இடுகைகள்

May, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
☰ உள்ளே....

Sarabjit - Airlift (உண்மைக் கதை).

படம்
உண்மை நிகழ்வுகளை திரைப்படமாக்குவது சவால். எல்லோருக்கும் தெரிந்த பரவலாக விமர்சிக்கப்பட்ட நிகழ்வுகள் என்றால் அதை திரைப்படமாக்க மாபெறும் தைரியம் தேவைப்படும். இங்கிருக்கும் இனம், மொழி, மதம், அரசியல் மற்றும் நிகழ்வோடு தொடர்புடையவர்களை சம்மதித்து, சமாளித்து அதை காட்சிப்படுத்துவது என்பது கத்திமேல் நடப்பதற்குச் சமம். அதையும் தவிர்த்து சென்சார் போர்டு, மனிதநல ஆணையம், புளூகிராஸ், ரெட்கிராஸ், ஆரஞ்சு, மஞ்சள், ஊதா, கருப்பு, என எல்லா கிராஸ்களையும் கிராஸ் செய்து, குப்பை படத்தின் டிரைலரையும் பாடல்களையும் YouTube சுடாகும் வரை பார்க்கும் நம் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்குள் இயக்குனருக்கு இடுப்புவலி வந்துவிடும்.தமிழில் அப்படி வெளிவந்த திரைப்படங்கள் குறைவு என்பதை விட மிகக் குறைவு என சொல்லலாம். இங்கு பெயர் வைத்தாலே பூகம்பம் வந்துவிடுகிறது. ஆனால் வடக்கே 1947 -ல் கிடைத்த சுதந்திரம் கொஞ்சம் மிச்சமிருக்கிறது, ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, வங்காளி மொழியில் வருடத்திற்கு இரண்டு திரைப்படங்களாவது மசாலா வாடையில்லாமல் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு வெளிவருகின்றன. வசூல் சாதனை என்றில்லாமல் ஓரளவிற்கு கையை கடிக்…

Please Name it.

படம்

வாக்மேன்.

படம்
ஹெட்போன் இல்லாத காதுகளே கிடையாது எனலாம். காலையில் வாக்கிங் போவதில் தொடங்கி வேலை, பயணம், அலுவலகம், பள்ளி கல்லூரிகள், கடைசியாக தூங்கும்போது கூட நம்மோடு தொங்கிக் கொண்டு நமக்கு பாடல்களை தந்து கொண்டே இருக்கிறது. வசதியான மீயூசிக் சிஸ்டம் இருந்தாலும் இந்த ஹெட்போனில் தனிமையாக பிடித்த பாடல்களை, நாம் மட்டுமே கேட்டு நினைவுகளில் கரைந்து போவது தனிசுகமே. கம்மல் போல காதில் மாட்டிக்கொள்ளும் ஹெட்போன்களும், காதோடு பொருத்திக்கொள்ளும் மைக்ரோ அளவிற்கு ஹெட்போன்களும் கண்டுபிடிக்கத் தொடங்கிவிட்டனர். எல்லாம் இந்த ஸ்மார்ட்போன் வந்ததற்குப் பிறகு குறுகிய காலத்தில் நிகழ்ந்தவை. அதற்குமுன் பாடல்களை தனியே நாம் மட்டும் கேட்க, எளிதில் எங்கும் எடுத்துச் செல்ல சிறிய கேசட்பிளேயர் கொண்ட வாக்மேன்களை பயன்படுத்தி வந்தோம், இந்த வாக்மேன் தொழில்நுட்பம்தான் இன்றைக்கு நம் காதோடு உறவாடும் ஹெட்போன்களுக்கும், நினைத்த இடத்தில் பாடல்களை கேட்கும் ஸ்மார்ட்போன், ஐ-பேட் போன்ற சாதனங்களுக்கும் முன்னோடியாக இருந்தது. அந்த வாக்மேன் கண்டுபிடித்ததைப் பற்றிய சுவாரசியமான நிகழ்வை பார்க்கலாம்.

பெரிய டிவி அளவிற்கு டேப்ரிக்கார்டர் விற்பனையாகிக் கொண்…

Please Name it..

படம்

ஞாயிற்றுக்கிழமை விருந்து..

படம்

Dark light..

படம்

Viddsee (குறும்படங்களுக்கான ஆண்ராய்டு மென்பொருள்)..

படம்
பாடல்கள், சினிமா, மற்றும் சில வீடியோக்களை ரசிக்க ஆயிரம் ஆண்ராய்டு மென்பொருள்கள் பிளே ஸ்டோரில் கொட்டிக் கிடக்கின்றன. "Online Mobile Application" வகையைச் சார்ந்த இவைகள் நமது இன்டெர்நெட் பேக்குகளை பட்டினி கிடந்தவன் போல் தின்றுதீர்த்துவிடும் அதனால் இதுபோன்ற சில மென்பொருள்களை தவிர்த்துவிடுவேன். சமீபத்தில் ஒரு குறும்படத்தை இணையத்தில் தேடிக் கொண்டிருந்தேன் எதேச்சையாக கிடைத்தது "Viddsee " எனும் இதே வகை மென்பொருள். 2012 -ல் சிங்கப்பூரை சேர்ந்த "Ho Jia Jian" மற்றும் "Derek Tan" என்ற நண்பர்கள் இணைந்து ஒரு பேஸ்புக் பக்கத்தை தொடங்கினர், அதில் ஆசியாவின் குறும்படங்கள் சிலவற்றை தொகுத்து வைத்தனர் அவர்களது பக்கங்கள் அனைவரையும் கவர 2014 - ல் இணையதளமாக வெளியிட்டனர். தற்போது அந்த இணையதளம் மொபைல் யுகத்திற்கு தக்கவாறு ஆண்ராய்டு மற்றும் iOS - களில் மென்பொருளாக கிடைக்கிறது.
பத்து பதினைந்து நிமிடங்கள் ஓடக்கூடிய உலகின் சிறந்த குறும்படங்களை நாம் ரசிக்க இதில் தொகுத்து வைத்துள்ளனர். ஒவ்வொன்றும் நாடு, மொழி, வகை, என தனித்தனி பிரிவுகளாக பிரித்து வைக்கப்பட்டு தேடுதலுக்கு மிக ச…

Green..

படம்

அடுத்த தலைமுறை எலி..

ஒன்றிரண்டு ஆப்பிள் வைத்திருந்தேன், அதனுடன் வாழைப்பழம் இருந்தது. பாதிதின்ற பிஸ்கட் பாக்கெட்டையும் கொறித்து மிச்சம் வைத்த கடலையையும் மறந்துபோய் திறந்தே வைத்திருந்தேன். எப்போதும் கைவசமிருக்கும் பேரிச்சை பழமும் புரூட் ஜாமும் அதே இடத்தில் அப்படியே இருந்தது. இத்தனை இருந்தும், நேற்றிரவு அந்த பாழாய் போன எலி லேப்டாப்பின் சார்ஜர் ஒயரை கடித்துக் குதறியிருந்தது. - அடுத்த தலைமுறை எலியாக இருக்கும் என நினைக்கிறேன்...

ரஹ்மேனியா (டேப்ரிக்கார்டர் நினைவுகள்) .

படம்
சிக்குபுக்கு ரயில்,  ஹம்மா ஹம்மா என A.R. ரஹ்மானின் புயல் வீசத் தொடங்கிய காலம், டிவி ரேடியோ டேப்ரிக்கார்டரில் எப்போதாவது அவரின் பாடல்களைக் கேட்டால் ஓடிப்போய் காதை திருகி நாங்கள் வசித்த காலனியே கதறும்படி சப்தமாக ஒலிக்கவிடுவேன். சிடிக்களும், செல்போன்களும் வெளித் தெரியாத அந்த தென்னூறுகளில் கேசட் போடும் டேப்ரிக்கார்டர் மட்டுமே தனி இசைக்கான தேர்வாக இருந்தது. ரஹ்மானின் பாடல்களை தனியே பதிந்து நாள் முழுவதும் கேட்டுக் கொண்டிருந்த தருணம், ரஹ்மான் தமிழில் இருந்து நேரடியாக ஹிந்தி திரையுலகிற்கு சென்றார். ரங்கீலா அவருக்கு புகழைத் தேடித்தர இந்தியா முழுவதும் அப்போது ரஹ்மேனியா பிடித்திருந்தது. நாங்கள் வசித்துவந்த காலனியில் இருந்த அருள் அண்ணாதான் ரஹ்மானின் ஹிந்தி பட பாடல்களை அறிமுகப்படுத்தி வைத்தார். Daud, Kabi Na Kabi, Doli Sajake Rakhna (காதலுக்கு மரியாதை), Taal, Thakshak, Pukar என அவர் இசையமைத்த படங்களின் கேசட்டுகளை அருள் அண்ணாவிடம் கடன் வாங்கி கேட்டதுண்டு. அதுபோல் ராகம் மியூசிக்கல்ஸ் எனக்காக சில பாடல்களை தேடி பதிந்து கொடுத்த கேசட்டுகளை நீண்ட வருடங்கள் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். ஹிந்தி பாடல்களை…

Lion Of Desert (1981).

படம்
உலக செய்திகளை திறந்தால் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நிச்சயம் இடம்பெரும். குறிப்பாக ஆப்பிரிக்க, அரபு நாடுகளில் குண்டுவெடிப்பு என்பது டீயோடு சேர்த்து சமோசா சாப்பிடும் அன்றாட நிகழ்வு. ஆல்பிரட் நோபலுக்கும் ஐன்ஸ்டினுக்கும் தினம் தினம் அங்கு பூர்ணகும்ப மரியாதை செலுத்துகின்றனர். புரட்சி, புண்ணாக்கு, புளியங்கொட்டைகள் எல்லாம் வெறும் உள்ளங்கைக்குள் அடங்கிவிட்ட இந்த நவீன யுகத்தில் ஏன் அந்த நாடுகளில் மட்டும் இப்படி நடக்கிறது? அப்படி என்ன அங்கு இருக்கிறது? என்று தோண்டினால் ....எண்ணெய் வரும். நூற்றாண்டு காலமாக அங்கு பற்றி எரியும் எண்ணெய் யுத்தத்திற்கு வளர்ந்த நாடுகள் பல இன்றைக்கும் திரி திரித்துக் கொண்டிருக்கின்றனர். சாதாரண மக்களை ஒன்றுபடுத்தும் மதமும், அரசியலும், கல்வியும் பொய்த்துப்போன அந்த நாடுகளின் நிலமை சற்று கவலைக்கிடமானது. குறிப்பாக வழி நடத்தும் நல்ல தலைவர்கள் இல்லாது போனதே அந்த நாடுகளை சிதைத்து சின்னாபின்னாமாக்கிக் கொண்டிருக்கின்றது. வரலாற்று புத்தகத்தை கொஞ்சம் தூசுத்தட்டி கொட்டாவி வரும்முன் புரட்டிப் பார்த்தால் அந்த நாடுகளிள் சில தலைவர்கள் விடிவெள்ளியாக தோன்றி மறைந்து கல்லறைக்குள் உறங்கிக்…

தோட்டியின் மகன்.

படம்
மலையாள இலக்கியத்தில் நவீன புனையெழுத்தை புகுத்தி அனல் பறக்கச் செய்தவர்களில் "தகழி சிவசங்கரப் பிள்ளை " குறிப்பிடத்தக்கவர். தகழி என்றவுடன் செம்மீன் என அடுத்த தலைமுறை கூட அவரை நினைவுகொள்ளும். எளிய மக்களின் வாழ்க்கைக்குள் புகுந்து அவர்களின் மன உணர்வுகளை வார்த்தைகளால் எப்படி வெளிக்கொணர்கிறார் என்ற ஆச்சர்யம் அவரது படைப்புகளை வாசிக்கும் போது நாம் உணரலாம். மலையாள இலக்கியத்திலும், சமூக பார்வையிலும் அவரது படைப்புகள் புதிய தாக்கத்தையும், சில அதிர்வுகளையும் ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. அவரது படைப்பில் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த குறுநாவல்தான் " தோட்டியின் மகன்".
கதைக்களம் சேரி, யாருக்கும் அஞ்சிடாத தலைப்பு, இதுவரை கேட்டிராத பாமரனனின் கொச்சை மொழி, யாரும் வாழ்ந்திடாத வாழ்க்கை, மூக்கை மூடவைக்கும் மலத்தின் வாடை, சமூகத்தால் பின்தள்ளப்பட்ட ஒரு இனம் இதுதான் இந்த நாவலின் சிறப்பம்சம். கதை தோட்டிகள் என்று சொல்லக்கூடிய ஒதுக்கப்பட்ட சமூகத்தைப் பற்றியதா? என கேட்டால், ஆம் என சொல்லலாம். கதையின் நாயகன் முதல் அனைவரும் தோட்டிகள், அவனது காதலியும் தோட்டிச்சிதான். கதையின் வாழ்வும், இடமும் காதல…

சன்டே ஸ்பெஷல்...

படம்
வாரநாட்களில் எழ மனமில்லாமல் இ....ழுத்து போர்த்தி தூங்கினாலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் அலாரம் அடிக்காமல் விடிந்துவிடுகிறது. (ஏன் என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்) சனிக்கிழமை பார்ட்டி அரட்டைக் கச்சேரி, செகன்ட்ஷோ சினிமா எல்லாவற்றிர்க்கும் வயதாகிவிட்டதால் ஞாயிற்றுக்கிழமைக்கு பகல் அதிகமாகிவிடுகிறது. பொதுவாக அடியேன் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை அடைகாக்கும் கோழிதான். மதியம்வரை எதுவும் சாப்பிடாமல் விரதம் கடைபிடிப்பதுண்டு, ஏதாவது எங்காவது வேலை இருந்தால் ஒரு ஃகாபி, ஒரு சிகரெட்டோடு சரி. மீதி நேரங்களில் அறையே சரணாகதி. தரையை சுத்தம் செய்து, புத்தகங்களை அடுக்கி வைத்து, துணிகளை துவைத்து, காய வைத்து , அயர்ன்பண்ணி, மடித்து வைத்து, சேவிங் செய்து, கு....ளித்து, ஸ்..ஸ் ... அப்பாடா, ஒரு பொறுப்புள்ள பேச்சுலரின் பொழுதாகத்தான் இருக்கும். அந்த தருணங்களில் சலிப்புத் தெரியாமல் இருக்க உற்சாகத்திற்காக சில பாடல்களை கதறவிடுவதுண்டு. அந்த பாடல்களை கேட்டுக்கொண்டே பசி மறந்து வேலை ஓடும். அப்படி அடியேன் ரசிக்கும் சன்டே ஸ்பெஷல் பாடல்களில் சில..(பாடல்களின் சுவை கேட்கும் தருணங்களில் ஒளிந்திருக்கிறது) . 

Glittering.

படம்

π = 3.1415.... (Pi).

படம்
சென்ற பதிவில் φ (PHI) பற்றி பார்த்தோம் அதே பெயரில் நமக்கு நன்கு தெரிந்த மற்றொன்றைப் பற்றியும் பார்த்துவிடலாம். φ போல இதற்கு தெய்வீகசமதன்மை எல்லாம் கிடையாது. ஆனால் வட்டத்தின் சுற்றளவை அளக்க இந்த குறியீட்டை கணிதத்தில் அடிக்கடி பயன்படுத்தி வாத்தியாரிடம் அடி-கடி வாங்கியிருப்போம் அவ்வளவுதான். வழக்கம்போல நல்லநாள், நல்ல நேரம், இராகுகாலம், எமகண்டம் எல்லாம் பார்த்து கிரேக்கர்கள் இதற்கும் பெயர் வைத்தனர். வட்டத்தினை அளக்க உதவும் பெரிமீட்டர் என்ற அளவின் கிரேக்க வார்த்தையான "περίμετρον " (Periphery) என்பதின் முதல் எழுத்தை π (Pi) என இதற்கு செல்லமாக பெயர் சூட்டினர்.
முதன்முதலாக சீனர்கள் இந்த π ன் மதிப்பிற்கு சற்று குத்துமதிப்பான ஒரு அளவைக் கொண்டு வட்டத்தினை அளந்து வந்தனர். பிறகு பாபிலோனியர்கள் ஓரளவுக்கு நெருக்கமாக பயன்படுத்தினர். கிரேக்கர்களின் கட்டிடக்கலைக்கு தேவைபட்டபோது இந்த π பாப்புலரானது. ஆர்கிமிடிஸ், ஐசக் நீயூட்டன், போன்ற பல அறிஞர்கள் இந்த π யை கொத்துபரோட்டா போட்டு அதன் மதிப்பை ஆராய்ந்தனர், ஆனால் கி.பி 499- ல் வாழ்ந்த இந்தியரான ஆரியபட்டாதான் மிகத் துள்ளியமாக கணித்தார். அவர் கணித்த …

கும்பிபாகம் (வெயில் Feeeeeling..).

படம்

தூரிகை -14

படம்

இரண்டு நிமிடம் ...பிளீஸ்...

படம்
தலைக்கு ஒன்னு காலுக்கு இரண்டு என காற்றாடி சுற்றினாலும், அடச்சே வீட்டுக்குள்ள மனுசன் இருப்பானா? என நொந்து, சுட்டெரிக்கும் இந்த வெயிலில் வேர்த்துக் கொட்டி, உள்ளே வெளியே போட்டிருப்பது எல்லாம் ஒருவழியாக நனைந்து, என்னா வெயில்? என புலம்பிக்கொண்டு மொட்டைமாடிக்கோ, வாசல் பக்கத்திற்கோ ஓடிப்போய் உட்கார்ந்து, தூரத்தில் தெரியும் மரத்தைப் பார்த்து இது மரமா இல்லை சிலையா? அசையவே மறுக்கிறது என திட்டி தீர்த்து, டெல்லியில் 38.5°C பீகாரில் 39.5 °C இப்படியே போனா உலகம் ஒருநாள் ஆப்பாயில் ஆகிவிடும் என்ற சமூக அக்கரையெல்லாம் வியர்வையோடு சேர்ந்து வழிய, சின்ன வயசு கிராமத்து வெயில் காலத்து நினைவுகளை ரீவைன்ட் பண்ணும்போது, லேசா கொஞ்சம் இரண்டு நிமிடம் காற்றடிக்கும் பாருங்கள் அடடா!. அதுபோலத்தான் இந்த பாடல்கள்.