☰ உள்ளே....

ஊ..லலல்லா. (A Magical Song - Bombay Dreams).எப்பொழுதும் விவாதத்திலும் குழப்பத்திலும் இருக்கும் ஐ.நா சபையை இசையால் மயக்கும் வாய்ப்பு ரஹ்மானிற்கு கிடைத்திருக்கிறது. அவரது இசை வாழ்க்கையில் மற்றுமொரு மைல்கல்.(இந்த வாய்ப்பை பெறும் இரண்டாவது இந்தியர்). இந்த வளர்ச்சிக்கு 2002 ஆம் ஆண்டு ரஹ்மான் லண்டனில் நடத்திய "Bombay Dreams" நிகழ்ச்சியும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். "Meera Syal" மற்றும் "Thomas Meehan" என்பவர்களின் எழுத்தை அழகிய இசை நாடகமாக அப்போது அங்கு அரங்கேற்றியிருந்தனர். "Don Black" என்பவர் ரஹ்மானின் மெட்டிற்கு மயக்கும் வரிகளை எழுதியிருந்தார். சாதாரண சேரியில் வாழ்க்கை நடத்தும் ஆகாஷ் என்பவனின் பாலிவுட் திரையுலகில் பெரிய கதாநாயகனாகும் கனவும், அதனை தொடரும் சிக்கலான காதலும் நாடகத்தின் கதை. ஏற்கனவே இந்திய திரைப்படங்கள் சிலவற்றில் தாம் இசையமைத்த பாடல்களையும் இசைக்கோர்வைகளையும் ரஹ்மான் இதில் பயன்படுத்தியிருந்தார். Bombay awakes, Bombay Dreams, Like an Eagle, Love's never easy, Dont Release me, Shakalaka baby, Ooh la la la என ஒரு டஜனுக்கும் மேலான பாடல்களாலும் பின்னணி இசையாளும் லண்டன்வாசிகளை அவர் கட்டிப்போட்டிருந்தார் (இரண்டு வருடங்கள்). அதிலும் மின்சாரகனவு திரைப்படத்தில் இடம்பெற்ற ஊ..லலல்லா Ooh la la la பாடலை Anupam, Kitty, Rani என்ற பாடகர்கள் பாட லண்டன்வாசிகள் அந்த பாடலை முனுமுனுத்தபடியே நாடக அரங்கத்தைவிட்டு சென்றனர் (மகாராணி உட்பட).லண்டனையும் தாண்டி ரஹ்மானை உலகறிய செய்த நிகழ்வு Bombay Dreams. ஆஸ்கார் முதல் ஐ.நா வரை செல்ல அவருக்கு வழித்தடமும் அமைத்துக் கொடுத்தது. அந்த தொகுப்பில் இடம்பெற்ற ஊ..லலல்லா பாடலை அடியேன் அடிக்கடி முனுமுனுப்பதுண்டு. பயாஸ்கோப் பகுதிக்காக அதை காட்சிபடுத்தும் ஆசையும் இருந்தது ஒரு சிறிய முயற்சி, முடித்துவிட்டேன்.