சன்டே ஸ்பெஷல்...



வாரநாட்களில் எழ மனமில்லாமல் இ....ழுத்து போர்த்தி தூங்கினாலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் அலாரம் அடிக்காமல் விடிந்துவிடுகிறது. (ஏன் என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்) சனிக்கிழமை பார்ட்டி அரட்டைக் கச்சேரி, செகன்ட்ஷோ சினிமா எல்லாவற்றிர்க்கும் வயதாகிவிட்டதால் ஞாயிற்றுக்கிழமைக்கு பகல் அதிகமாகிவிடுகிறது. பொதுவாக அடியேன் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை அடைகாக்கும் கோழிதான். மதியம்வரை எதுவும் சாப்பிடாமல் விரதம் கடைபிடிப்பதுண்டு, ஏதாவது எங்காவது வேலை இருந்தால் ஒரு ஃகாபி, ஒரு சிகரெட்டோடு சரி. மீதி நேரங்களில் அறையே சரணாகதி. தரையை சுத்தம் செய்து, புத்தகங்களை அடுக்கி வைத்து, துணிகளை துவைத்து, காய வைத்து , அயர்ன்பண்ணி, மடித்து வைத்து, சேவிங் செய்து, கு....ளித்து, ஸ்..ஸ் ... அப்பாடா, ஒரு பொறுப்புள்ள பேச்சுலரின் பொழுதாகத்தான் இருக்கும். அந்த தருணங்களில் சலிப்புத் தெரியாமல் இருக்க உற்சாகத்திற்காக சில பாடல்களை கதறவிடுவதுண்டு. அந்த பாடல்களை கேட்டுக்கொண்டே பசி மறந்து வேலை ஓடும். அப்படி அடியேன் ரசிக்கும் சன்டே ஸ்பெஷல் பாடல்களில் சில..(பாடல்களின் சுவை கேட்கும் தருணங்களில் ஒளிந்திருக்கிறது) .