☰ உள்ளே....

மஞ்சள் வெயில், மதியப் பொழுது..


ஃபுல்கட்டு கட்டிவிட்டு கண்ணை சொருகும் ஏதுமற்ற ஆசுவாசமான மதியப் பொழுதுகள் சிலசமயம் கிடைக்கும். சற்று தூங்கலாம் என்றால் இரவு பயமுறுத்தும். அடியேன் கும்பகர்ணன் வழித்தோன்றல் படுத்தால் எழுப்புவது சிரமம் முப்படைகளும் வேண்டும். பகலில் தூங்கினால் பிறகு இரவு விழித்தபடி விட்டத்தை பார்க்க வேண்டியதாக இருக்கும். எதாவது புத்தகம் படிக்கலாம் என்றால் அதுவும் தூக்கத்தையே தழுவும். சரி எழுதலாம் என நினைத்தால் வயிறு நிறைந்திருந்தால் வார்த்தைகளுக்கு செரிமானம் ஆகாது. என்னதான் செய்வது வேறு எதுவும் வழியில்லை இந்த தருணத்திற்கு ராஜாவே சரணாகதி. எல்லா தருணங்களுக்குத் தக்கவாறு தாலாட்ட ராஜாவால் மட்டுமே முடியும். 
மஞ்சள் வெளிச்சத்தில், ஜன்னலை வெறித்தபடி, ராஜாவின் ரம்மியத்தில் தொலைந்து போகும் சில பாடல்கள் இவை.