☰ உள்ளே....

Coke Studio - AR. Rahman Season - 3.

Coke studio பற்றி சென்ற பதிவில் எழுதியிருந்தேன் அந்த நிகழ்சியின் மூன்றாவது சீசனில் இசைப்புயல் வீசியதை கொஞ்சம் சுவைக்கலாம் வாருங்கள்.


உ.பி - யை சேர்ந்த பிரபல ஹிந்துஸ்தானி பாடகர் "Murtuza Mustafa" அவரது மகன்கள் Quadir Mustafa, Rabbani Mustafa, Hasan Mustafa மற்றும் பேரன் Faiz Mustafa என மூன்று தலைமுறைகளை வைத்து Aao Balma மற்றும் Soz O Salam பாடல்களை ரஹ்மான் உருவாக்கியிருந்தார். பாடலின் நடுவே ஒலிக்கும் டிரம்ஸ் மணியின் ஸ்பெஷல் தாளம் அடடா ! மனுசன் எதைத் தட்டினாலும் அழகாக இருக்கிறது. படு இயல்பாக கிட்டார் வாசிக்கும் அந்த சின்ன பெண்னை (ரஹ்மான் குடும்ப சாயலில் இருக்கிறார்) ஓடிச்சென்று கட்டிக்கொள்ளலாம் போலிருக்கிறது.
"என்னுள்ளே மகா ஒளியோ" என்ற குட்டி ரேவதியின் வரிகளுக்கு அழகாக குரல் கொடுத்திருக்கிறார் ரஹ்மானின் சகோதரி Rayhanah.அமைதியாக மென்மையான கோரசாக கடக்கிறது பாடல்.


ரஹ்மான் மற்றும் Suchi Blaaze குரலில் ஒலிக்கும் "Jagao Mere Desko" ரஹ்மானின் டிரேட்மார்க் மெஸ்மரிச பாடல். பாடலுடன் நாமும் கரைந்து போவது உறுதி.


Rayhanah - வின் குரலில் தொடங்கும் "நான் ஏன் பிறந்தேன்" பாடலை ரஹ்மானே பாடியிருக்கிறார். தாலாட்டுபோல் ஒலிக்கும் அந்த பாடல் அக்மார்க் தமிழ் ரசிகர்களுக்காக.


நேபாள புத்தமடத்தை சேர்ந்த Nun Ani Choying என்பவரின் ஹம்மிங்கில் ஒரு ஜென் நிலைபோல் தொடங்கும் Zariya பாடல், ஜோர்டான் நாட்டு பாடகி Farah Siraj வந்தவுடன் அதிரடியாக கடக்கிறது. தடதடக்கும் பாடலின் நடுவிலும் அந்த ஹம்மிங் மீண்டும் வருவது ஏதோ (ஏதேதோ) செய்கிறது.


தமிழ், ஹிந்தி, வங்காளம், அரபு என மொத்தத்தில் இசைப்புயல் Coke Studio Season 3- ஐ உண்டு இல்லை என செய்திருந்தது (அதுதானே ரஹ்மான்) அந்த பாடல்கள் தங்கள் பார்வைக்கும்.