Coke Studio.


புதிய குரலுக்கான தேடல், பழைய குரலுக்கான அலசல், சூப்பர் சிங்கர், டூப்பர் சிங்கர், குயில் பாட்டு, ஆந்தையின் அலறல் போன்றவை கன்னித்தீவு போல பல சீசன்கள் தொடர்வதால் மேடைப் பாடல்களுக்கான இந்த டிவி நிகழ்ச்சிகள் கொஞ்சம் சலிப்புத்தட்டிவிட்டது. ஆனால் M TV - யில் ஒளிபரப்பாகும் Coke Studio நிகழ்ச்சியை மட்டும் அடியேன் தவறாமல் பார்த்துவிடுவேன். தாகூர், பாரதியார் தொடங்கி இந்திய மொழிகள் பலவற்றின் சாதாரண கவிஞர்களின் வரிகளைக் கொண்டு, கர்நாடக சங்கீதமும் தெருக்கூத்தும், வாய்வழி கிராமியப் பாடல்களும், நவீனகாலப் பாடல்களோடு கலந்து,  பெயரே! தெரியாத புதிய பழைய இசைக்கருவிகளின் சங்கமத்தில், உலகப் புகழ்பெற்ற இசைமேதைகள் முதல் உள்ளூர் தெருப் பாடகர்களின் குரலில், நேரடி ஒளிபரப்பாக அழகான ஜூகல்பந்தியாக கடக்கிறது இந்த நிகழ்ச்சி. இசைமீது ஆர்வமுள்ளவர்களுக்கும், இசையை காதலிப்பவர்களுக்கும் அத்தனை வகை சாப்பாடுகளும் கலந்த முரட்டு வாழை இலை விருந்தாக இருக்கும். 2011 ஆம் ஆண்டு MTV India - வில் தொடங்கிய இந்நிகழ்ச்சி நான்காவது சீசனை கடந்தாலும் ஒவ்வொரு வாரமும் புதிதாக மேடையேறும் பாடல்களும், பாடகர்களும், இசைக்கருவிகளும் நிகழ்ச்சியைக் காண அடுத்தமுறைக்கும் ஆர்வமூட்டுகின்றன.

சினிமா பாடல்களையும் TRP ரேட்டிங்கிற்காக நாடகத் தன்மையுடன் ஒளிபரப்பப்படும் சில சிங்கர் நிகழ்சிகளையும் மெய்- வாய், மறந்து- திறந்து பார்த்து சலித்திருந்தால் தாராளமாக இந்நிகழ்ச்சியை தரிசிக்கலாம்.

நான்கு சீசன்களில் அடியேன் ரசித்த சில பாடல்கள் இவை தங்களின் பார்வைக்காகவும்..

1. Zariya - AR Rahman, Ani Choying, Farah Siraj (Season -3).

2. Laadki - Sachin- Jigar, Taniskhas, Kirtidam G, Rekha B (Season 4) .

3. Peekaboo - Karshkale, Apeksha, Benny & Mandeep (Season 2).

4. Chaudhary - Amit Trivedi,  Meme Khan,  (Season 2).

5. Bharathiyar - Trap Rap, Ram Sampath,  Ton Sebastian & Rajesh Radhakrishnan.

6. Chitthiye - Sunidhi Chauhan & Wadir Brothers (Season 1).

7. Piya se Naina - Ram Sampath,  Sona Mohapatra

8. Aigiri Nandini - Ram Sampath,  Aruna Sriram,  Sona Mohapatra.

9. Vethalai - Kailash Khar,  Chinnaponnu.