☰ உள்ளே....

பாயும் ஒளி நீ எனக்கு...

பாரதியா? கண்ணம்மாவா? பாம்பே ஜெயஸ்ரீயா? மனதை வருடும் இசையா? இல்லை பாடல் முடிந்ததும் தொற்றிக்கொள்ளும் அந்த மெல்லிய சோகமா? இதில் எது மயக்கியது எனத் தெரியவில்லை, இந்த பாடலை திரும்பத்திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறேன். பாரதியாரின் வரிகளில் பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் கண்ணம்மா ஆல்பத்தில் இடம்பெற்ற பாடல் இது. பாடலின் மீது காதல்கொண்டு செவி வழியே கேட்டதை காட்சிகளாக மாற்ற நினைத்தேன். கண்ணம்மாவிற்கு உருவம் கொடுக்க முயற்சித்தேன். பாரதியின் கண்ணம்மா எப்படி இருப்பாள்? ஏதாவது உருவம் இருக்கிறதா? அவள் வெறும் காட்சிப்பிழையா? என யோசித்தபோது இளையராஜாவின் ஓவியங்கள் நினைவுக்கு வந்தது. உடனே பாடலுக்கு அவரது ஓவியங்களை பயன்படுத்திக் கொண்டேன். ஒரு சின்ன முயற்சி. பாரதிக்காக, கண்ணமாவிற்காக, ஜெயஸ்ரீக்காக, ஓவியர் இளையராஜாவிற்காக, நல்லதொரு பாடலை உங்களுக்கு அறிமுகப்படுத்துவற்காக..