☰ உள்ளே....

இராஜ வாரிசு (பாடல்கள்) .நேரம், காலம், இராசி, சென்டிமெண்ட் இந்த நான்கும் எதையும் விட்டுவைப்பதில்லை, கலையுலகத்திற்கும் கலைஞர்களுக்கும் கூட இது ஏகப் பொருந்தும். ரஹ்மான் இருந்த இடத்தில் விழுந்த சிறிய விரிசலை இசையால் நிரப்பியவர் இந்த இராஜவாரிசு. சிறுவயது முதல் இசைஞானம் நிறைந்திருந்த இவர் முறைப்படி டி.வி. கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் கர்நாடக சங்கீதமும், மலையாள இசையமைப்பாளர் வி. தெட்சிணாமூர்த்தி என்பவரிடம் இசை நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டார். வீடு முழுவதும் இசை வியாபித்திருக்கும் அணுக்கிரகம் கிடைத்த அவருக்கு இசைஞானியே தந்தையாக வாய்க்கப்பட்ட கடவுளின் கிருபையும் இருந்தது. பியானோ மற்றும் கீபோர்டு வாசிப்பதில் தனித்து விளங்கிய இவர் 14 வயதில் தம் தந்தையின் சில திரைப்படங்களில் தான் பயின்றதை வாசித்துக் கொண்டிருந்தார். அலெக்சாண்டர் என்ற தமிழ் திரைப்படத்திற்கு முதன்முதலில் தனித்து இசையமைக்க, அதற்குப் பிறகு வெளிவந்த மாணிக்கம் திரைப்படம் இவரை கவணிக்க வைத்தது. மனதை கவரும் மென்மையான பாடல்களாலும் பின்னணி இசையாலும் நம்மை கட்டிப்போட்ட இவரது திரையுலக இசை வாழ்க்கையில் மேலே குறிப்பிட்ட நான்கும் குறுக்கிட புதிய வாய்ப்புகள் குறைந்தது. இன்று சில பின்னணி இசைக் கோர்வையிலும், ஒன்றிரண்டு திரைப்படங்களில் மட்டும் தலையைகாட்டும் இவரை நாம் மறந்தேவிட்டோம். ஆனாலும் அவர் இசையமைத்த பாடல்கள் கார்த்திக்ராஜா ஹிட்ஸ் என தனித்து காற்றில் ஏதோவொரு வகையில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. அப்படி காற்றில் தவழும் கார்த்திக்ராஜாவின் நினைவுகளாக அடியேன் ரசிக்கும் பாடல்களில் சில தங்களின் பார்வைக்கும்.