☰ உள்ளே....

மலையாள கரையோரம்.


டூயட் பாடல் என்றால் டக் என்று ஹீரோ கோட்டை மாட்டிக் கொண்டும், சிக் என்று ஹீரோயின் ஸ்கர்ட்டை போட்டுக் கொண்டும் வெளிநாட்டிற்கு பறந்து விடுகிறார்கள். இல்லை என்றால் கம்மியான வெளிச்சத்தில் கட்டிலில் உருண்டு புரண்டு, மூக்கும் மூக்கும் உரச பாடுகிறார்கள். விரசம் ஆடை குறைப்பு எதுவுமில்லாத அழகான டூயட்டை பார்த்து ரசிக்க ராமராஜன் காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டும் அல்லது நம்ம பார்டரை கொஞ்சம் தாண்ட வேண்டும். அல்ட்ரா மாடர்ன் கொஞ்சம் எட்டிப் பார்த்தாலும், எதார்த்த சினிமாக்கள் மலையாளத்தில் இன்றுவரை வந்துகொண்டுதான் இருக்கின்றன. மலையாள திரைப்படங்களைப் போலவே பாடல்களும் எதார்த்தமானவை. அங்கு டூயட் பாட வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற அவசியம் ஏற்படுவதில்லை, கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட அந்த ஊரில் லொக்கேசனுக்கும் பஞ்சமில்லை, பக்கத்து தெருவிற்கு சென்று அழகான பாடலை காட்சிப்படுத்தி விடுகிறார்கள். அந்த இயற்கையோடு அழகியலில் நிறைந்த பாடல்கள் கேட்பதற்கு மட்டுமில்லாமல் பார்ப்பதற்கும் பரவசமூட்டுபவை. அப்படி, அடியேன் ரசிக்கும் சில மலையாள கரையோர டூயட் பாடல்கள் இவை தங்களின் பார்வைக்கும்.