☰ உள்ளே....

Viddsee (குறும்படங்களுக்கான ஆண்ராய்டு மென்பொருள்)..பாடல்கள், சினிமா, மற்றும் சில வீடியோக்களை ரசிக்க ஆயிரம் ஆண்ராய்டு மென்பொருள்கள் பிளே ஸ்டோரில் கொட்டிக் கிடக்கின்றன. "Online Mobile Application" வகையைச் சார்ந்த இவைகள் நமது இன்டெர்நெட் பேக்குகளை பட்டினி கிடந்தவன் போல் தின்றுதீர்த்துவிடும் அதனால் இதுபோன்ற சில மென்பொருள்களை தவிர்த்துவிடுவேன். சமீபத்தில் ஒரு குறும்படத்தை இணையத்தில் தேடிக் கொண்டிருந்தேன் எதேச்சையாக கிடைத்தது "Viddsee " எனும் இதே வகை மென்பொருள். 2012 -ல் சிங்கப்பூரை சேர்ந்த "Ho Jia Jian" மற்றும் "Derek Tan" என்ற நண்பர்கள் இணைந்து ஒரு பேஸ்புக் பக்கத்தை தொடங்கினர், அதில் ஆசியாவின் குறும்படங்கள் சிலவற்றை தொகுத்து வைத்தனர் அவர்களது பக்கங்கள் அனைவரையும் கவர 2014 - ல் இணையதளமாக வெளியிட்டனர். தற்போது அந்த இணையதளம் மொபைல் யுகத்திற்கு தக்கவாறு ஆண்ராய்டு மற்றும் iOS - களில் மென்பொருளாக கிடைக்கிறது.

பத்து பதினைந்து நிமிடங்கள் ஓடக்கூடிய உலகின் சிறந்த குறும்படங்களை நாம் ரசிக்க இதில் தொகுத்து வைத்துள்ளனர். ஒவ்வொன்றும் நாடு, மொழி, வகை, என தனித்தனி பிரிவுகளாக பிரித்து வைக்கப்பட்டு தேடுதலுக்கு மிக சுலபமாக இருக்கிறது. குறும்படத்தைப் பற்றிய சிறிய தகவல்களையும் கொடுத்திருக்கிறார்கள். உலக அரங்கில் விருது பெற்ற குறும்படங்களும் காணக் கிடைக்கின்றன. ஒவ்வொரு நாளும் புதிய குறும்படங்கள் இணைக்கப்பட்டு அதில் வாரந்தோரும் சிறந்தவைகள் என காட்சி படுத்தப்பட்டுள்ளன. அந்த தகவல்கள் அனைத்தும் நமக்கு செய்தியாக கிடைக்கும் Notification வசதியும் இதில் உண்டு. டவுன்லோடு என தனி பிரிவு கொடுக்கப்பட்டுள்ளது அதில் வீடீயோக்களை பதிவிரக்கம் செய்து கிடைக்கும் நேரத்தில் Offline -ல் பார்த்துக் கொள்ளலாம் (கவணிக்க வீடியோக்களை தனியாக சேமிக்க முடியாது). உங்களது குறும்படங்களையும் இதில் இணைக்கலாம் தனிக்கைக்குப் பின் அவை வெளியிடப்படும். அவ்வாறு வெளியிடப்படும் படங்களை ரசித்தவர்களின் எண்ணிக்கையும், கருத்துக்களையும் இதில் காணலாம். ஆப்பில் iOS மற்றும் Google Play store களில் கிடைக்கிறது 5.5 MB கொண்ட இது மிகக் குறைந்த இடத்தையே நிரப்பிக்கொள்கிறது. சிறிய தேடுதலின் போது கிடைத்த பெரிய பொக்கிஷம் போல் உணர்ந்தேன். குப்பைகளாக பல மென்பொருள்கள் இருக்க பயனுள்ள இந்த Viddsee - ஐ நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

இணையதள முகவரி. 

   Awesome Short Films | Viddsee
        https://www.viddsee.com/