☰ உள்ளே....

அடுத்த தலைமுறை எலி..

ஒன்றிரண்டு ஆப்பிள் வைத்திருந்தேன், அதனுடன் வாழைப்பழம் இருந்தது. பாதிதின்ற பிஸ்கட் பாக்கெட்டையும் கொறித்து மிச்சம் வைத்த கடலையையும் மறந்துபோய் திறந்தே வைத்திருந்தேன். எப்போதும் கைவசமிருக்கும் பேரிச்சை பழமும் புரூட் ஜாமும் அதே இடத்தில் அப்படியே இருந்தது. இத்தனை இருந்தும், நேற்றிரவு அந்த பாழாய் போன எலி லேப்டாப்பின் சார்ஜர் ஒயரை கடித்துக் குதறியிருந்தது.

- அடுத்த தலைமுறை எலியாக இருக்கும் என நினைக்கிறேன்...