இராமலிங்கம் சாரும் சிவாஜிகனேசன் பாடல்களும்..


ஒற்றுமையாகயும் அழகாகவும் வாழ்ந்து வந்த காலனிவீட்டின் நினைவுகள் என்றும் இனிமையானவை. எங்கள் வீட்டின் பக்கத்தில் காவல்துறையில் பனிபுரிந்த இராமலிங்கம் சார் குடியிருந்தார். இரண்டு மூன்று நாட்கள் பனிக்காக அலைந்துவிட்டு திரும்பிவரும் அவர், வழக்கமான வேலைகளை முடித்துவிட்டு கையில் சிறிய டேப்ரிக்கார்டருடன் வாசலுக்கு வந்துவிடுவார். எழுபதுகளின் பழைய பாடல்களை மெல்ல காற்றில் கலந்துவிடும் அந்த டேப்ரிக்கார்டர். பெரும்பாலும் சிவாஜிகனேசன் நடித்த திரைப்பட பாடல்களை விரும்பிக் கேட்கும் அவர், காற்றில் கலக்கும் அந்த பாடல்களோடு தானும் பாடிக்கொண்டே தூக்கத்தை கட்டிக்கொள்வார். கம்பீரமாக ஒலிக்கும் அவரது குரல் சிறிய முக்கால் சுவற்றைத் தாண்டி எங்கள் வீட்டில் கேட்கும். கானா பாடல்களையும் சில காதல் பாடல்களையும் விரும்பி கேட்ட அந்த வயதில் அவரது வாடிக்கையான இந்த செயல் வேடிக்கையாக மட்டுமே இருந்திருக்கிறது. பிறகு காலம் நல்லதை கற்றுக்கொடுக்க அவரது ரசனையும் அந்த பாடல்களும் எத்தனை தனித்துவமானது என்று விளங்கியது. இன்றைக்கும் சில பழைய திரைப்பட பாடல்களை கேட்கும் போதெல்லாம் அந்த காலனிவீட்டின் நினைவுகளும் இராமலிங்கம் சாரும் நினைவுக்கு வருவார். பாடல்களின் சுவை கேட்ட- கேட்கும் தருணங்களில் ஒளிந்திருக்கிறது. அந்த நினைவுகளில் நனைந்த ஒரு சில பாடல்கள் இவை, சிவாஜிகனேசன் ஸ்பெஷலாக தங்கள் ரசனைக்காகவும்.