்டு கேள்விக்குறியை தூக்கிக்கொண்டு தூங்கி வழிந்த ஞாயிற்றுக்கிழமை மாலைப்பொழுதை எழுப்பி முகம் கழுவி சிங்காரித்து அழைத்துச் சென்றேன். ஆயிரம் நபர்கள் கூடிய அரங்கில் நிகழ்ச்சி தொடங்கியிருந்தது தொலைக்காட்சிகளில் பல சீசன்களில் பல எபிசோடுகளில் பாடிய சூப்பர் டூப்பர் சிங்கர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். விஐபி டிக்கெட் என்பதால் சற்று தாமதமாக சென்றாலும் மேடைக்கு அருகில் இரண்டாவது வரிசையில் பின்புறத்தை தட்டிவிட்டு கால்நீட்டி அமரும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்த்தாய் வாழ்த்தில் தொடங்கி பக்தி ரசம் கொஞ்சம் கொட்டி ரஹ்மானின் "ஒரு தெய்வம் தந்த பூவே" மெலடி பாடலுக்கு தாவியது நிகழ்ச்சி. எட்டுவயது சிறுமி ஒருத்தி பாடத் தொடங்கினாள், அவளுக்கு கோரஸ் கொடுக்க மேலும் சிலர் மேடையில் இருந்தனர் நிகழ்ச்சி கலைகட்ட ஆரம்பித்தது. இருக்கையிலிருந்து சற்று நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

Wallpaper (Mobile Photography) .

Toy Story - Sweet Couple (Mobile Photography).

My Father's Riffle - அப்பாவின் துப்பாக்கி (புத்தகம்).ஒரு இனம், மொழி, நாகரீகம், பண்பாடு போன்றவைகளை அதனை பின்பற்றும் மக்களோடு சேர்த்து மிதித்து நசுக்கியபின் சர்வாதிகாரம் தன் அரியணையில் பாதுகாப்பாக அமருகிறது". பழமையான பேரரசுகளின் ஆட்சி முதல் நமக்குத் தெரிந்த ஹிட்லரில் தொடங்கி, பாலஸ்தீனம் மற்றும் இலங்கை யுத்தம் வரை இவ்வாறு நசுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை உலகம் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. நன்கு முன்னேறிய இருபத்தியோராம் நூற்றாண்டில் கூட தங்கள் இனம், தமது மக்கள், தனிநாடு என உரிமைக்காகவும் வாழ்வியலுக்காகவும் போராடக் கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார். காலம் அவர்களை அகதிகளாகவும் அடையாளமற்றவர்களாகவும் அலையவிட்டாலும் நாளை விடிந்துவிடும் என்ற நம்பிக்கையோடும் கனவோடு அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையை சேர்ந்தவர்கள்தான் குர்திய மக்கள் அவர்களுக்கு இருக்கும் கனவு "குர்திஸ்தான்".

B/W Nature (Mobile Photography) .

5 லட்சம் ஆணுறைகள் (வேடிக்கையான நிகழ்வு).1991-ஆம் ஆண்டு குவைத் நாட்டை சதாம் உசேன் ஆக்கிரமித்து இருந்த நேரம் மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிடுமோ என உலகம் அஞ்சியது. எது நடந்தாலும் பாப்கார்ன் கொறித்துக்கொண்டு வேடிக்கைப் பார்க்கும் ஐ நா சபை இந்தமுறை முந்திக்கொண்டு குவைத்திலிருந்து படைகளை வாபஸ்பெற வேண்டும் என சதாம் உசேனுக்கு நிபந்தனையும் அதற்கான கெடுவும் விதித்தது. நைனா சொல்லியே கேட்காத சதாம் ஐ நா சொல்லியா கேட்கப்போகிறார், நிபந்தனை கடிதத்தை சுருட்டி காதுகுடைந்து தூக்கியெறிந்தார். இதற்கிடையில் கொடுத்த கெடுவும் முடிய குவைத்தை மீட்க அமேரிக்கா மற்றும் பிரிட்டிஷ் படைவீரர்கள் சவூதி பாலைவனத்தில் குவிக்கப்பட்டனர். இந்த படைகள் மேலிடத்தின் உத்தரவிற்காக பல நாட்கள் வெய்யிலிலும் புழுதியிலும் காத்திருந்தனர்.

தீபாவளி பட்டாசு (கொஞ்சம் அனுபவம் அதனுடன் குட்டி தகவல்).அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து சூரியனை எழுப்பி குட்மார்னிங் ஹேப்பி தீபாவளி சொல்லிவிட்டு, அண்டா நிறைய கொதிக்கும் வெந்நீரில் எண்ணெய் தேய்த்து குளித்து, பற்கள் தந்தியடிக்க குளிரில் நடுங்கியபடி புதிதாக எடுத்த ஜட்டி பனியன் தொடங்கி மஞ்சள் பூசி சாமிக்கு படைத்த ஆடைகள் அனைத்தையும் உடுத்திக்கொண்டு, நெற்றி நிறைய விபூதி பட்டையோடு அம்மா அப்பா காலிலும் போட்டோவில் சிரிக்கும் தாத்தா முறைக்கும் பாட்டி காலிலும் விழுந்து வணங்கி, சீனி உருண்டையை வாய்க்குள்லேயும் சீப்பு முறுக்கை பாக்கெட்டிலும் அதக்கிக்கொண்டு, மங்கலான வெளிச்சத்தில் ஒரு 1000 வாலா சரவெடி பட்டாசை வைக்கும்போது தீபாவளி கலைகட்ட ஆரம்பிக்கும்.

உலகின் வயது (குட்டி தகவல்).


நாம் வாழும் உலகின் வயது எத்தனை இருக்கும்?


4.54 X 109 பில்லியன் வருடங்கள் என கதிரியக்க காலமதிப்பீடு (Radiometric dating) மூலம் அறிவியல் பூர்வமாக கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். இதனைத் தவிர்த்து வேறு யாராவது உலகின் வயதை குறித்து வைத்திருக்கிறார்களா? என ஆராய்ந்துப் பார்க்க தேடினால் நமது பஞ்சாங்கத்தில் அதற்கான விடை இருக்கிறது. எந்தவொரு வசதிகளற்ற காலகட்டத்தில் அண்டம் முதல் அணு வரை அசால்ட்டாக அளந்து, போகிற போக்கில் ரைம்ஸாக பாடிவிட்டு (பாடலாக எழுதிவிட்டு) போனவர்கள் நம் முன்னோர்கள். அவர்களை நம்பி இந்த உலகின் தற்போதைய வயதை தெரிந்துகொள்ள அந்த பாம்பு படம் போட்ட பஞ்சாங்கத்தை புரட்டலாம் வாருங்கள்.

Ishq Bina (beat of passion) - பாடல்.ரஹ்மான் எனும் இசைமேதை ஆஸ்கார் படிக்கட்டுகளில் ஏற பயிற்சி செய்துகொண்டிருந்த நேரத்தில் வெளிவந்த உன்னதமான திரைப்படம் Taal (தாளம் ) பெயரைப் போலவே படம் முழுவதிலும் நம்மை தாளம் போடவைத்தது அவரது இசை. பள்ளிப்பருவத்தில் வெளிவந்த இந்த பாடல்களை தற்போது கேட்டாலும் மெய்சிலிர்க்கும். Taal se Taal, Kahin Aag Lage, Ramta Johi என ஒரு டஜன் பாடல்கள் இந்த திரைப்படத்தில் இருந்தாலும் Ishq bina பாடல் மட்டும் எதோ மெஸ்மரிசம் செய்வதுபோல் தோன்றும். Kavitha Krishnamurthy குரலில் மெலடியாக தொடங்கி Sukhwinder Singh குரலில் அதிரடியாக கடக்கும் போதும் பாடலின் இறுதியிலும் ரஹ்மானின் மாயாஜால ஹாரிபார்ட்டர் வித்தையை அதில் உணரலாம். இந்த பாடல் பிடிக்கும் என்பதைவிட வெறியோடு பிடிக்கும் என்பதே சொல்லச் சிறந்தது. பயாஸ்கோப் என்னும் பகுதிக்காக அந்த பாடலை அடியேனின் கைவண்ணத்தில் காட்சிப்படுத்த நினைத்தேன் எப்போதும் ரசிக்கும் அந்த பாடலுக்காகவும் ரஹ்மானின் ரசிகனாகவும் ஒரு சின்ன முயற்சி.