☰ உள்ளே....

ரிமோட்- கிளாசிக் ஹிந்தி பாடல்கள்.அலுவலகம் முடிந்து களைத்து சலிப்புடன் அறைக்குள் நுழைந்ததும் முதலில் தேடுவது டிவி ரிமோட்டைதான். வழக்கமான அழுது புலம்பும் சீரியல்களில் தொடங்கி , தலைகீழாக வித்தைகாட்டும் நடன நிகழ்ச்சியைத் தொட்டு, மேடைப் பாடல்களையும் சூப்பர் சிங்கர்களையும் கிடுகிடுவென கடந்து, பாட்டிசுட்ட வடையை யார் திருடியது? என்ற செய்தி சேனல்களின் (வெட்டி) விவாதத்திலிருந்து தப்பித்து, கடவுள் அழைக்கிறார் எழுப்புகிறார் என்ற மதம் சம்பந்தப்பட்ட சேனல்களில் ஒளிந்து, உல்லாச வாழ்விற்கு உற்சாகத்திற்கு லேகியம் விற்கும் ஆன்லைன் நிகழ்ச்சியில் இரண்டு நிமிடம் நின்று (ஹி.ஹீ) அடியேன் Set max சேனலை வைத்துவிடுவேன். அந்த சேனலில் இரவு பத்துமணிக்குமேல் கிளாசிக் ஹிந்திபாடல்களை ஒளிபரப்புகிறார்கள். வாங்கிவந்த காய்ந்த சப்பாத்தியையோ ஓய்ந்த தோசையையோ பிய்த்து போட்டுவிட்டு, அடுத்தநாள் வேலைக்கான உடைகள் முதல் ஷூ வரை ஒழுங்குபடுத்தி, நினைவுகளையும் கனவுகளையும் தூசுதட்டி, ஏதாவது ஒரு புத்தகத்தை துணைக்கு வைத்துக்கொண்டு படுக்கையில் விழுந்து, வேறெந்த சேனல்களையும் மாற்றாமல், கருப்பு வெள்ளை முதல் கண்கவரும் எழுபதுகளின் அந்த ஹிந்தி பாடலைகளை கேட்டுக்கொண்டே தூங்குவது அடியேனின் வழக்கம்.

இரைச்சல் நிறைந்த பகல்பொழுதை தட்டி ஆசுவாசப்படுத்தி தூங்க வைக்க இரவிற்கு தாலாட்டு தேவைப்படுகிறது. அதற்கு அவ்வபோது ஒளிபரப்பப்படும் இத்தகையை கிளாசிக் பாடல்களே துணை நிற்கின்றன. அவ்வாறு, பகலின் சப்தத்தை கிரகணமாய் விழுங்கும் இரவின் நிசப்தத்தில் அடியேன் கேட்டு ரசித்த கிளாசிக் ஹிந்தி பாடல்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றை தங்களின் ஆசுவாசத்திற்காகவும் பகிர்கிறேன்.

Akhiyon Ke Jharokon se ( Akhiyon Ke Jharokon se).

Jhuki Jhuki si Nazar (Arth)

Tumko Dekha To Yeh Khayal Aaye (Saath Saath)

Bahon Mein Chale aao (Anamika)

Sara Pyar Tumhara (Anand Ashram)

Aaj Kal Paon Zamin Par Nahin (Ghar)