ராஜபார்வை.


ரஹ்மானே முதல் தேர்வாக இருந்த காலம், மனம் மெல்ல ராஜாவின் பக்கம் சாய்ந்தது. நரையும் மூப்பும் ஒருபுறமிருக்க கொஞ்சம் அறிவும் எட்டிப் பார்க்க ராஜா எனும் மாமேதையின் தனித்துவம் அப்போதுதான் விளங்கியது. ஆரம்ப காலகட்டத்தில் தபேலா, ஆர்மோனியம், கிடார் கொண்டு ராஜா பாடலுக்கு டியூன் போட்டு வந்தார். பிறகு வாத்தியங்கள் எதுவுமில்லாமல் கண்களை மூடி சித்தனை செய்து கற்பனையாக இசைவடிவங்களை செதுக்க ஆரம்பித்தார் அவரது இந்த ஆழமான நுட்பம்தான் இசை உலகின் ராஜாவாக அவரை வைத்திருக்கிறது. அடியேன் ராஜாவின் பக்கம் விழ காரணமான பாடல்கள் இவை அப்படி என்ன இருக்கிறது என இந்த பாடல்களை கேட்கும்போதெல்லாம் தோன்றியதுண்டு. தேடுதல் என தொடங்கியபோது இந்த பாடல்களின் சுவாரசியம் புரிந்தது அந்த சுவாரசிய தகவல்களுடன் தங்கள் ரசனைக்காவும் பகிர்கிறேன்.
  • ராஜாவிற்கு முக்கியமான நான்கு ஐந்து இசைக்கருவிகள் இருந்தாலே போதும் ஒரு பாடல் பிறந்துவிடும் ஆனால் இந்த பாடலுக்கு அவர் 137 இசைக்கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்.
  • வசனமே இல்லாத காட்சிகளில் இசையாலும் பாடலாலும் நிரப்பி பார்பவர்களை பிரம்மிக்க வைக்க ராஜாவால் மட்டுமே முடியும். குறிப்பாக ஹேராம் திரைப்படத்தின் வசனங்களை நீக்கிவிட்டு வெறும் இசையால் மொத்த காட்சிகளையும் நிரப்பி புரட்சி செய்தவர் ராஜா.


  • இரண்டு அல்லது மூன்று நாட்களில் ராஜா ஒரு படத்தை முடித்துவிடுவார் ஆனால் அவர் இசை கோர்க்க அதிக நாட்கள் (25) எடுத்துக்கொண்ட திரைப்படம் காலபாணி (தமிழில் சிறைச்சாலை).


  • ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டுப் பயணம் குளுகுளு லொக்கேசன் எதுவும் ராஜாவிற்கு தேவைப்படாது டிராபிக்கில் சிக்கி ஸ்டுடியோவிற்கு சற்று தாமதமாக வந்த 20 நிமிடத்தில் உதித்த உன்னதமான பாடல்தான் இது.