☰ உள்ளே....

தீம் மியூசிக்...


நீண்ட நாட்களுக்குப்பின் நண்பர் அமீர் அவர்களுக்கு போன் செய்தேன். போனை எடுத்தவுடன் எதைப்பற்றியும் பேசாமல் ஒரு நிமிடம் இதைக்கேளு என்றார். அவரிடத்திலிருந்து அரைகுறையாக ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருப்பது போல் இருந்தது ஒன்றுமே புரியவில்லையே என்றேன். நான் அடிக்கடி கேட்கும் தீம் மியூசிக், இதை கேட்கும் போதெல்லாம் உற்சாகமாகி விடுவேன் தற்போது கேட்டுக் கொண்டிருந்தேன், நீதான் பாடல்களைப்பற்றி எழுதிக் கொண்டிருக்கிறாயே அதனால்தான் உன்னையும் இதில் இழுத்துவிட்டேன் என்றார். நிஜம்தான் அந்த Mission Impossible படத்தின் தீம் மியூசிக்கில் உற்சாகத்திற்கான பூஸ்ட், காம்ப்ளான், ஹார்லிக்ஸ் கலந்திருக்கும். அதை கேட்கும்போது ஒருவித ஹீரோயிசம் பிறக்கும், நானும் பலமுறை கேட்டிருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப்பின் அவருடன் பேசியது சுவாரசியமாக இருந்தது. இன்று பிளாக்கரில் என்ன எழுதலாம் என்பதற்கு தீமாக தீம் மியூசிக்கே கிடைத்திருந்தது. 


தீம் மியூசிக் என்பது திரைப்படத்தின் அடையாளம் சில திரைப்படங்களை அதன் தீம் மியூசிக்கை வைத்து எளிதாக கண்டுபிடித்துவிடலாம் Cowboy, Jamesbond, Casper போன்ற ஹாலிவுட் திரைப்படங்களின் தீம் மியூசிக் 60 வருடங்களைத் தாண்டி இன்னமும் ரசிகர்களின் நினைவில் இருக்கிறது. ஹாலிவுட்டை பொருத்தவரை அங்கு பாடல்கள் கிடையாது என்பதால் பின்னணி இசை பெரிதாக பேசப்படும். ஒருபடம் வெற்றியடைந்தால் அந்த பின்னணி இசையைக்கொண்டு தனி ஆல்பமாக வெளியிடுவார்கள். டைட்டானிக் படத்தில்வரும் தீம் மியூசிக்கை நாம் அனைவரும் கேட்டிருப்போம் இன்றளவும் அதுதான் காதலின் இசை. ஆனால் இந்திய மொழிப்படங்களில் அப்படியில்லை இங்கு பாடல்கள் உயிர்நாடியாக இருப்பதால் நாம் மற்ற பின்னணி இசைகளை மேலோட்டமாக கடந்து விடுகிறோம். மேலும் இங்குள்ள ஹீரோக்கள் நடந்தால், உட்கார்ந்தால், பாத்ரூம் சென்றால் இந்த தீம் மியூசிக் வருவதால் சலிப்புத்தட்டி விடுகிறது. அதையும்தாண்டி சில திரைப்படங்களின் பின்னணி இசை மனதை கொள்ளையடுத்துச் செல்லும். 
பிடித்த பாடல்களைப் போல சில திரைப்படங்களின் பின்னணி இசைத் தொகுப்புகளையும் சேமித்து வைத்திருக்கிறேன். அவற்றில் அடியேன் சுவைக்கும் ஹீரோயிசம் கலந்த சில ஹாலிவுட் தீம் பாடல்கள் இவை, தங்களுடைய ரசனைக்காக. 

Mission Impossible-2: 

Sky fall End : 

WWF John Cena's Intro : 

The Man From UNCLE:

Spider-man-3 (black suited Spider-man). 

Pirates of The Caribbeans: