Coke Studio ..(பாடல்கள்) .


புதிய குரலுக்கான தேடல், பழைய குரலுக்கான அலசல், சூப்பர் சிங்கர், டூப்பர் சிங்கர், குயில் பாட்டு, ஆந்தையின் அலறல் போன்றவை கன்னித்தீவு போல பல சீசன்கள் தொடர்வதால் மேடைப் பாடல்களுக்கான இந்த டிவி நிகழ்ச்சிகள் கொஞ்சம் சலிப்புத்தட்டிவிட்டது. ஆனால் M TV - யில் ஒளிபரப்பாகும் Coke Studio நிகழ்ச்சியை மட்டும் அடியேன் தவறாமல் பார்த்துவிடுவேன். தாகூர், பாரதியார் தொடங்கி இந்திய மொழிகள் பலவற்றின் சாதாரண கவிஞர்களின் வரிகளைக் கொண்டு, கர்நாடக சங்கீதமும் தெருக்கூத்தும், வாய்வழி கிராமியப் பாடல்களும், நவீனகாலப் பாடல்களோடு கலந்து,  பெயரே! தெரியாத புதிய பழைய இசைக்கருவிகளின் சங்கமத்தில், உலகப் புகழ்பெற்ற இசைமேதைகள் முதல் உள்ளூர் தெருப் பாடகர்களின் குரலில், நேரடி ஒளிபரப்பாக அழகான ஜூகல்பந்தியாக கடக்கிறது இந்த நிகழ்ச்சி. இசைமீது ஆர்வமுள்ளவர்களுக்கும், இசையை காதலிப்பவர்களுக்கும் அத்தனை வகை சாப்பாடுகளும் கலந்த முரட்டு வாழை இலை விருந்தாக இருக்கும். 2011 ஆம் ஆண்டு MTV India - வில் தொடங்கிய இந்நிகழ்ச்சி நான்காவது சீசனை கடந்தாலும் ஒவ்வொரு வாரமும் புதிதாக மேடையேறும் பாடல்களும், பாடகர்களும், இசைக்கருவிகளும் நிகழ்ச்சியைக் காண அடுத்தமுறைக்கும் ஆர்வமூட்டுகின்றன.
சினிமா பாடல்களையும் TRP ரேட்டிங்கிற்காக நாடகத் தன்மையுடன் ஒளிபரப்பப்படும் சில சிங்கர் நிகழ்சிகளையும் மெய்- வாய், மறந்து- திறந்து பார்த்து சலித்திருந்தால் தாராளமாக இந்நிகழ்ச்சியை தரிசிக்கலாம்.

வழி..

எண்ணிக்கை.


எண்ணம் எப்படி இருந்தால் என்ன? இன்றைக்கு எண்ணிக்கைதான் முக்கியம். தனி மனிதனின் அடையாளம் என்பது வசதி வாய்புகள், சொத்து பத்து பணம், உறவுகள் என்பதன் எண்ணிக்கையை வைத்தே அளவிடப்படுகிறது. பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் போடப்படும் ஸ்டேடஸ்களுக்கு விழும் லைக் கமான்ட்டுகள் கூட நாம் வைத்திருக்கும் நண்பர்களின் எண்ணிக்கையை பொருத்தே அமையும். அதேபோல் நமது இனிமையான நினைவுகளின் எண்ணிக்கையை வைத்தே மகிழ்ச்சியான வாழ்க்கையும் இருக்கிறது. அதைவிடுங்கள் பிரம்மிப்பூட்டும் சில பொதுவான ஆச்சரியமான எண்ணிக்கைத் தகவல்களை கொஞ்சம் பார்க்கலாம்.

அப்பா..


அதிகாலை விடிந்த பிறகும் இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கிய என் அப்பாவை இதுவரை நாங்கள் பார்த்ததேயில்லை. சுத்தமாக இருக்க வேண்டும், அழகாகத் தெரிய வேண்டும் உடுத்தும் உடை, பேச்சு, நடை, அன்பு, உபசரிப்பு , செய்யும் வேலை, ஒழுக்கம், நேர்மை மற்றும் அந்த புன்னகை எக்காலமும் எதற்கும் குறையக்கூடாது என்பதுதான் அவரது நியதி. கைப்பந்தாட்ட வீரரான அவர் தலைவலி காய்ச்சல் என்றுகூட ஒருநாள் சோர்ந்து பார்த்ததில்லை. 50 வயதைத் தாண்டியபோதும் TNCSC அணிக்காக விளையாடினார். குடும்பத்தைத் தவிர அவர் நேசிக்கும் மற்றொரு விடயம் இந்த கைப்பந்து. இன்றைக்கும் அடுத்த தலைமுறையோடு ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் சுறுசுறுப்பாக விளையாடுவதை ரசிக்கலாம். இடதுகை ஆட்டக்காரரான அவர் மாநில அளவில் விளையாடுவதை சிறுவயதில் நேரில் பார்த்திருக்கிறேன், அவரோடு சேர்ந்து இந்தியாவில் சில இடங்களில் சுற்றித் திரிந்திருக்கிறேன். இன்றைக்கு ஊர்சுற்றும் என் வேலைக்கு கைப்பிடித்து உலகைக் காட்டியவர் அவர்.

இரகசியம் ...இராமலிங்கம் சாரும் சிவாஜிகனேசன் பாடல்களும்..


ஒற்றுமையாகயும் அழகாகவும் வாழ்ந்து வந்த காலனிவீட்டின் நினைவுகள் என்றும் இனிமையானவை. எங்கள் வீட்டின் பக்கத்தில் காவல்துறையில் பனிபுரிந்த இராமலிங்கம் சார் குடியிருந்தார். இரண்டு மூன்று நாட்கள் பனிக்காக அலைந்துவிட்டு திரும்பிவரும் அவர், வழக்கமான வேலைகளை முடித்துவிட்டு கையில் சிறிய டேப்ரிக்கார்டருடன் வாசலுக்கு வந்துவிடுவார். எழுபதுகளின் பழைய பாடல்களை மெல்ல காற்றில் கலந்துவிடும் அந்த டேப்ரிக்கார்டர். பெரும்பாலும் சிவாஜிகனேசன் நடித்த திரைப்பட பாடல்களை விரும்பிக் கேட்கும் அவர், காற்றில் கலக்கும் அந்த பாடல்களோடு தானும் பாடிக்கொண்டே தூக்கத்தை கட்டிக்கொள்வார். கம்பீரமாக ஒலிக்கும் அவரது குரல் சிறிய முக்கால் சுவற்றைத் தாண்டி எங்கள் வீட்டில் கேட்கும். கானா பாடல்களையும் சில காதல் பாடல்களையும் விரும்பி கேட்ட அந்த வயதில் அவரது வாடிக்கையான இந்த செயல் வேடிக்கையாக மட்டுமே இருந்திருக்கிறது. பிறகு காலம் நல்லதை கற்றுக்கொடுக்க அவரது ரசனையும் அந்த பாடல்களும் எத்தனை தனித்துவமானது என்று விளங்கியது. இன்றைக்கும் சில பழைய திரைப்பட பாடல்களை கேட்கும் போதெல்லாம் அந்த காலனிவீட்டின் நினைவுகளும் இராமலிங்கம் சாரும் நினைவுக்கு வருவார். பாடல்களின் சுவை கேட்ட- கேட்கும் தருணங்களில் ஒளிந்திருக்கிறது. அந்த நினைவுகளில் நனைந்த ஒரு சில பாடல்கள் இவை, சிவாஜிகனேசன் ஸ்பெஷலாக தங்கள் ரசனைக்காகவும்.

Cool Green.

கபாலி...யூரோ கோப்பை... கொரியன் சீரியல்...


கபாலி டிரைலரே பலலட்சம் லைக்குகளை அள்ளியது, சமீபத்தில் இன்டர்நெட்டே சூடாகும்படி பாடல்களையும் வெளியிட்டனர். பாடல்கள் வெளியீட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு டி.வி, பேஸ்புக் வாட்ஸ்அப், கட்டவுட், போஸ்டர் என எங்கு பார்த்தாலும் கபாலியாக தெரிந்தார். குறிப்பாக போஸ்டர், கொஞ்ச நாட்களாக இல்லாத போஸ்டர் கலாச்சாரம் மீண்டும் தொடங்கிவிட்டதாக தோன்றுகிறது. சென்னையில் எங்கு பார்த்தாலும் கபாலி போஸ்டர் மயம் (நகரத்து மாடுகளுக்கு நல்ல தீனி). நல்லவேளை நடமாடிக் கொண்டிருந்தேன் இல்லையென்றால் முதுகில்கூட போஸ்டர் ஒட்டியிருப்பார்கள். அப்படி என்னதான் அந்த பாடல்களில் இருக்கிறது என கபாலிக்காக இல்லையென்றாலும் சந்தோஷ் நாராயணனுக்காக டவுன்லோடு செய்ய முயற்சித்தேன் வட்டம் சுற்றிக்கொண்டே இருந்தது. சரி எப்படியும் ஒருநாள் காற்றில் வரும் செவிக்கு உணவில்லாத போது சிறிது கேட்டுக்கொள்ளலாம் என விட்டுவிட்டேன்.

காட்டுப் பூ...

சிம்மக்குரல் - K. J. யேசுதாஸ்.


ரட்சகன் திரைப்படத்தில் வரும் நெஞ்சே நெஞ்சே பாடலுக்குப் பிறகுதான் K.J. யேசுதாசின் ரசிகனானேன். பாடல்களை தேடித்தேடி அலைந்தபோது அவரது தொகுப்புகள் முழுவதையும்  சேமித்தேன். எழுபதுகளின் பழைய பாடல்களை தவிர்த்து அம்மாவிற்கு யேசுதாசின் பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். டிவியில் எப்போதாவது ஒளிக்கும் அவரது பாடல்களை கொல்லைபுரத்தில் ஏதாவது வேலை செய்துகொண்டே அவள் முனுமுனுப்பாள். மாஸ்டர்பீஸான அவரது தெய்வீகப் பாடலான அரிவராசனம் பாடலை சபரிமலை சன்னிதானத்தில் இருந்தபடியே ஒருமுறை கேட்டு மெய்சிலிர்த்திருக்கிறேன். சாகாவரம் பெற்ற அவரது குரலுக்கு விமரிசனம் செய்ய தகுதிகிடையாது.
76 வயதை தாடிய அவரது குரலில் சமீபத்தில் வந்த தமிழ் திரைப்பட பாடல்கள் எதுவும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. புரியாத டங்கிலி பிங்கிலி வார்த்தைகளையும் கிணற்றிர்குள் இருந்து கொண்டு தவளை மாதிரி பாடும் குரல்களையும் நாம் தற்போது மெய்மறந்து ரசிப்பதால் ஒருவேளை அவர் தேவைப்படாமல் போயிருக்கக்கூடும் என நினைக்கிறேன். ஆனால் மலையாள சினிமா உலகம் அவரை இன்றும் என்றும் கொண்டாடுகிறது. அங்கு வெளிவரும் பத்து திரைப்படங்களில் இரண்டிலாவது யேசுதாசின் குரலை தரிசிக்கலாம். அப்படி சமீபத்தில் அங்கு வெளிவந்த திரைப்படங்களின் பாடல்கள் இவை. டூயட், சோகம் என அடியேன் ரசிக்கும் சிம்மக்குரலில் ஒலிக்கும் அந்த பாடல்கள் தங்களின் ரசனைக்காகவும்.

Tangled - தேவதையின் கதை.தேவதைகளின் கதை சுவாரசியமானது, புத்தகம், காமிக்ஸ், கார்டூன், சினிமா என உலகமெங்கும் பல தேவதை கதைகள் கொட்டிக் கிடக்கிறது. அற்புதங்களும், மாயாஜாலங்களும் கலந்த அந்த கதைக்குள் சிறுபிள்ளை என தொலைந்து போவது தனிசுகம். அந்த வகையில் ஜெர்மனியின் புகழ்பெற்ற "Grimm" என்ற எழுத்தாளர் சகோதரர்களின் " Rupunzel" என்ற கதை மிகப்பிரபலம். சின்ரெல்லாவிற்கு அடுத்தபடியாக குழந்தைகளின் உலகில் நிரந்தரமாக தங்கியிருக்கும் இந்த கதையைத் தழுவி எண்ணற்ற திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதில் 2010 ஆம் ஆண்டு Walt Disney தயாரித்த "Tangled" என்ற அனிமேஷன் திரைப்படம் தேவதை கதையை இன்னும் சுவாரசியமாக்கியது. வாருங்கள் அந்த சுவாரசியமான மாயாஜால கதைக்குள் நுழைவோம். 

மியூசிக் சேனல்ஸ்..அக்ஷை குமார் (Akshay Kumar).உலக திரைப்படங்கள் என மேய்ந்தாலும் சாதாரண ரசிகனான அடியேன் மனதில் மாஸ் ஹீரோக்களுக்கும் தனி இடம் உண்டு. தமிழில் மாஸ் ஹீரோ என்றால் அது ரஜினிதான் அவர் இடத்தில்  ..... அட வேறு எவரையும் வைத்துப் பார்க்க இயலாது. ரஜினியை தவிர்த்து இந்திய சினிமாவில் ரசிக்கும் மாஸ் ஹீரோ அக்ஷைகுமார் (Akshay Kumar). ஆக்சன், அமைதி என ஹிந்தி சினிமாவில் கான்களுக்கு சவால் விடக்கூடிய மார்க்கெட் வேல்யூ உள்ள அக்ஷையின் சினிமா என்ட்ரி அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. குரூப் டான்சர், ஸ்டன்ட்மேன், கிளாப்பாய் என சினிமாவின் அடிமட்ட வேலையிலிருந்து சுப்பர் ஹீரோவாக உயர பல குட்டிக்கர்ணங்களை அவர் போட வேண்டியிருந்தது. வசதி வாய்புகளுக்கு குறைவில்லாத குடும்பத்தில் 9 September 1967 ஆம் ஆண்டு பஞ்சாபில் உள்ள அம்ரிஸ்தரில் அக்ஷை பிறந்தார். இவரது தந்தை இராணுவத்தில் பணிபுரிந்ததால் சிறுவயது முதல் தற்காப்புகலை, சண்டைபயிற்சியில் ஆர்வம் அதிகம் இருந்தது. முறையாக நடனமும் கற்றுதேர்ந்த இவர் சினிமா மட்டுமே வாழ்க்கை என நம்பி "Rajive Hari Om Buhatia" என்ற இயற்பெயரை மாற்றிக்கொண்டு அக்ஷைகுமாராக மும்பைக்கு விரைந்தார். உதவி புகைப்பட கலைஞராக தனது தனிப்பட்ட சினிமா வாழ்க்கையைத் தொடங்கி அவ்வபோது சில திரைப்படங்களில் ஓரமாக தலை காட்டினார். 

Leaf.

திக்குத் தெரியாத காட்டில் - (மீண்டும் பாரதி, மீண்டும் பாம்பே ஜெயஸ்ரீ, மீண்டும் கண்ணம்மா)..திக்குத் தெரியாத காட்டில் - உனைத்
தேடித் தேடி இளைத்தேனே. 

மிக்க நலமுடைய மரங்கள், - பல
விந்தைச் சுவையுடைய கனிகள், - எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள், - அங்கு
பாடி நகர்ந்து வரு நதிகள், - ஒரு ... (திக்குத்) 

நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள், - எங்கும்
நீளக் கிடக்குமலைக் கடல்கள் - மதி
வஞ்சித் திடுமகழிச் சுனைகள், - முட்கள்
மண்டித் துயர்பொடுக்கும் புதர்கள், - ஒரு ... (திக்குத்) 

Sunrise.

To Kill a Mocking bird (பாடும் பறவையின் மௌனம்).


உலக புகழ்பெற்ற புத்தகங்கள், விருதுகளை தட்டிச் சென்ற படைப்புகள் இவற்றை மொழிபெயர்ப்பதில் சில நேரங்களில் சிக்கலான சவால்களை சந்திக்க நேரிடலாம். உலக மொழிகள், கலாச்சாரம், வாழ்க்கை முறை, பெயர்கள், வாய்வழி உரையாடல்கள் இவற்றின் சுவை மாறாமல் மொழிபெயர்த்து வாசகனை புத்தகத்தின் பக்கத்திற்குள் இழுத்துக் கொண்டுவர சில தடைகளைத் தாண்ட வேண்டும். புலிட்சர் விருதுபெற்ற " To Kill a Mocking bird " என்ற இந்த நாவலை மொழிபெயர்த்ததிலும் மேற்கண்ட சில நடைமுறை சிக்கல்கள் தெரிகின்றன அவற்றைத் தாண்டி இந்த புத்தகத்தை புரட்டலாம் வாருங்கள்.

பாரம்.மாலைப்பொழுதிலொரு - (பாரதி).

சார், எல்லா புத்தகங்களையும் வாசிக்கிறீர்கள் பாரதியாரின் கவிதைகளை படித்திருக்கிறீர்களா?  என துரை என்பவர்தான் எனக்கு பாரதியை ஆழம் வரை காட்டினார். பள்ளிக்கூட வயதில் பரிட்சைக்கு கிடைக்கும் ஐந்து மதிப்பெண்னுக்காக பாரதியை படித்திருக்கிறேன். புகழ்பெற்ற அவரது கவிதைகள் ஒன்றிரண்டு தெரியும் ஆனால் அடி ஆழம்வரை தொட்டதில்லை. பரிசாக கிடைத்த பாதியாரின் கவிதைகள் தொகுப்பு என் புத்தக அலமாரியில் நீண்ட வருடங்களாக தூங்கிக் கொண்டிருந்தது. உலக இலக்கியம் சிறந்த படைப்புகள் என ஒருசிலவற்றை மேய்ந்த பிறகே பாரதியை கையில் எடுத்தேன். ஏழை கவிஞன், அன்பு, காதல், கோபம், பக்தி, கனவு, ஆசை, வறுமை, இயலாமை, ஆசுவாசம் என கவிதையில் வாழ்ந்தவன் இந்த மீசைக்காரனத் தவிர உலகில் எவருமில்லை. அவனுக்கு மிஞ்சிய கவிஞன் என யாருமில்லை. கொஞ்சம் ஆசுவாசம் மற்றும் சில வலி மறைய ஆறுதல் தேவைப்பட்டால் உடனே பாரதியை கையில் எடுத்துவிடுவேன் அவன் கவிதைவரிகளில் தொலைந்து போவேன் இல்லை என்றால் ஒலிவடிவில் அவன் பாடல்களில் சரணடைந்து விடுவேன். பாரதியின் கவிதைகளை நல்ல இசையோடு பாடல்களாகக் கேட்பது தனியழகு. கர்நாடக சங்கீதத்திலும் சில திரைப்படங்களிலும் அவவனது பாடல்களை கேட்கலாம். பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் ஒலிக்கும் இந்த கவிதை பாடல் பாரதி எனும் மகா சமுத்திரத்தில் ஒரு துளி. ஒலி வடிவில் இருந்த அந்த துளியை "மாலைப்பொழுதிலொரு" ஏழை மனதிற்கு சற்று ஆசுவாசமளிக்கலாம் என்ற நம்பிக்கையில் வீடியோவாக காட்சிப் படுத்தியிருக்கிறேன். ஒரு சின்ன முயற்சி.


Jasmine.

Catch The Rain.

இரத்தம் தோய்ந்த காட்சிகள், உயிரை உரையவைக்கும் சில விபத்துகள், வேடிக்கை, பாடல்கள், என வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் நண்பர் அனுப்பும் சில வீடியோக்களை Just like that என கடந்துவிடுவேன். ஆனால் எனது ஜூனியர் அனுப்பிய இந்த வீடியோவை அவ்வாறு கடந்து செல்ல முடியவில்லை. மழைநீரை சேமிக்கும் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு உணர்த்த catchtherain.org என்ற இணையதளத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதில் கதைசொல்லும் யுக்தியுடன் விளையாட்டு, புத்தகம் என மழைநீர் சேகரிப்பை விளக்குகின்றனர்.  குழந்தைகள் விளையாட்டாக மழைநீர் சேகரிப்பை உணர ஆண்ராய்டு மற்றும் iOS மொபைல் கேமாகவும் இதில் வடிவமைத்துள்ளனர். பள்ளிகளுக்கு மிகவும் பயண்படும் இந்த இணையதளத்தில் பெறப்பட்ட வீடியோதான் இந்த Catch the rain. மிகக் குறைந்த மணித்"துளி"யில் வியக்கவைக்கும் செய்தியை நேர்த்தியாக சொல்லும் இந்த வீடியோவை தங்களுடன் பகிர்கிறேன்.


Way of beautiful life (Mobile click)

மலையாள கரையோரம்.


டூயட் பாடல் என்றால் டக் என்று ஹீரோ கோட்டை மாட்டிக் கொண்டும், சிக் என்று ஹீரோயின் ஸ்கர்ட்டை போட்டுக் கொண்டும் வெளிநாட்டிற்கு பறந்து விடுகிறார்கள். இல்லை என்றால் கம்மியான வெளிச்சத்தில் கட்டிலில் உருண்டு புரண்டு, மூக்கும் மூக்கும் உரச பாடுகிறார்கள். விரசம் ஆடை குறைப்பு எதுவுமில்லாத அழகான டூயட்டை பார்த்து ரசிக்க ராமராஜன் காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டும் அல்லது நம்ம பார்டரை கொஞ்சம் தாண்ட வேண்டும். அல்ட்ரா மாடர்ன் கொஞ்சம் எட்டிப் பார்த்தாலும், எதார்த்த சினிமாக்கள் மலையாளத்தில் இன்றுவரை வந்துகொண்டுதான் இருக்கின்றன. மலையாள திரைப்படங்களைப் போலவே பாடல்களும் எதார்த்தமானவை. அங்கு டூயட் பாட வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற அவசியம் ஏற்படுவதில்லை, கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட அந்த ஊரில் லொக்கேசனுக்கும் பஞ்சமில்லை, பக்கத்து தெருவிற்கு சென்று அழகான பாடலை காட்சிப்படுத்தி விடுகிறார்கள். அந்த இயற்கையோடு அழகியலில் நிறைந்த பாடல்கள் கேட்பதற்கு மட்டுமில்லாமல் பார்ப்பதற்கும் பரவசமூட்டுபவை. அப்படி, அடியேன் ரசிக்கும் சில மலையாள கரையோர டூயட் பாடல்கள் இவை தங்களின் பார்வைக்கும்.