இடுகைகள்

August, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
☰ உள்ளே....

Wishes (Mobile Photography) .

படம்

The Book Thief - புத்தகப்புழு....

படம்
அக்கரை உள்ள பெற்றோரும், அலமாறி நிறம்பிய புத்தகங்களும் வாய்க்கப் பெறும் குழந்தைகளே அதிஷ்டசாலிகள். - ஜான் மெக்கலே.

வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் நாம் நினைவு வைத்துக் கொள்ளுவதில்லை. ஒவ்வொரு நாளும் விசேசமாக இருந்ததில்லை. பிறப்பு, இறப்பு, உறவு, நட்பு, காதல் சோகம், மகிழ்ச்சி என நம் வாழ்வில் சில முக்கிய தருணங்களையும் அதன் நாட்களையும் மட்டுமே நினைவில் வைத்திருக்கிறோம். அந்த நினைவுகளை வாழ்க்கையின் முக்கிய புள்ளியாகக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். நாம் வாசிக்கும் புத்தகங்களும் அவ்வாறானதுதான் எல்லா புத்தகங்களும் முக்கியமானதல்ல. நம் வாழ்க்கைக்கு ஊக்கம் தரும் புத்தகங்களே நம்மில் நினைவிலிருக்கும் அதுவே வாழ்க்கையை சுழற்ற உதவும்.
வாழ்க்கை மற்றும் வாசிப்பு இந்த இரண்டிற்கும் இடையேயான தொடர்பை அன்புக்கு ஏங்கும் 12 வயது சிறுமியின் வாயிலாக விளக்கும் ஜெர்மன் நாட்டு திரைப்படம்தான் "The Book Thief".
1938 ஆம் ஆண்டு Liesel தன் தாய் மற்றும் தம்பியுடன் ஜெர்மனிக்கு பயணம் செய்து கொண்டிருப்பதில் கதை தொடங்குகிறது. நோய்வாய்ப்பட்ட அவளது தம்பி பயணத்தின் பாதியிலே இறக்க அவனை அடுத்த நிறுத்தத்தில் புதைக்க ஏற்பாடு ச…

Guiding Light - நீ...ண்ட மெகா சீரியல்.

படம்
பெரும்பாலான வீடுகளின் டிவியின் நேரங்களை மெகா சீரியல்களே ஆட்கொள்(ல்)ளுகின்றன. வாரத்தில் ஒருநாள் அரைமணிநேரம் ஆரம்பித்த சீரியல் தற்போது ஆறுநாள் இருபது மணிநேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது (தனி சேனல் தொடங்கினாலும் தொடங்குவார்கள்). கதை பற்றாக்குறைக்காக ஹிந்தி ஆங்கிலம், கொரியன் என மொழிபெயர்ப்பு செய்யப்பட்டும் சில மெகா சீரியல்கள் தற்போது ஓடிக் கொண்டிருக்கின்றன. இனி அரேபியன், பெர்சீனியன், மற்றும் ஊமை பாஷையில் இருந்துகூட மெகா சீரியல்கள் வர வாய்ப்பிருக்கிறது. ஒவ்வொரு சேனலிலும் எந்த சீரியல்? எத்தணை மணிக்கு? ஒளிபரப்புகிறார்கள் இரண்டு வருடமாக நீளும் கதைதான் என்ன?  ஒவ்வொரு கதாபாத்திரங்களின் பிரச்சனை என்ன? நேற்று என்ன நடந்தது? நாளை என்ன நடக்கும் ? கதை எங்கு போகிறது? என அப்டேட் தகவல்களை துள்ளியமாக நினைவில் வைத்திருப்பது என்பது ஒரு கலைதான். இந்த மெகா சீரியல் கலை ரசிகர்களுக்கு சவால் விடக்கூடிய விதமாக ஒளிபரப்பட்ட டிவி சீரியல்தான் "Guiding light" இதுவே உலகின் மிக நீ...ண்ட மெகா சீரியல்.

1937 ஆம் ஆண்டு "Irna Phillips" என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த கதை NBC என்ற ரேடியோவில் தினமும் 15 நிமிடங்…

Nature art (Mobile Photography) .

படம்

The Bolivian Diary - சேகுவாரா.

படம்
அக்டோபர் 8 1968 - காயம்பட்ட ஒரு வீரர் சண்டை நடந்த இடத்திலிருந்து லா ஹிகுவேரா (La Higuera) என்னும் இடத்திலுள்ள இடிந்த பள்ளிக்கூடம் ஒன்றிர்க்கு கைதியாக பிடிக்கப்பட்டு மாற்றப்படுகிறார். வலியால் அவதியுற்று மூச்சுவிடவே சிரமப்படும் அவரால் சரிவர நடக்க முடியவில்லை, சில மாதங்களாக அவர் எடை கூடுவதால் தோள்கள் வலித்தன. துக்கம் மற்றும் மோசமான உடல்நிலை, நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் மரணம், சிலரின் நம்பிக்கை துரோகம், சிலரது வாழ்க்கைக்கு அவர் ஏற்றிருக்கும் பொறுப்பு, அவர் நேசிக்கும் மனிதர்களைப் பற்றிய ஏக்கம் இவையனைத்தும் அவரை மேலும் பலவீனப்படுத்தியது. ஆனாலும் செங்கல் சுவரில் கட்டப்பட்டு, வரப்போகும் தீர்ப்புக்காக காத்திருக்கும் அவரது உடல் மிகுந்த தன்னம்பிக்கையுடன் போருக்கு தயார் என்ற நிலையில் நிமிர்ந்து நிற்கிறது.
வெறும் 50 கொரில்லா போராளிகளை வைத்துக்கொண்டு பலம் பொருந்திய பொலிவியாவின் இராணுவத்திற்கும், அமேரிக்க கைகூலி ஆட்சியாளர்களுக்கும் ஆட்டம் காட்டிய அந்த வீரர், ஒரு மருத்துவர், இராணுவ தளபதி, நீதிமன்றத்தைக் கூட மேடையாக மாற்றிப்பேசும் திறன் கொண்டவர், அயராத உழைப்பாளி, ஏகாதிபத்தியத்திடமிருந்து சு…

மௌனம் (கிறுக்கல்கள்) ..

படம்