உன் பெயர்...

ஃபை ஃபை ஃபை (Life of PHI).

இன்று கணக்கு பாடம் என்ன ரெடியா?. ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக் கொள்ளுங்கள், கூடவே அளவெடுக்கும் டேப்பை கைவசம் வைத்திருங்கள். பேனா பேப்பர் ஒகே  அளவெடுக்கும் டேப் எதற்கு? கடைசியில் சொல்கிறேன்.  

ஒரு முட்டை அதன் நடுவில் ஒரு கோடு கொண்ட Φ (φ) இந்த குறியீட்டை கணிதத்தில் சில சூத்திரங்கள் மற்றும் ஜியாமென்டிரிக்கலில் (வடிவியல்) பார்த்திருப்போம். பெரும்பாலான சிக்கலான கணித குறியீடுகள் அனைத்தும் கிரேக்க மொழியின் உயிரெழுத்தின் வடிவம் கொண்டிருக்கும். ஆல்பா, பீட்டா போல இந்த குறியீடும் அதே வகைதான் PHI. நாம் அடிக்கடி பயன்படுத்தும் π (22/7) கிடையாது குழப்பிக் கொள்ள வேண்டாம் இது வேறு, இதற்குப் பெயரும் PHI, ஃபை என உச்சரிப்பார்கள். கிரேக்கத்தில் புகழ்பெற்ற சிற்பியான "Phidias" என்பவரின் நினைவை போற்ற இந்த பெயரை வைத்தனர். இதன் மதிப்பு தோராயமாக 1.618 அதாவது 1.6180339887....என நீண்டுகொண்டே போகும். கணிதத்தில் மட்டுமல்லாமல் கலைத்துறை, அண்டவியல், இறையியல், கட்டடவியல் போன்றவற்றிலும் இந்த PHI-யின் பங்கு மிக முக்கியமானது. 1.618 என்ற இந்த எண்ணை "Golden Ratio " என்கிறார்கள்.

பார்ட்டி சாங்ஸ் (With "Hard Kaur")...


இந்திய பார்டிகளில் Honey Singh, Mika Singh பேன்ற ஆண்கள், ஹிப் ஹாப்பில் கலக்கிக் கொண்டிருக்க அவர்களுக்குச் சற்று சளைக்காமல் போட்டி போடக் கூடிய ஒரே பெண் பார்ட்டி சிங்கர் Taran Kaur Dhillon செல்லமாக "Hard Kaur". அனிருத்துடன் இணைந்து சென்னை சிட்டி கேங்ஸ்டார் பாடலை பாடினாரே அவரேதான். இந்தியாவில் பிறந்த இவரின் குழந்தைப் பருவம் சற்று கசப்பானதாக இருந்தாலும், இங்கிலாந்தில் தன் இளமைப் பருவத்தில் ஹிப் ஹாப் பாட கற்றுக்கொண்டார். ஏக் கிளாசி பாடல்தான் இவரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்ததது. இவரது தனித்தன்மையான கரகர கட்ட குரல் மற்ற ஹிப் ஹாப் பாடகர்களுடன் போட்டிபோட வைத்தது. P.L.A.Y, Supawoman போன்ற ஆல்பங்கள் ஹிட் கொடுக்க, சில பாலிவுட் படங்களில் தற்போது பாடிவருகிறார். பார்ட்டி சாங் பெண்குரல் வேண்டுமா கூப்பிடு அவரை என்பதற்கேற்ப அங்கு மிகப்பிரபலம். அதேபோல இவரைப்பற்றிய சர்ச்சைகளும் ஏகப் பிரபலம். இவரது கட்ட குரலுக்காக அடியேன் ரசிக்கும் பாடல்கள் இவை. பார்ட்டி சாங் என்பதால் கொஞ்சம் ஆல்கஹால் வாடை தூக்கலாக இருக்கும் மற்றபடி அடியேன் குடிப்பதில்லை நம்புங்கள்..

கனவு...


நல்லதோ கெட்டதோ நேற்றுஒரு கனவு கண்டேன் தெரியுமா? என சொல்லக் கேட்டிருப்போம் நாமும் கனவு கண்டிருப்போம், கனவு இல்லாத தூக்கம் என்பதே கிடையாது. கனவு என்றவுடன் நமக்கெல்லாம் அப்துல்கலாம் அய்யாதான் நினைவுக்கு வருவார். அவர்தான் நம் கனவுகளை தட்டியெழுப்பியவர். மனிதர்களைப் போல விலங்குகள் கூட கனவுகாணும் என கண்டுபிடித்துள்ளனர் டைகர் கனவில் ஜூலியோ ரோஸியோ வந்து டூயட் பாடலாம். அழுங்கு (Armadillo) என்ற விலங்குதான் அதிகமாக கனவு காணுமாம் அதன் கனவு என்னவாக இருக்கும்? வாருங்கள் கனவு உலகத்திற்குள் கொஞ்சம் பயணிக்கலாம்.

நினைவலை..

தூரிகை - 12.

தேர்தல் வாக்குறுதி ...வேண்டுதல்..
தூரிகை -11

தீம் மியூசிக்...


நீண்ட நாட்களுக்குப்பின் நண்பர் அமீர் அவர்களுக்கு போன் செய்தேன். போனை எடுத்தவுடன் எதைப்பற்றியும் பேசாமல் ஒரு நிமிடம் இதைக்கேளு என்றார். அவரிடத்திலிருந்து அரைகுறையாக ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருப்பது போல் இருந்தது ஒன்றுமே புரியவில்லையே என்றேன். நான் அடிக்கடி கேட்கும் தீம் மியூசிக், இதை கேட்கும் போதெல்லாம் உற்சாகமாகி விடுவேன் தற்போது கேட்டுக் கொண்டிருந்தேன், நீதான் பாடல்களைப்பற்றி எழுதிக் கொண்டிருக்கிறாயே அதனால்தான் உன்னையும் இதில் இழுத்துவிட்டேன் என்றார். நிஜம்தான் அந்த Mission Impossible படத்தின் தீம் மியூசிக்கில் உற்சாகத்திற்கான பூஸ்ட், காம்ப்ளான், ஹார்லிக்ஸ் கலந்திருக்கும். அதை கேட்கும்போது ஒருவித ஹீரோயிசம் பிறக்கும், நானும் பலமுறை கேட்டிருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப்பின் அவருடன் பேசியது சுவாரசியமாக இருந்தது. இன்று பிளாக்கரில் என்ன எழுதலாம் என்பதற்கு தீமாக தீம் மியூசிக்கே கிடைத்திருந்தது. 

Cockscomb flower -2

பிரச்சாரம்..சொத்து மதிப்பு...


தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த தேர்தலில் எக்கச்சக்க கட்சிகள் அதற்கு ஏகப்பட்ட முதல்வர் மற்றும் வேட்பாளர்கள் என அரசியல் செய்திகளைப் படித்தால் கண்ணைக்கட்டுகிறது. புதிதாக போட்டியிடுபவர்கள், அரசியலில் பழம் திண்று கொட்டை போட்டு மரம் வளர்த்தவர்கள் என எல்லா வேட்பாளர்களும் தங்கள் சொத்து மதிப்பை தாக்கல் செய்வது என்பது தேர்தலின் வரையறை. மற்ற தகுதிகள் ஒருபக்கம் ஓரமாக இருக்க இந்த சொத்து மதிப்பு மட்டுமே சர்ச்சைக்கு உள்ளாகும். எங்கிட்ட எதுவுமே இல்லை என சூடம் ஏற்றி, துண்டைபோட்டுத் தாண்டி மனு தாக்கல் செய்வார்கள். பிறகு ஊழல், கருப்பு பணம், சுவிஸ்பேங்க் என சிக்கிக்கொள்வார்கள். சமீபத்தில் கருப்பு பண விவகாரம் போல பனாமா என்னும் புதிய பூதம் கிளம்பியிருக்கிறது, அதைப்பற்றி விளக்கினால் வயிற்றெரிச்சலோடு சேர்ந்து மயக்கம் வரும். அரசியல் பற்றி கொஞ்சநாட்கள் வாயைத் திறக்காதே என அம்மா கண்டித்து அனுப்பினாள், மறந்தே போய்விட்டேன். விடயத்திற்கு வருவோம்.

திருப்தி ...வெயில்...

நிழலுக்கும் வேர்க்கிறது.

- (முடியல).

பூ..

The Jungle book..


Mickey Mouse, Donald Duck போன்ற கார்டூன் கதாபாத்திரங்கள் உலக அரங்கில் புகழ்பெற்ற காலத்தில் இந்தியர்களை அனிமேசன் உலகத்திற்குள் கைப்பிடித்து அழைத்துச் சென்றவன் சப்பை மூக்கு "மௌக்லி". 1993- 98 ஆண்டில் டவுசர் மாட்டிக்கொண்டு சுற்றித்திரிந்த சிறுவர்களில் மௌக்லியையும் "தி ஜங்கிள் புக் " சீரியலையும் தெரியாதவர்களே இருக்க முடியாது. ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12.00 -1.00 மணிக்கு தூர்தர்சனில் ஒளிபரப்பப்படும் இந்த அனிமேசன் சீரியலுக்காக காத்திருந்த நிமிடங்கள் அனைத்தும் நினைவுகளின் பொக்கிஷம்.

பாயும் ஒளி நீ எனக்கு...

பாரதியா? கண்ணம்மாவா? பாம்பே ஜெயஸ்ரீயா? மனதை வருடும் இசையா? இல்லை பாடல் முடிந்ததும் தொற்றிக்கொள்ளும் அந்த மெல்லிய சோகமா? இதில் எது மயக்கியது எனத் தெரியவில்லை, இந்த பாடலை திரும்பத்திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறேன். பாரதியாரின் வரிகளில் பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் கண்ணம்மா ஆல்பத்தில் இடம்பெற்ற பாடல் இது. பாடலின் மீது காதல்கொண்டு செவி வழியே கேட்டதை காட்சிகளாக மாற்ற நினைத்தேன். கண்ணம்மாவிற்கு உருவம் கொடுக்க முயற்சித்தேன். பாரதியின் கண்ணம்மா எப்படி இருப்பாள்? ஏதாவது உருவம் இருக்கிறதா? அவள் வெறும் காட்சிப்பிழையா? என யோசித்தபோது இளையராஜாவின் ஓவியங்கள் நினைவுக்கு வந்தது. உடனே பாடலுக்கு அவரது ஓவியங்களை பயன்படுத்திக் கொண்டேன். ஒரு சின்ன முயற்சி. பாரதிக்காக, கண்ணமாவிற்காக, ஜெயஸ்ரீக்காக, ஓவியர் இளையராஜாவிற்காக, நல்லதொரு பாடலை உங்களுக்கு அறிமுகப்படுத்துவற்காக..ச.ரி.க.ம.ப.த.நி.ச...இன்று உங்களுக்கு சங்கீதம் கற்றுக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.
....
"ஒருநிமிடம் இருங்கள் ஓடிவிடாதீர்கள் முழுதாக படியுங்கள்".

சங்கீதம் என்றவுடன் நமக்கெல்லாம் ச.ரி.க.ம.ப.த.நி.ச என்பதுதான் நினைவுக்கு வரும். அது என்ன? ச.ரி.க.ம.ப.த.நி.ச.

90 - 99 ....


ஆம்ஸ் காட்டாத சல்மான்கான், அடக்கி வாசிக்கும் ஷாருக்கான், அழகு அமீர்கான் என புதுவரவாக கான்கள் கலக்க. மாதுரி தீட்ஷித், ஜூகி ஜாவ்லா, கஜோல் என சீனியர் தேவதைகள் பட்டாளமும், பிரீத்தி ஜிந்தா, கரினா கபூர், கரிஷ்மா போன்ற மினி தேவதைகளும் பலரது கனவில் வந்து இம்சை கொடுக்க. நாலு ஹீரோயின், இரண்டு ஹீரோ, ஹீரோவிற்கு கேன்சர், ஹீரோயினுக்கு பிரைன்டியூமர் பிரிந்து போகிற காதல், நினைவுகள், குடும்பம், பந்தம், பாசம் என கதையம்சம் கொண்ட பல ஹிந்தி திரைப்படங்கள் 90-99 களில் வெளிவந்து சக்கைபோடு போட்டன. இந்திய சினிமாவிற்கு 90 என்பது பொற்காலமாகவே இருந்தது. நல்ல ரசனைமிக்க இந்த படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் படத்தின் பாடல்கள். Raam Lakshman, Nadeem Sharvan, Jatin Lalit போன்ற இசையமைப்பாளர்களும், Kumar sanu, Udit Narayan, Alka Yagnik, Anuradha Paudwal போன்ற பாடகர்களும் இந்த திரைப்படங்களை சாதாரண ரசிகனிடம் கொண்டு சேர்த்தனர். கலர்புல்லான இந்திய சினிமாவை உலக அளவிற்கு எடுத்துச் சென்ற 90-99 காலகட்டத்தில் வெளிவந்த சில பாடல்கள் இவை அடியேனையும் கவர்ந்தது. 

Angry Bird..

சிறுதுளி பெருவெள்ளம் (சென்னை அனுபவம்-9).


வராண்டாவில் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். மஞ்சள் வெளிச்சத்தில் மழைநீர் தேங்கியிருக்கும் மைதானத்தில் சில சிறுவர்கள் கால்பந்தை உதைத்துக் கொண்டிருந்தனர், அதனுடன் என் பால்யகால நினைவுகள் உருண்டோடிக் கொண்டிருந்தது. பள்ளியின் முதல்வர் தோளைத் தட்டி, Sorry உங்களை காத்திருக்க வைத்துவிட்டேன் என்றார். மீண்டும் அதே வராண்டாவில் கிழக்கு நோக்கி பேசிக்கொண்டே நடந்தோம். இந்த வெள்ளத்தால் உங்கள் பள்ளிக்கூடம் பாதிக்கப்பட்டதா எனக் கேட்டேன். ஆமாம் என தலையாட்டிவிட்டு நீங்கள் முன்பு சொன்னது உண்மைதான் தேவ் "நீரின்றி அமையாது இந்த உலகு" என்றார். அய்யோ! இதை நான் சொல்லவில்லை தாத்தன் வள்ளுவன் சொன்னது என்று கூறினேன், சிரித்துக் கொண்டார். இந்த வெள்ளம் எங்களுக்கு நிறைய பாடங்களை கற்பித்துச் சென்றது என்றார். நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும், மீண்டும் ஒருமுறை எங்களுக்காக நீர்மேலாண்மையைப் பற்றி தெளிவாக விளக்க வேண்டும். இந்தமுறை அனைத்து வகுப்புகளில் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் முன்பு பெரிய கருத்தரங்கமாக நடத்தவேண்டும் என நினைக்கிறேன், அது அனைவருக்கும் விழிப்புணர்வாக இருக்கும் என நம்புகிறேன். அதற்கு உங்கள் சம்மதம் வேண்டும் அதற்காகத்தான் உங்களை தற்போது அழைத்தேன் என்றார்.

Hachi: A Dog's Tale..


எங்கள் வீட்டின் செல்லப்பிராணியான பப்பி குட்டியாக இருந்த சமயம், ஒருநாள் அவசரமாக வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தேன். வழக்கமாக காலைச்சுற்றி விளையாடும் பப்பி அன்றும் அவ்வாறு விளையாட நினைத்து சுற்றி வந்தது. வெளியே செல்லும் அவசரத்தில், கோபத்தில் அதை காலால் தள்ளிவிட்டு கிளம்பினேன். மதியவேளையில் அம்மாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது நீயெல்லாம் ஒரு மனுசனா? என எடுத்தவுடன் பிடிபிடித்துவிட்டாள். நீ உதைத்ததிலிருந்து பப்பி சாப்பிடாமல் விளையாடாமல் சுணங்கியே கிடக்கிறது என திட்டித் தீர்த்துவிட்டாள். மாலை வீட்டிற்குத் திரும்பினேன் எப்போதும் வாசலுக்கு ஓடிவந்து வரவேற்கும் பப்பி அன்று வரவில்லை ஒரு மூளையில் சுருண்டு படுத்திருந்தது. சற்று அருகில் சென்று அமர்ந்து தலையை தடவிக் கொடுத்து என்னை மன்னித்துவிடு என்றேன். காதையும் வாலையும் லேசாக ஆட்டியது.அம்மா தட்டில் சோரு பிசைந்து கொண்டுவந்து கொடுத்து அதை சாப்பிட சொல் என்றாள். அதனிடம் நீட்டி வருடிக் கொடுத்தபின் பசித்த குழந்தைபோல சாப்பிடத் தொடங்கியது. நான் மிருகமாகவும் ஒரு நாய் குழந்தையாகவும் மாறிய தருணம் அது.

ஆடு, மாடு, கோழி, குருவி, நாய் என வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்க்கிறோம் அவை நம்மிடம் எதிர்பார்பது தலைகோதும் சின்ன ஸ்பரிசமும் நமது நெருக்கமும் மட்டுமே. நமது உலகம் மட்டுமே பெரியதென நினைத்து அவைகளுக்கான உலகை மறந்துவிடுகிறோம். அவற்றின் உலகம் மிகவும் சிறியது அது நமது காலடி சுற்றிதான் பறந்திருக்கும். அதுபோல தன் எஜமானரே உலகம் என நம்பி, பிரிந்து சென்ற அவரின் வரவிற்காக 9 வருடங்களாக ஓரிடத்தில் காத்திருந்த நாயின் உண்மைக் கதைதான் "Hachi A Dog's Tale". 

Big Pearl (வெங்காயம்) .சிலரது தட்டில் வெங்காயம் விழுந்தால் அய்யோ! வெங்காயமா? எனக்கு அறவே பிடிக்காது என அளருவார்கள். சிலர் வெங்காயம் நறுக்கவே கதறுவார்கள், கண்கலங்குவார்கள். இதற்கெல்லாம் புரோப்பின் சல்பியுனிக் அமிலம் என்ற வேதிப்பொருள்தான் காரணம். வெங்காயத்தின் உள்ளே ஒளிந்திருக்கும் ஆலினோஸ் (Allinases) என்ற நொதி, நறுக்கும் போது வெளித்தோலில் இருக்கும் புரோப்பினி சிஸ்டைன் (s/n- propanethial-s-oxide என்ற பொருள் மீது வினைபுரிந்து, புரோப்பின் சல்பினிக் அமிலமாக மாறுகிறது. எரிச்சல் கொடுக்கும் தன்மை கொண்ட இந்த அமிலம் காற்றில் ஆவியாக மாறி கண்களில் படுவதினால் கண்ணீர் வருகிறது. மேலும் சிலருக்கு வெங்காயம் பிடிக்காமல் போக இந்த அமிலத்தின் குமட்டும் சுவையே காரணமாகிறது. ஆனால் நாம் வேண்டாம் என வெறுத்து ஒதுக்குபவைகளில்தான் உன்னதம் ஒளிந்திருக்கிறது.


பயணத்தின் சுவை.


மண்வாசனை காற்றுபோல், திடீர் மழை போல், வானவில் பார்க்கும் நிமிடம் போல், எப்போதாவது தென்படும் தாவணி பெண்கள் போல், பூட்டியிருக்கும் உறவுகளின் நினைவுகளைப்போல் சில பாடல்களைக் கேட்கும்போது தோன்றும். ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் இருக்காது, ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு இசை கிடையாது ஆனாலும் அந்த பாடல்களை கேட்கும்போது ஏதோ ஒரு ஸ்பரிசம் மெல்ல தழுவிக் கொள்ளும். வார்த்தைகள், காட்சியமைப்பு, இசைக் கருவிகளின் ஒழுங்கமைப்பு என மனதை தாலாட்டிச் செல்லும். அத்தகைய பாடல்களை தனியாக சேமித்து வைத்திருக்கிறேன். சில தூர பயணங்களுக்கு கூடவே தூக்கிச் செல்வேன். வாழ்கையின் சில சந்தோச நிகழ்வுகளைவும், இதுபோன்ற பாடல்களையும் அசைபோட்டுக் கொண்டே பயணிப்பது தனி சுகம்தான்.
"பயணத்தின் சுவையே நினைவுகளை அசைபோடுவதுதானே ". 
அப்படி கேட்கும் பாடல்களில் சில..

Fire of work.

விருதுகள்..


சமீபத்தில் மூன்று விருதுகள் சர்ச்சைக்குள்ளாயின. பேஸ்புக், டிவிட்டர், போன்ற சோஷியல் மீடியாக்களுக்கு நொறுக்குத் தீனியாகின.

முதலில் பத்மவிபூசன் விருது, அந்த பெரிய நடிகருக்கு ஏன்? கொடுக்க வேண்டும் நாட்டில் சாதனை புரிந்தவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டதா? எழுபதைத் தாண்டி டூயட் பாடுபவருக்கு எதற்கு பத்மவிபூசன்? - என சர்ச்சை கிளம்பியது.

இரண்டாவதாக பிரபல டிவி நிகழ்ச்சியில் சிறந்த பாடகராக தேர்வு செய்யப்பட்டவரைப் பற்றிய பூதம் வெளிவந்தது. சினிமாவில் நன்றாக பாடுபவரை வைத்து ரியாலிட்டி ஷோவை நடத்தி அவருக்கு முதல்பரிசு வழங்கி, பல வாரங்களாக வாயைப்பிளந்து பார்த்த நமக்கு பெரிய....பலாப்பழம் கொடுத்தார்கள்.

மூன்றாவது தற்போது அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருது. சென்ற வருடம் எக்கச்சக்க திரைப்படங்கள் வெளிவர திறமையான நாயகர்கள் உருவாக, அந்த வளர்ந்த நடிகரை சிறந்த நடிகராக அறிவித்திருக்கின்றனர். பிர-பலம் பொருந்திய பிரபலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என கிழித்துவிட்டனர்.

விருதுகள் என்பது அங்கீகாரமா? அடையாளமா? இல்லை வெறும் விளம்பரமா? இந்த சமயத்தில் சுவையான தகவல் ஒன்று கிடைத்தது.