பப்பி (அனுபவம்) ..எனக்கும் பப்பிக்கும் எங்கள் வீட்டின் சோபாவில் யார் உட்காருவது என அடிக்கடி சண்டைவரும். யாருக்காகவும் எதற்காகவும் பப்பி அந்த இடத்தை விட்டுக் கொடுக்காது. காலை நீட்டிக்கொண்டு ஃபேன் காற்றில் ஹாயாக தூங்கும் அதனிடம் கொஞ்சம் தள்ளிஉட்காரு பப்பி என இடத்திற்கு கெஞ்ச வேண்டிவரும். இந்த பப்பியாக பிறந்திருக்கலாம் பாரு எப்படி தூங்குகிறது? என அப்பா புலம்புவார். அந்த சோபாதான் அதன் ஆஸ்தான படுக்கை சிம்மாசனம் எல்லாமே. அதில் எப்போதும் பப்பியின் வெள்ளை முடி (மயிறு) சிதறிக்கிடக்கும் சோபாவில் உட்காரும்போது அந்த முடிகள் போட்டிருக்கும் உடையிலும் ஒன்றிரண்டு உடலிலும் ஒட்டிக்கொள்ளும். இதேபோல் வீடெங்கும் சில இடங்களிலும் தலைதுவட்டும் துண்டு, மெத்தை போன்றவற்றிலும் பப்பியின் முடிகள் சிதறியிருக்கும். வெளியாட்களுக்கு அது அறுவறுப்பாகத் தெரிந்தாலும் நாங்கள் அதை பெரிதாக பொருட்படுத்தியதில்லை எனென்றால் நாங்கள் பப்பியை ஒரு நாயாக பார்த்தில்லை.

ஹிட்லரின் கடற்போர் சாகசங்கள்.......


"உலகம் முழுவதும் ஒரே பேரரசு " ஒன்றினை நிறுவவேண்டும் என்று அலெக்சாண்டர் கண்ட கனவை, ஜூலியஸ் சீசர் கட்டிய மனக் கோட்டையை, நெம்போலியன் தீட்டிய திட்டத்தை நினைவாக்க இந்த நூற்றாண்டில் ஜெர்மனியில் வீறுகொண்டு எழுந்தவன் "அடால்ப் ஹிட்லர்". விளைவு இரண்டாம் உலகப்போர்.

முதல் உலகப் போர் முடிந்து 21 வருடங்களுக்கு பிறகு நன்றாக உறங்கிக் கொண்டிருந்த போர் எனும் டைனோசரின் காதுக்குள் துப்பாக்கியை விட்டு எழுப்பியவன் ஹிட்லர். அது எழுந்து கிட்டத்தட்ட 70 நாடுகளை சேர்ந்த 5 கோடிக்கும் மேற்பட்ட மனிதர்களை (ஹிட்லர் உட்பட) விழுங்கி ஏப்பம் விட்ட வரலாறு அனைவரும் அறிந்ததே. முதல் உலகப்போரில் ஜெர்மனி தோற்று சரணடைந்து அனைத்தையும் இழந்திருந்தது. அதன் இடைப்பட்ட கால வளர்ச்சி என்பது பிரம்மிக்கத்தக்கதே இதற்கும் ஹிட்லரே காரணம்.


Night Walk (Mobile Photography) ..

அனிமேசன் பாடல்கள் ..திரைப்படங்களின் ரசனை மற்றும் தேடல் இவற்றுள் அடியேனின் முதல் சாய்ஸ் அனிமேசன் திரைப்படங்கள். Mickey Mouse, Donald Duck, Popeye, Road Runner, Tom & Jerry கதாபாத்திரங்களுடன் சிறுவயதில் தொடங்கிய இந்த அனிமேசன் மோகம் சமீபத்திய வெளியீடான Ice Age 5 வரை இன்றும் தொடர்கிறது. புத்தகம், காமிக்ஸ் என பழக்கப்பட்ட கதை, நேர்த்தியான கிராபிக்ஸ் காட்சியமைப்புகள், இசை, பாடல்கள், பின்னணி குரல்கள் என அந்த வண்ணமயமான மாய உலகத்தில் தொலைந்து போவது தனிசுகமே. அனிமேசன் படங்களில் "Sound track" என சொல்லக்கூடிய இசைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள். புகழ்பெற்ற எழுத்தாளர்கள், குழந்தைகள் பாடல்கள், பழங்கால கவிதைகள் என தேர்ந்தெடுத்த வரிகளோடு கதையோடு உறவாடும் சில பாடல்கள் நம்மை மகிழ்விக்க அதில் நிறைந்திருக்கும். அப்படி நிறைந்த பாடல்களில் அடியேன் ரசிக்கும் சிலவற்றை தொகுத்திருக்கிறேன் அந்த சிறுபிள்ளை கனவுகளோடு.

பட்டாம்பூச்சி .

Don't Waste Food Ever ... (அனுபவம்).


பிறந்தநாள், திருமணநாள், வேலை, முதல்மாத சம்பளம், புரமோஷன், பாராட்டு, திட்டு, புதிதாக பைக், மொபைல், ஆடைகள் வாங்கினால், அட! செருப்பு கூட புதிதாக போட்டிருந்தால் நட்புகளிடம் கேட்கும் வார்த்தை எப்ப? டிரீட்.


முன்பெல்லாம் டிரீட் என்றால் சோமபானம் மட்டுமே இருக்கும் தற்போது திருந்தி சமரச சன்மார்க்க நிலையை கடைபிடிப்பதால் ஏதாவது பெரிய ஹோட்டலுக்குச் சென்று டீரீட் கொடுப்பவரின் ATM அல்லது பர்ஸை மட்டும் காலி செய்துவிட்டு வருவதுண்டு. பறந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் ஒருநாள் சகாக்களுடன் பெரிய ஹோட்டலில் அரட்டையடித்துக் கொண்டு கண்டதை ஆர்டர் செய்து டேபிள் முழுவதும் நிறைத்து பாதி தின்று மீதி வைத்து மனம்விட்டு பேசிக்கழிக்கும் அந்த தருணங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். அதுபோன்ற நேரங்களில் வீணடிக்கப்படும் உணவுகளைப்பற்றி கொஞ்சம் வருத்தமும் ஏற்படும். பொதுவாக பெரிய ஹோட்டல் மற்றும் விழாக்களில் பரிமாறப்படும் உணவு வகைகளில் தேவையில்லாதவைகளையும் சாப்பிட முடியாதவைகளையும் அடியேன் திரும்ப எடுத்துக்கொள்ளுமாறு செய்துவிடுவேன். சிறுவயதில் பள்ளிக்கு எடுத்துச்செல்லும் சாப்பாட்டில் மிச்சம் கொண்டு வந்தால் "நீ சாப்பிடு அல்லது நண்பர்களுக்கு கொடு திரும்ப கொண்டுவராதே" என்ற அம்மாவின் அர்ச்சனையில் தொடங்கிய பழக்கம் இது. ஆனால் சிலநேரங்களில் அதையும் கடைபிடிக்காமல் தவறவிடுவதுண்டு இன்றும் அப்படித்தான் நிகழ்ந்தது.

Teri laadki main - I am your darling daughter (பாடல்)."Teei laadki main".... Tanisksha Sanghvi - யின் மழலைக்குரலில் ஆரம்பித்து Rekha Bhardwaj மற்றும் Kirtidan Gadhvi குரல்களில் கலந்து ஒலிக்கும் தந்தை- மகள் நேசத்தை தாலாட்டும் இந்த பாடலைப்பற்றி Coke Studio என்ற பதிவில் எழுதியிருந்தேன். Sachin Jigar இசைக்கோற்பில் 12 April 2015 ஆம் ஆண்டு மேடையேறிய இந்த பாடலை எத்தனைமுறை கேட்டாலும் சலிப்புத் தட்டுவதில்லை. மேடையில் பாடப்பட்ட இந்த பாடலை சமீபத்தில் Cinematic Celebration என்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு ஆல்பமாக காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். பெண்பிள்ளையை பெற்ற தந்தையின் உச்சகட்ட மகிழ்ச்சியையும், உணர்வுகளையும் பாடலோடு கலந்து நிஜ நிகழ்வாக தொகுத்திருக்கிறார்கள். YouTube -ல் கிடைந்த அந்த உயிரோட்டமான பாடலுடன் கூடிய வீடியோவை வரிகளுடன் நண்பர்களுக்காக பகிர்கிறேன்.

ஆம்லெட் (சுவையான தகவல்) .


ஆனியன் கொஞ்சம் அதிகமா, பச்சைமிளகாய் போட்டு, பெப்பர் நல்லா தூவி, பதமா ஒரு ஆ...ம்லெட்.


ஃபுல்கட்டு கட்டினாலும், ஃபுல்லோடு கட்டுகட்டினாலும், ஆம்லெட்டோ, ஆப்பாயிலோ முட்டையுடன் முடியாத இரவு உணவை பேச்சுலர்ஸ் சுவைப்பதில்லை அதிலும் குறிப்பாக ஆம்லெட். புரோட்டாவிற்கு அடுத்தபடியாக அதிகம் உண்ணப்படும் உணவுவகை இந்த ஆம்லேட். 4G வேகமான இந்த காலச்சூழலில் ஏதோ சாப்பிட்ட திருப்தியை மனதிற்கும், கவுச்சி ருசியை வாய்க்கும் இந்த ஆம்லெட்டே தருகிறது. சீரகம், கருமிளகு, உப்பு மூன்றையும் அம்மியில் வைத்து நசுங்கி, சிறிய வெங்காயம், பச்சைமிளகாயின் விதை தனியாக தோள் தனியாகப்போட்டு நாட்டுக்கோழி, அல்லது வாத்துமுட்டையில் எங்கள் கிராமத்தில் செய்யப்படும் இதனை முட்டை அடை என்பார்கள். வெங்காய ரசம், வடகம் துவையல், முட்டை அடை சேர்ந்த பட்ஜெட் விருந்தின் அந்த ருசியோடு இந்த ஆம்லெட்டின் சுவாரசியத் தகவல்களை சுவைக்கலாம் வாருங்கள்.

ராஜபார்வை (பாடல்கள்) .


ரஹ்மானே முதல் தேர்வாக இருந்த காலம், மனம் மெல்ல ராஜாவின் பக்கம் சாய்ந்தது. நரையும் மூப்பும் ஒருபுறமிருக்க கொஞ்சம் அறிவும் எட்டிப் பார்க்க ராஜா எனும் மாமேதையின் தனித்துவம் அப்போதுதான் விளங்கியது. ஆரம்ப காலகட்டத்தில் தபேலா, ஆர்மோனியம், கிடார் கொண்டு ராஜா பாடலுக்கு டியூன் போட்டு வந்தார். பிறகு வாத்தியங்கள் எதுவுமில்லாமல் கண்களை மூடி சித்தனை செய்து கற்பனையாக இசைவடிவங்களை செதுக்க ஆரம்பித்தார் அவரது இந்த ஆழமான நுட்பம்தான் இசை உலகின் ராஜாவாக அவரை வைத்திருக்கிறது. அடியேன் ராஜாவின் பக்கம் விழ காரணமான பாடல்கள் இவை அப்படி என்ன இருக்கிறது என இந்த பாடல்களை கேட்கும்போதெல்லாம் தோன்றியதுண்டு. தேடுதல் என தொடங்கியபோது இந்த பாடல்களின் சுவாரசியம் புரிந்தது அந்த சுவாரசிய தகவல்களுடன் தங்கள் ரசனைக்காவும் பகிர்கிறேன்.

சத்திய சோதனை..

குடிச்சிருக்கியா?  எங்க? ஊது...
முதல் சிக்னலில் டிராபிக் காண்ஸ்டபிளிடம் ஆரம்பித்த சோதனை,

குடிச்சிருக்கியா?  எங்க? ஊது...
வீட்டிற்கு நுழைந்ததும்
மனைவியிடம் முடிகிறது.

- சத்திய சோதனை..

இன்ன பிற, (பாடல்கள்) ..


இதுதான் பிடிக்கும் என எதுவுமில்லை இன்னபிற என்பதுதான் அடியேனின் சுவை, அதனைத் தேடி, துரத்தி, பொறுக்கி மேய்ந்து, அசைபோடுவதில்தான் பொழுது கழிகிறது. பாடல்களுக்கான தேடுதலும் ரசனையும் அதே வகைதான் தனிப்பட்ட மொழி, இசை, பாடகர் என ஒருதலைபட்சமாக சாய்வதில்லை கிடைக்குமிடத்தில் பொறுக்கிக் கொள்வேன். அப்படி சமீபத்தில் மேய்ந்த புதிய பாடல்கள் இவை கொஞ்சம் அசைபோடுகிறேன்.

எழுச்சிமிகு கண்டுபிடிப்பு (குட்டி தகவல்) .1992- ஆம் ஆண்டு அமேரிக்காவைச் சேர்ந்த "ஃபைசர் (Pfizer)"  என்ற மருந்துகள் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தோள்பட்டை மற்றும் மார்புவலி தொல்லையால் அவதிப்பட்ட கிராமத்து ஆசாமி ஒருவர் சென்றார். "ஆன்ஜீனா (Angina)" என்று சொல்லக்கூடிய இருதயத்திலிருந்து உடலுக்கு இரத்தம் சீராக பாயாத பிரச்சனை அவருக்கு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கமாக கொடுக்கும் மாத்திரையை ஆ.மு, ஆ.பி, காலை-1, இரவு-1 என எழுதிக்கொடுத்து அனுப்பிவிட்டனர் ஆனால் அந்த கிராமத்து ஆசாமிக்கு எதுவும் குணமாகவில்லை மீண்டும் திரும்பி அதே நிலையிலே வந்தார். ஆஹா..! சோதனை எலி தானாகவே வந்து சிக்கிக்கொண்டது என அவரை தலைமை ஆராய்ச்சி மருத்துவர்களிடம் அனுப்பி வைத்தனர். அவர்கள் மீண்டும் ஒருமுறை பரிசோதித்துவிட்டு Andrew Bell, David Brown, Nicholas Terrett என்பவர்கள் கண்டுபிடித்த "Pyrazolopyrimidione" வேதியியல் தொகுப்பைச் சேர்ந்த "Sildenafil" என்ற மாத்திரைகளை கொடுத்து இரண்டுநாள் கழித்து வந்து பார் என அனுப்பினர். நாட்கள் கடந்துகொண்டிருந்தது அந்த கிராமத்து ஆசாமி திரும்ப வரவேயில்லை சோதனை எலிக்கு என்னவாயிற்று என்ற கவலை ஆராய்ச்சியாளர்களுக்கு தொற்றிக்கொண்டது. Sildenafil என்ற அந்த மருந்தும் தற்போதுதான் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருந்தது இதய நோய்க்கு பயன்படும் இந்த மருந்தினால் ஏதாவது தவறுதல் நடந்திருக்கலாம் என நினைத்தனர், ஒருவழியாக அந்த கிராமத்து ஆசாமியை தேடிப்பிடித்து அவர் வீட்டுக்கதவை தட்டினார்கள் 

........என்ன நடந்தது?.


அவளும் நானும் (பாடல்கள்) ..இலக்கிய பாடல்கள் மற்றும் பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் போன்றவைகளை அழகான திரைப்பட பாடல்கள் வடிவில் கேட்பதென்பது மிக அரிது. தேர்தல் முடிந்தும் தொகுதி பக்கம் வரும் எம்.எல்.ஏ மாதிரி அத்தி பூத்தார்போல எப்போதாவது வரும் அப்படிப்பட்ட பாடல்கள் கவணிக்கப்படாமலே காற்றில் கரைந்துவிடுவதுண்டு, குற்றம்கடிதல் திரைப்படத்தில் வரும் சின்னஞ்சிறு கிளியே பாரதியின் வரிகளுக்குப் பிறகு அந்த வரிசையில் வெளிவரவிருக்கும் பாடல்தான் "அவளும் நானும்". பாரதிதாசனின் கவிதை வரிகளை சிதைக்காமல் முன்பின் மாற்றி "அச்சம் என்பது மடமையடா " திரைப்படத்திற்காக இதனை உருவாக்கியிருக்கிறார்கள்.ஒரு இனிமையான தருணத்தில் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே பயணிப்பதுபோல் கடக்கிறது ரஹ்மானின் இசை. பாடலின் நடுவே வரும் அந்ந வயலின் சிம்பொனி மற்றும் புல்லாங்குழல் ரீங்காரத்தில் ரஹ்மான் மீண்டும் தொன்னூறுக்கு திரும்புகிறார்( இதைத்தான் சார் நாங்க எதிர்பார்க்கிறோம்). அப்பாவை அப்படியே நினைவுபடுத்துகிறார் விஜய் யேசுதாஸ் அதே அமைதியான குரல்.

காற்றில் தவழ்ந்த அந்த பாடல் காட்சிகளாய் எப்படியிருக்கும்?, தமிழ் காதலோடு கலந்த பாரதிதாசனின் "அவள்!" எப்படி இருப்பாள்? - மனதிற்குள் ஓட்டிப்பார்த்தேன். ஓவியர் மாருதியின் கைவண்ணங்களில் உயிரோட்டமாக இருக்கும் பெண் ஓவியங்கள் என் நினைவுக்கு வந்தன. வார இதழ்களில் கதை மற்றும் கவிதைகளுக்காக மாருதி அவர்கள் வரைந்த அந்த முகங்களைக் கொண்டு இந்த பாடலை காட்சிப் படுத்தியிருக்கிறேன் ஒரு சிறிய முயற்சி.

இது? எது? அது? (ஹோட்டல் ஃபீலிங்)..


சாம்பார் எது? 
ரசம் எது?
புளிக்குழம்பு எது?
அது பொறியல்!
இது மோர்!
இது பாயாசம்!
- என கிண்ணத்தில் எழுதிவைப்பது உத்தமம்.

இது? எது? அது?
தெரியாமல் தடுமாறிப்போகிறது
ஃபுல்மீல்ஸ் ஹோட்டல் பசி.

You're getting old!Blood Group, ஜோதிடம், பஞ்சாங்கம், பல்லிவிழும் பலன், அழகு குறிப்புகள், ஜாக்கெட் டிசைன், மருதாணி டிசைன், சாம்பார் வைப்பது எப்படி, சாம்பிராணி போடுவது எப்படி என அனைத்தையும் விளக்கும் ஆண்ராய்டு மென்பொருட்கள் கிடைக்கும் தளத்தில் சில தேடல்களின்போது சுவாரசியமானவைகளும் சிக்கிக்கொள்ளும். அப்படி கிடைத்த ஒரு ஆண்ராய்டு மென்பொருள்தான் "You're getting old". இந்த மென்பொருளில் உங்கள் பிறந்த தேதி, மாதம் மற்றும் வருடத்தை  குறிப்பிட்டால் உங்களைப்பற்றிய, நீங்கள் கடந்துவந்த நாட்களைப் பற்றிய, சுவாரசிய தகவல்களை எந்திரன் ரோபோ ரஜினியைப்போல் துள்ளியமாக ஒப்பிக்கிறது. அடடா! என வியந்து அப்படியே எனது பிறந்த தேதியை இதில் குறிப்பிட்டேன், அது தந்த தகவல்களை கொஞ்சம் பார்க்கலாம் வாருங்கள்.

DER UNTERGANG - Down Fall (சினிமா) ..ஹிட்லரைப் பற்றி இதுவரை மூன்று பதிவுகளை இங்கே எழுதியிருக்கிறேன் உலகமகா வில்லன் என்பதால் என்னவோ அவரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் ஒவ்வொன்றும் சுவாரசியமூட்டுகின்றன. அவற்றை புத்தகமாகவோ, டாக்குமெண்டரியாகவோ, சினிமாவாகவோ புரட்டிப் பார்க்கையில் அவர் ஒரு கொடுங்கோலன் என்ற பிம்பத்தையும் தவிர்த்து ஆச்சரியங்களும் பிரம்மிப்பும் கலந்த இரக்கம் ஏற்படுவதை உணரமுடிகிறது. முதல் உலகப்போரில் சின்னாபின்னமான ஜெர்மனியை குறுகிய வருடத்தில் உலகமே திரும்பிப் பார்க்கச் செய்தவர் ஹிட்லர். சிறந்த அரசியல்வாதி, பேச்சாளர், ஓவியன், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட ஹிட்லர் புகைப்பது கிடையாது (நாடுமுழுவதும் புகையிலைக்கு தடைவிதித்த முதல் தலைவர்), விலங்குகளை நேசித்தவர், இயற்கையை ரசிப்பவர், சுத்த சைவம், கடைசி நேரத்திலும் காதலியை கைவிடாதவர் என உத்தமனாகவே வாழ்ந்திருக்கிறார். உலகையாளும் ஆசையும், எமனே யோசிக்காத வகையில் யூதர்களை கொண்றுகுவித்த விதமும் ஹிட்லரை வரலாறு வில்லனாக்கியது. சர்வாதிகாரத்தின் முடிவை ஒரே மாதிரியாக வைத்திருக்கும் இந்த உலக வாழ்க்கை ஹிட்லருக்கும் விதிவிலக்கல்ல தோற்றுப்போகும் தருணத்தில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தன் உடல்கூட எதிரிகளுக்கு கிடைக்காதவாறு சாம்பலாகிப் போனார் இந்த உத்தமவில்லன். சிறந்த தலைமை பண்பும், போர்த்திறனும் உலகை வெல்லும் மனஉறுதியும் கொண்ட அவரது கடைசிநாட்கள் எப்படி இருந்திருக்கும்? அந்த வரலாற்றுப் பக்கங்களின் கடைசி பத்து நாட்களை கவிதையாக காட்டும் ஜெர்மன் நாட்டுத் திரைப்படம்தான் Down Fall (Der undergang) .

Coke Studio - AR. Rahman Season - 3 (பாடல்கள்) ..


Coke studio பற்றி சென்ற பதிவில் எழுதியிருந்தேன் அந்த நிகழ்சியின் மூண்றாவது சீசனில் இசைப்புயல் வீசியதை கொஞ்சம் சுவைக்கலாம் வாருங்கள்.


உ.பி - யை சேர்ந்த பிரபல ஹிந்துஸ்தானி பாடகர் "Murtuza Mustafa" அவரது மகன்கள் Quadir Mustafa, Rabbani Mustafa, Hasan Mustafa மற்றும் பேரன் Faiz Mustafa என மூன்று தலைமுறைகளை வைத்து Aao Balma மற்றும் Soz O Salam பாடல்களை ரஹ்மான் உருவாக்கியிருந்தார். பாடலின் நடுவே ஒலிக்கும் டிரம்ஸ் மணியின் ஸ்பெஷல் தாளம் அடடா ! மனுசன் எதைத் தட்டினாலும் அழகாக இருக்கிறது. படு இயல்பாக கிட்டார் வாசிக்கும் அந்த சின்ன பெண்னை (ரஹ்மான் குடும்ப சாயலில் இருக்கிறார்) ஓடிச்சென்று கட்டிக்கொள்ளலாம் போலிருக்கிறது.

தூண்டில் கதைகள் (புத்தகம்) .


பெரிய வாசிப்பிற்கு சற்று சலிப்பாக இருந்தது நூலகத்திலிருக்கும் என்பதுகளில் வெளிவந்த சில குமுதம் வார இதழ்களை தூசித்தட்டினேன் பால்யகால நினைவுகள் எச்சில் விரலில் ஒட்டி புரண்டுக் கொண்டிருந்தது.
வெள்ளிக்கிழமை வெளிவரும் வார இதழ்கள் அடுத்தநாள் மதியம்தான் வீட்டிற்கு வரும். அத்தை குமுதம் வாங்குவாள், எதிர்விட்டு அம்பி அண்ணா ஆனந்தவிகடன், உமையாள் அக்கா தேவியும் ராணியும், சோமு மாமா குங்குமம். ரேடியோவைத் தவிர்த்த அந்த காலகட்டத்தில் எங்கள் தெரு முழுவதும் சுற்றிவரும் இந்த வார இதழ்களும், தினசரி செய்தித்தாள்களும் மட்டுமே பொழுதுபோக்காக இருந்தது, அதுவே உன்னதமாகவும் இருந்தது.
தலையரங்கம், சிறுகதை, தொடர்கதை, ஜோக்குகள் என அனைத்து வார பத்திரிக்கைகளும் அச்சுஅசல் ஓரே மாதிரியான வடிவத்தைக் கொண்டிருந்த அந்த என்பதுகளில் குமுதம் மட்டும் சற்று விலகி குறுக்கெழுத்துப் போட்டி, ஆறு வித்தியாசம், சினிமா விமர்சனம், கவிதை, கட்டுரை, சமையல் குறிப்பு, நடுப்பக்க நடிகை என வார இதழ்களில் புரட்சியை ஏற்படுத்தியது. வாரம்தோறும் வாசிப்பவர்களை இழுக்க புதிய முயற்சிகளை கையாண்டு எல்லாவற்றிலும் அவர்கள் புதுமையை புகுத்தினர். சோகமும் பெண்ணியமும் வழிந்தோடிய தொடர்கதை மற்றும் சிறுகதைகளிலும் மாற்றத்தை கொண்டுவந்தனர். அந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மறைந்த எழுத்தாளர் "சுஜாதா" அவர்கள்.

Night eye..(Mobile Photography)..

பருவநிலை (கவிதை) ..

காதல் வாகனம்.. (குட்டி தகவல்) .


வேலை காரணமாக ஜப்பானில் வசித்துவந்த அமேரிக்கரான "Revarant Jonathan Kobi" என்பவர்  உடல்நலக் குறைவால் நடக்கமுடியாது போன தன் மனைவிக்கு வெளி உலகத்தையும் மகிழ்ச்சியையும் காண்பிக்க நினைத்தார். நகை வேண்டும், பட்டுப்புடவை வேண்டும், பீட்சா வேண்டும், அது இது வேண்டும், ஷாப்பிங் போகலாம், டின்னர் சாப்பிடலாம் என சம்பளத்தேதியில் மோனராகத்தோடு கேட்கும் மனைவிபோல் இல்லாமல் அவரது மனைவியும் தன் கணவனோடு சேர்ந்து வெளிஉலகை ரசிக்க ஆசைப்பட்டாள். மரச்சக்கரம் புழக்கத்திற்கு வந்த காலகட்டத்தில் 1869 அம் ஆண்டு தன் மனைவியை வைத்து இழுத்துக்கொண்டு செல்லும் வகையில் மரத்தாலான ஒரு வாகனத்தை Jonathan Kobi தயாரித்தார் அதுதான் கையால் இழுக்கக் கூடிய "ரிக்ஷா" (Rikshaw). அதற்குப்பிறகு அவர் கண்டுபிடித்த வாகனம் நடக்க முடியாத மற்றும் வயதானவர்களுக்கு பெரிதும் உதவ, "Izumi Yosuki" என்பவரின் வடிவமைப்பில் "Suzuki Tokujiro" மற்றும் "Takayama Kosuke " என்பவர்கள் இணைந்து 40000 ரிக்ஷாக்களை 1870 ஆம் ஆண்டு ஜப்பான் முழுவதும் இழுக்கவிட்டனர்.