இடுகைகள்

September, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
☰ உள்ளே....

ஓநாய் குலச்சின்னம்.

படம்
இன்றைய வளர்ந்த நாகரீகம் என்பது காடுகள் மலைகள் ஆறுகள் சமவெளி பிரதேசம் என பிரதான இடங்களை காவுகொடுத்து நிர்மாணிக்கப்பட்டவை. சிறு புற்கள் பூச்சிகள் பறவைகள் விலங்குகள் உட்பட அதனை சார்ந்து வாழ்ந்த பல உயிர்கள் (பழமையான மனிதர்கள் உட்பட) அனைத்தையும் அழித்துவிட்டு அவற்றின் ஆன்மாவில்தான் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்த செய்தியும், சிறுத்தையை பிடித்த கதைகளும் அவ்வபோது நமக்கு இவற்றையெல்லாம் நினைவுபடுத்திச் செல்கின்றன. அவ்வாறு அழிக்கப்பட்ட சீனாவின் ஆயிரம் ஆண்டு பழமையான மேய்ச்சல் நில நாகரீகம் ஒன்றின் கதைதான் ஓநாய் குலச்சின்னம் (Lang Tuteng - Wolf Totem). "இயற்கையால் ஒவ்வொன்றின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியும் ஒற்றை மனிதனின் பேராசையை தவிர்த்து" என்ற மகாத்மாவின் வரிகளுக்கு தீனிபோடுகிறது இந்த நாவல்.
கலாச்சார புரட்சியை தொடர்ந்து சீனாவில் மேற்கொள்ளப்பட்ட புரட்சி நடவடிக்கைகள் ஏராளம் அவற்றுள் ஒன்று பழங்குடி மற்றும் கிராமங்களில் நிலவிவரும் நான்கு பழமைகளான பழைய சிந்தனை, பழைய கலாச்சாரம், பழைய சடங்குகள், பழமையான பழக்கவழக்கங்களை அகற்றி புதிய புரட்சியை விதைப்ப…

Kiss Me.

படம்

கனவு மெய்ப்பட வேண்டும்.

படம்
காலையில் அலாரம் வைத்து அதற்குமுன் எழுந்து, மாமியாருக்கு டீ கணவருக்கு காபி குழந்தைகளுக்கு ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்து. இட்லிக்கு ஜோடி சட்ணியா சாம்பாரா பொடியா யோசித்து காலை உணவு தயாரித்து, பள்ளி-அலுவலகம் செல்லும் குழந்தைகளை ஒழுங்குபடுத்தி, வாசலில் நின்று வழியனுப்பி, அவசரமாக மிச்சத்தை அள்ளிப்போட்டு வயிற்றை நிரப்பி, பாத்திரங்களை கழுவி, தரையை சுத்தம் செய்து, துணிகளை துவைத்து அலசி காயவைத்து மடித்து, மதிய உணவும் மாலை பலகாரமும் செய்து, குழந்தைகளோடு கொஞ்சி விளையாடி, செடி கொடிகளுக்கு தண்ணீர்விட்டு, கிடைக்கும் நேரத்தில் டிவியில் தோன்றும் சீரியலையும் பக்கத்துவீட்டு கதையையும் உள்வாங்கிக் கொண்டு, இரவு சப்பாத்திக்கு மாவு பிசைந்து, ஒரு நாளை ஒரு மாதிரியாக முடித்து, அனைவரும் உறங்கியபின் களைத்துப்போய் சாயும் சாதாரண வாழ்க்கை குஜராத்தில் வசித்துவந்த "ப்ரீத்தி சென் குப்தா" என்பவருக்கு சலிப்புத்தட்டியிருந்தது. ஒரு நாள் அவர் கணவரிடம் தனியாளாக இந்த உலகை சுற்றிப் பார்க்கும் தனது நீண்டநாள் ஆசையை மெல்ல கூறினார்.
குஜராத்தி ஹிந்தி கொஞ்சம் சமஸ்கிருதம் இதை வைத்துக்கொண்டு தனி மனுசியாக உலகை சுற்ற நினைத்த ப்…

ஒரு தொலைதூர இரயில் பயணத்தில்..(கிறுக்கல்கள்).

படம்

மாரிமுத்து அண்ணனும் முதலியார் மளிகைகடையும்.

படம்
எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே? சில முகங்களை பார்க்கும்போது தோன்றக்கூடும். அதுவே சொந்தஊரை மறந்து எங்கோ ஓடித்திரிந்து ஏதாவது ஒரு பண்டிகைக்கு மட்டும் திரும்பும் என்னைப்போன்ற சிலருக்கு ஊரில் புதிதாக யாரைப் பார்த்தாலும் மனதில் அடிக்கடி தோன்றும், அன்றும் அப்படித்தான் இருந்தது. முண்டாபனியனுடன் நீலக்கலர் லுங்கியில் சற்று கனத்த கருத்த உருவத்துடன் பேக்கரியில் கண்ணாடிப்பெட்டிக்குள் சுடச்சுட கேக்குகளை அடுக்கிக் கொண்டிருந்த அந்த முகம் எங்கேயோ பார்த்து பழகியதுபோல் தோன்றியது. டீயை உறிஞ்சியபடி குறைவான GB கொண்ட என் மெமரிகார்டின் (மூளை) போல்டர்களில் தேடினேன் சட்டென நினைவுக்கு வந்தார் முதலியார் மளிகைகடையில் வேலைசெய்த மாரிமுத்து அண்ணன்.
காலணா காசை கவர்மெண்ட் கையால் பெற்று மாதத்திற்கு ஒருமுறை மட்டும் மளிகை சாமான்களை வாங்கி பாட்டில்களிலும் டப்பாக்களிலும் அஞ்சரை பெட்டியிலும் நிரப்பி மாதக்கடைசியில் தலைகீழாக தட்டிப்பார்க்கும் நடுத்தர குடும்பம் எங்களது. முதல் தேதி தொடங்கியதும் பிள்ளையார்சுழி போட்டு வெல்லம் - 1 கி என இனிப்போடு மளிகை சாமான்களுக்கான பட்டியலை தயார் செய்வோம். அந்த பட்டியலை அப்பா வேலைக்குச் செல்ல…

Sweet Couple 2 (Mobile Photography) .

படம்

கொல்கத்தா பயணமும் வங்கமொழி பாடல்களும்.

படம்
இந்தியாவின் முதல் தலைநகரம் கிழக்கிந்திய கம்பேனியும் இன்னபிற வெளியாட்களும் விளையாடிய தளம், சுதந்திர போராட்டத்திலும் மதக் கலவரத்திலும் கொதித்த பூமி, உலகின் மக்கள்தொகை நிறைந்த இடம், குப்பை நகரம், காளிதேவியின் பிறப்பிடம், கம்யூனிசம் ஆண்ட கோட்டை என பல சிறப்புகள் பெற்ற கொல்கத்தாவிற்கு செல்லும் வாய்ப்பு இரண்டாவது முறையாக கிடைத்தது. எங்கு பயணித்தாலும் தொழில் சம்பந்தமான வேலையை தவிர்த்து எனக்கான சில நேரங்களை கொஞ்சம் ஒதுக்கிக்கொள்வேன். அங்குள்ள தெருக்களைச் சுற்றுவது, வகையாக சாப்பிடுவது, புத்தகம், சினிமா, பாடல்கள் என அந்த நேரத்தில் புதிதாக எதையாவது தேடுவதை வாடிக்கையாக வைத்திருப்பேன். ஆனால் இந்த கொல்கத்தா பயணத்தில் எதையும் நிர்மாணிக்க முடியாமல் போனது. தங்கியிருந்த அறையில் சன்னலை வெறித்தபடியே பாதி நாட்களின் பொழுது கழிந்தது. கொல்கத்தா நண்பர் Mohit மட்டும் சற்று ஆறுதலாக இருந்தார், நானும் அவரும் வங்கமொழி படங்களையும் சில பாடல்களையும் பற்றி ஒருநாள் பேசிக் கொண்டிருந்தோம். வருடம்தோறும் தேசிய விருதிற்கான வரிசையில் முதலில் நிற்கும் வங்கமொழி படங்களில் சிலவற்றை அடுத்தநாள் அவர் எனக்காக தேடிப்பிடித்து வாங்கிவந…

பொருத்துக.

படம்

Tsotsi - அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்..

படம்
எத்தகைய கடினமான கல்மனதையும் அன்பு என்ற அம்பு துளைத்துவிடும்.- அன்னை தெரசா.

ஒரு மனிதன் பிறக்கும்போது அவன் உடல் உறுப்புகளைப் போல மனதும் மிருதுவாகத்தான் இருக்கிறது சமூகமும், வளர்ப்பும், காலச் சூழ்நிலையும் ஒருவனை கல்மனம் படைத்தவனாக மாற்றிவிடுகிறது. இன்றைய சூழலில் குற்றவாளியாக நிற்கும் ஒவ்வொருவரின் மனதில் ஏதோவொரு மூலையில் அன்பு ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. பரிசீலிக்கப்படாத அந்த அன்பே அவர்களை குற்றவாளியாக நிறுத்தி வேடிக்கை பார்க்கிறது. இந்த திரைப்படத்தில் வரும் நாயகனின் கதையும் இத்தகையதே. தாயை இழந்து தந்தையின் கொடுமைக்கு பயந்து தெருவோரம் வளர்ந்து கொலை, கொள்ளை என வாழ்ந்துவரும் வாழ்க்கையில் மூன்றுமாத கைக்குழந்தை குறுக்கிடுகிறது, இறுகிப்போன அவனது கல்மனதிலிருந்து அன்பை மீட்டெடுக்கிறது.
நுரையீரல் புற்றுநோயால் தாயை இழந்த David தந்தையின் கொடுமைக்கு ஆளாகிறான். அவரிடமிருந்து தப்பித்து நகரத்திற்கு வெளியே தெருவோரம் வசிக்கும் கைவிடப்பட்ட சிறுவர்களோடு மூர்க்கத்தனமாக வளர்கிறான். நண்பர்களான Butcher, Aap மற்றும் Boston என்பவர்களுடன் இணைந்து சிறுசிறு திருட்டு கொள்ளை என வாழ்ந்துவரும் அவன் "Tsotsi"…

ருசியான வாழ்க்கை.

திங்கள்
முத்து மெஸ்,
வள்ளி அக்கா
தள்ளுவண்டிக் கடை.
செவ்வாய்
காரக்குழம்பிற்காக
காரைக்குடி உணவகம்,
நாசர்பாய்
முட்டை தோசை.

பிராந்தி...

படம்
தலைப்பை படித்தவுடன் முகத்தில் 1000 வாட்ஸ் பல்பு எரிகிறதா? தொடர்ந்து படியுங்கள். குடியின்றி அமையாது இன்றைய உலகில் அதிகம் அருந்தப்படும் சோமபானம் இந்த பிராந்தி. டச்சுநாட்டை சேர்ந்த அந்த பெயர் தெரியாத ஏற்றுமதியாளர் இல்லையென்றால் தனி ஆளையும் நம் அரசையும் ஆளும் பிராந்தி நமக்கு கிடைத்திருக்காது.
திராட்சையிலிருந்து நொதித்து பெறப்பட்ட பழச்சாற்றை (Wine) வசதிபடைத்தவர்கள் மட்டும் அருந்திக்கொண்டிருந்த 16 -ஆம் நூற்றாண்டின் இறுதியில் போலந்து துறைமுகத்தில் பெயர் தெரியாத அந்த ஏற்றுமதியாளர் கப்பலில் வைன்கள் நிறைந்த பேரல்களை ஏற்றிக் கொண்டிருந்தார். ஏற்றுமதிக்கான சேவை வரியை மிச்சம்பிடிக்க நினைத்த அவரது மூளைக்குள் பல்பு எரியத் தொடங்கியது. வைன்களில் உள்ள 10-13 % ஆல்கஹால் சதவீதத்தை கூட்டி எடையை குறைத்து ஏற்றுமதியை அதிகப்படுத்தி வரியையும் தவிர்க்களாம் என அவர் நினைத்தார். நீரை விட கொதிநிலை குறைவாக கொண்ட ஆல்கஹாலை Distilation என சொல்லக்கூடிய பகுத்துவடிக்கும் முறைக்கு அவர் உட்படுத்தினார். அவரது இந்த சிக்கன நடவடிக்கையிலிருந்து பெறப்பட்டதே ஆல்கஹால் சதவீதம் நிறைந்த பிராந்தி ஆகும் . Brandewijn (burnt wine) என்ற டச…

Arabian Girl.

படம்

நான் யார் தெரியுமா?

படம்
நான் யார் தெரியுமா? என்னோட ஸ்டேடஸ், முன்-பின்புலம் தெரியுமா? தலைக்கனத்தோடு நான் என்ற அகந்தை நம்மில் அனைவருக்குமே உண்டு. அதாவது நான்தான் சிறந்தவன்(வள்) என்ற மாயை. ஆனால் சிறுசிறு தாவரங்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என இந்த பூமியில் வாழும் அற்ப உயிர்கள் ஒவ்வொன்றிற்கும் நம்மைவிட சில தனித்துவம் இருக்கிறது இருந்தும் அவைகள் எதையும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. மரங்கொத்தி பறவைக்குத்தான் தலைக்கனம் (மண்டை ஓடு) அதிகம். அது ஒரு பெரிய வலுவான மரத்தை துழையிட்டு அழகான தன் வீட்டை மட்டுமே கட்டிக்கொள்கிறது. இதுபோன்ற சில சுவாரசியமான தகவல்களை ரசிக்கலாம் வாருங்கள்.
கரப்பான் பூச்சிகள் (Cockroaches) .

கிட்டத்தட்ட 320 மில்லியன் வருடங்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் இந்த பூமியின் வளர்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரே உயிரினம் கரப்பான் பூச்சிகள். அழிந்து போன டைனோசார்களுக்கே ஹாய் சொன்ன கரப்பான் பூச்சியின் உடல் அமைப்பு மிகவும் சிறப்பானது. இந்த உலகம் மீண்டும் ஏதாவது ஒரு காரணங்களால் அழிந்து போனாலும் அல்லது மாற்றமடைந்தாலும் இவைகள் வெகு விரைவாக உயிர்பெற்று பல்கிப்பெருகி தன் இனத்தை நிலைநாட்டிக்கொள்ளும். அதனால…

தண்ணீர் வேண்டி அய்யனாருக்கு படையல் (கிறுக்கல்கள்).

படம்

Sweet Couples (Mobile Photography)

படம்

ரிமோட்- கிளாசிக் ஹிந்தி பாடல்கள்.

படம்
அலுவலகம் முடிந்து களைத்து சலிப்புடன் அறைக்குள் நுழைந்ததும் முதலில் தேடுவது டிவி ரிமோட்டைதான். வழக்கமான அழுது புலம்பும் சீரியல்களில் தொடங்கி , தலைகீழாக வித்தைகாட்டும் நடன நிகழ்ச்சியைத் தொட்டு, மேடைப் பாடல்களையும் சூப்பர் சிங்கர்களையும் கிடுகிடுவென கடந்து, பாட்டிசுட்ட வடையை யார் திருடியது? என்ற செய்தி சேனல்களின் (வெட்டி) விவாதத்திலிருந்து தப்பித்து, கடவுள் அழைக்கிறார் எழுப்புகிறார் என்ற மதம் சம்பந்தப்பட்ட சேனல்களில் ஒளிந்து, உல்லாச வாழ்விற்கு உற்சாகத்திற்கு லேகியம் விற்கும் ஆன்லைன் நிகழ்ச்சியில் இரண்டு நிமிடம் நின்று (ஹி.ஹீ) அடியேன் Set max சேனலை வைத்துவிடுவேன். அந்த சேனலில் இரவு பத்துமணிக்குமேல் கிளாசிக் ஹிந்திபாடல்களை ஒளிபரப்புகிறார்கள். வாங்கிவந்த காய்ந்த சப்பாத்தியையோ ஓய்ந்த தோசையையோ பிய்த்து போட்டுவிட்டு, அடுத்தநாள் வேலைக்கான உடைகள் முதல் ஷூ வரை ஒழுங்குபடுத்தி, நினைவுகளையும் கனவுகளையும் தூசுதட்டி, ஏதாவது ஒரு புத்தகத்தை துணைக்கு வைத்துக்கொண்டு படுக்கையில் விழுந்து, வேறெந்த சேனல்களையும் மாற்றாமல், கருப்பு வெள்ளை முதல் கண்கவரும் எழுபதுகளின் அந்த ஹிந்தி பாடலைகளை கேட்டுக்கொண்டே தூங்குவ…

கோடிட்ட இடம்.

படம்

ஒரு மரமும் ஒட்டுமொத்த தன்னம்பிக்கையும் ஒரு காதலும்..

படம்
உழைப்பிற்கும் தன்னம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குபவர்கள் ஜப்பானியர்கள். உலகம் என்ற அழகியின் மூக்குத்தி அளவில் இருந்துகொண்டு இரண்டாம் உலகப்போரில் கலந்து அணுகுண்டு சோதனையில் சிக்கி சின்னாபின்னமானது முதல் புயல் வெள்ளம் நிலநடுக்கம் சுனாமி என ஒவ்வொரு அழிவு காலகட்டத்திலும் அவர்கள் பீனிக்ஸ் பறவையாக எழுந்து வந்துள்ளனர். நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட ஜப்பானின் நில அமைப்பு மிகவும் சிக்கலானது, அங்கு இயற்கை சீற்றங்கள் வருடா வருடம் கோடை விடுமுறைக்கு பிறந்த வீட்டிற்கு வரும் பெண்போல வந்து அனைத்தையும் வாரி சுருட்டிக்கொண்டு போகிறது.  அத்தகைய பெரும் இழப்பிலும் ஜப்பானியர் ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியையும் கடைபிடித்து அதிலிருந்து மீண்டுவந்து உலகத்தில் உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு செய்தியை பாடமாக அறிவிக்கின்றனர். அவ்வாறு சமீபத்தில் நமக்கெல்லாம் அவர்கள் கற்றுக்கொடுத்த தன்னம்பிக்கை பாடம்தான் "Miracle Pine". 
11 மார்ச் 2011 ஆம் ஆண்டு ஜப்பானை மிகப்பெரிய சுனாமி தாக்கியது. பல லட்சம் பொருட்களையும் வீடுகளையும் 19000 அதிகமான மக்களையும் காவுவாங்கிச் சென்றது. ஜப்பானில் உள்ள &quo…