பார்ட்டி சாங்ஸ் வித் ஹார்ட் கவுர்.

ந்திய பார்டிகளில் இக்கா சிங், ஹனி சிங், மைகா சிங், ஆதித்யா பிரதீக் சிங் (பாட்ஷா), பிளேஸ் பேன்ற ஆண்கள் ஹிப் ஹாப் மற்றும் ராப் இசையில் கலக்கிக் கொண்டிருக்க அவர்களுக்குச் சற்று சளைக்காமல் போட்டி போடக் கூடிய ஒரே பெண் பார்ட்டி சிங்கர் யார் என்றால் அது தரன் கவுர் தில்லான் (Taran Kaur Dhillon) செல்லமாக ஹார்ட் கவுர் (Hard Kaur). அனிருத்துடன் இணைந்து சென்னை சிட்டி கேங் ஸ்டார் பாடலை பாடினாரே அவர்தான், அவரேதான்.


உத்திரபிரதேசம் கான்பூரில் பிறந்த இவரின் குழந்தைப் பருவம் சற்று கசப்பானதாக இருந்தாலும், இங்கிலாந்தில் தன் இளமைப் பருவத்தில் ஹிப் ஹாப் இசையையும் அதன் நுணுக்கங்ககளையும் கற்றுக்கொண்டார். ஏக் கிளாசி என்ற அவரது ஆல்பம் பாடல்தான் இவரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்ததது. இவரது தனித்தன்மையான கரகர கட்ட குரல் (அது போதை) மற்ற ஹிப் ஹாப் பாடகர்களுடன் போட்டிபோட வைத்தது. ஜானி கதார் என்ற ஹிந்தி திரைப்படத்தில் அவர் ஒரு பாடலை பாட அந்த போதைக் குரல் இந்திய சினிமாவிற்குள்ளும் இவரை இழுத்து வந்தது. அதற்கு பின்பு P.L.A.Y, Supawoman போன்ற ஆல்பங்களை இவர் வெளியிட அனைத்தும் ஹிட் லிஸ்டில் இடம்பெற்றது. இன்றும் இவர் சில ஆல்பங்களையும் பாலிவுட் படங்களில் பல பாடல்களையும் பாடிவருகிறார். பார்ட்டி சாங் பெண்குரல் வேண்டுமா கூப்பிடு அவரை என்பதற்கேற்ப மிகப் பிரபலமாக இருக்கிறார். அதேபோல இவரைப்பற்றிய சர்ச்சைகளும் ஏகப் பிரபலமாக இருக்கிறது. ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவான கருத்து, பிக்பாஸ் 6, குரு கோவிந்தசிங்கை விமர்சித்தது, சாமியார் முதல்வரை Rapist என்றது மற்றும் டவுசர் இயக்கத்தின் தலைவரை வறுத்தெடுத்தது என சர்ச்சைகள் ஏராளம் இருக்கிறது. சமீபத்தில் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் இவர் தனது ஸ்டைலில் ராப் பாடலைப்போல திட்டி டிவிட்டரில் பக்கத்தில் வம்பிழுக்க வழக்கம் போல் இவரது கணக்கை முடக்கி டிவிட்டர் தனது கடமையை செய்திருக்கிறது. எது எப்படியிருந்தாலும் இவரது அந்த போதை குரல் தனி ரகம்தான். அவரைப்பற்றிய சிறு குறிப்புகளுடன் அடியேன் ரசிக்கும் ஹார்ட் கவுரின் பாடல்கள் இவை. பார்ட்டி சாங், ஹிப் ஹாப், ராப் வகை ஆகையால் கொஞ்சம் ஆல்கஹால் வாடையும் காமா சோமாவும் தூக்கலாக இருக்கும் எனவே 🔞.

பாடல்களைக் காண