☰ உள்ளே....

பிராந்தி...தலைப்பை படித்தவுடன் முகத்தில் 1000 வாட்ஸ் பல்பு எரிகிறதா? தொடர்ந்து படியுங்கள். குடியின்றி அமையாது இன்றைய உலகில் அதிகம் அருந்தப்படும் சோமபானம் இந்த பிராந்தி. டச்சுநாட்டை சேர்ந்த அந்த பெயர் தெரியாத ஏற்றுமதியாளர் இல்லையென்றால் தனி ஆளையும் நம் அரசையும் ஆளும் பிராந்தி நமக்கு கிடைத்திருக்காது.

திராட்சையிலிருந்து நொதித்து பெறப்பட்ட பழச்சாற்றை (Wine) வசதிபடைத்தவர்கள் மட்டும் அருந்திக்கொண்டிருந்த 16 -ஆம் நூற்றாண்டின் இறுதியில் போலந்து துறைமுகத்தில் பெயர் தெரியாத அந்த ஏற்றுமதியாளர் கப்பலில் வைன்கள் நிறைந்த பேரல்களை ஏற்றிக் கொண்டிருந்தார். ஏற்றுமதிக்கான சேவை வரியை மிச்சம்பிடிக்க நினைத்த அவரது மூளைக்குள் பல்பு எரியத் தொடங்கியது. வைன்களில் உள்ள 10-13 % ஆல்கஹால் சதவீதத்தை கூட்டி எடையை குறைத்து ஏற்றுமதியை அதிகப்படுத்தி வரியையும் தவிர்க்களாம் என அவர் நினைத்தார். நீரை விட கொதிநிலை குறைவாக கொண்ட ஆல்கஹாலை Distilation என சொல்லக்கூடிய பகுத்துவடிக்கும் முறைக்கு அவர் உட்படுத்தினார். அவரது இந்த சிக்கன நடவடிக்கையிலிருந்து பெறப்பட்டதே ஆல்கஹால் சதவீதம் நிறைந்த பிராந்தி ஆகும் . Brandewijn (burnt wine) என்ற டச்சு மொழியிலிருந்து வந்த பெயர் Brandy.அந்த பெயர் தெரியாத ஏற்றுமதியாளர் ஏதோ அவசரத்திற்கு செய்தாலும் பிறகு வந்தவர்கள் முறையாக பிராந்தியை தயாரிக்க தொடங்கினர். நொதித்த பழச்சாரே பிராந்தியின் முக்கிய மூலப்பொருளாகும். முதலில் நொதித்த பழச்சாறு "Pot sills" என்ற காப்பரிலான அமைப்பில் செலுத்தி சூடுபடுத்தப்படுகிறது. மூன்று பகுதியாக பிரிக்கப்பட்ட அந்த அமைப்பின் முதல் பகுதியில் பழச்சாறு 10-15% ஆல்கஹால் நிலையிலிருந்து 70-75% நிலைக்கு மாறுகிறது. அடுத்தடுத்த இரண்டு நிலைகளிலும் கொதிக்கவைக்கப்பட்டு தேவையற்ற மனம், நிறம், சுவை போன்றவை ஆவியாக்கப்படுகிறது. அவ்வாறு பகுத்துவடிக்கப்படும் ஆல்கஹால் Pot still அமைப்பில் Bulbous top என்ற பகுதியிலிருக்கும் வளைந்த குழாயின் மூலம் பெறப்பட்டு குளிர்விக்கப்படுகிறது, பெறப்பட்ட ஆல்கஹால் இரண்டாவது முறையாக பகுத்து வடிக்கப்படுகிறது. அதிலிருந்து கிடைக்கும் சுவையற்ற பிராந்தி Oak மரத்தால் செய்யப்பட்ட பீப்பாய்களில் அடைக்கப்படுகிறது. பீப்பாய்க்குள் தங்கியிருக்கும் வருடத்தின் அளவைப் பொருத்தே பிராந்தியின் சுவையும் தகுதியும் அளவிடப்பட்டு விற்பனைக்கு வருகிறது. விற்பனையாகும் பிராந்தி பாட்டில்களில் பெயர்களுக்குப் பின்னால் சில ஆங்கில எழுத்துக்கள் குறிப்பிடப்பட்டுள்ளதை காண நேரிடலாம். அந்த எழுத்துகளே பிராந்தியின் தகுதியையும் தன்மையையும் நமக்கு தெரிவிக்கின்றன.

அடிப்படை:

C - Cognac
E - Extra
F - Fine
O - Old
P - Pale
S - Specific
V - Very Special
X - Extra

பொதுவானவை:

A.C - Two years ols
V.O - Very Old
Varietal - Varietal Grape
Vintage - Aged and Vintage
V.S - Very Special
V.S.O.P - Very Superior Old Pale
X.O - Extra Old or Nepoleon.

திராட்சைபழம் பெரும்பாலும் பிராந்தி தயாரிக்க உபயோகப் படுத்தப்படுகிறது. அதிலிருக்கும் அதிகப்படியான அமிலமும் குறைவான சர்க்கரையும் நொதித்தல் வினைக்கு பெரிதும் உதவுகின்றது. போலந்து நாட்டில் பிளம்ஸ் பழங்களிலிருந்தும், ஜப்பானில் அரிசியிலிருந்தும் அமேரிக்காவில் சோளத்திலிருந்தும் மற்ற சில நாடுகளில் ஆப்பிள், கரும்புச்சாரு, தேன், பால், கோதுமை, மற்றும் உருளைக் கிழங்கிலிருந்தும் பிராந்தி தயாரிக்கப்படுகிறது. 16-17 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே பிராந்தி புழக்கத்திற்கு வந்தது. அதற்குமுன் எகிப்தின் நாகரீகத்தில் பிராந்தி தயாரிக்கப்பட்டு விஷேச நாட்களில் பரிமாறப்பட்டிருக்கிறது. மேலும் கி.பி 800 ஆம் ஆண்டில் இந்தியர்கள், தற்போது காலையில் எழுந்து காபி போடுவதைபோல் எளிதாக பிராந்தியை வீட்டிலேயே தயாரித்திருக்கின்றனர் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். அதாவது பகுத்துவடித்தல் (Distillation) என்ற வேதியியல் நுட்பமெல்லாம் தெரியாமல் பிராந்தியை கண்டுபிடித்த முன்தோன்றி மூத்த "குடி"மக்கள் நாம்.