☰ உள்ளே....

புதுசு..


பழைய பாடல்களின் நினைவில் மூழ்கினாலும், புதிய பாடல்களுக்கான தேடல் எப்போதும் மிதந்து கொண்டே இருக்கும். இதற்காக ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் என மேய்வேன். சில புதிய பாடல்களை கேட்கும்போது அட! இதை எங்கேயோ கேட்டிருக்கோமே எனத் தோன்றும். பெரிய கொடுமை என்னவென்றால்  அந்த பாடல்கள்தான் ஹிட் ஆகும். டிவி ரேடியோ என எதைத் தொறந்தாலும் காற்றில் வருவதால் சில பாடல்கள் சலிப்புத் தட்டிவிடுகிறது. சில பாடல்கள் ஒரே மாதிரியாக இருக்கிறது. அதையும் தாண்டி சில புதிய இசை, புதிய குரல், எதார்த்த வரிகள் என சில பாடல்கள் வெளிவந்து மனதை கொள்ளையடிக்கின்றன. அப்படி மனதை கொள்ளையடித்த சில புதிய பாடல்கள் இவை. 
தினமும் மூண்று வேளை சாப்பிட மறந்தாலும் ஆறு வேளையாவது இந்த பாடல்களை கேட்டுவிடுகிறேன்.. 
.............


ஜிப்ரன், தாஜ்நூர் இவர்களுக்குப் பிறகு  சந்தோஷ் நாராயண் கவணிக்க வைக்கிறார். இவரின் சமீபத்திய படங்களின் பாடல்கள் செம ஹிட். குறிப்பாக இந்த இறுதிச்சுற்று. 

" நான் என்னை எழுதி நீட்ட,
அதில் வெட்கம் மட்டும் கிழிச்சு போட்ட " 

அசால்டான வரிகள், சண்டைக்காரிக்கு ஏற்ற தீ -யின் குரல், சட்டென முடிந்துவிடும் வித்தியாசமான இசை என பழைய ஆங்கில பாடல்களின் ஜெராக்ஸ் காப்பி பாடல்களை ஓவர்டேக் செய்கிறது இந்த பாடல். 


அதே படம், அதே சண்டைக்காரி, அதே குரல், அதே அசால்டான வரிகள். 
"என் சிரிப்பு உடைஞ்சி சிதறிக் கிடக்கு எப்ப வருவ எடுத்துக்க" 
யார் அங்கே? எங்கே? அந்த அவார்டு. நயன்தாரா மாதிரி பொண்னு கிடைச்சா எல்லோரும் ரவுடிதான்.ஸ்ரேயா இருமினாலே அழகுதான்.


நீண்ட நாட்களுக்குப் பின் ரஹ்மானிடம் வந்த ஹிந்தி மெலடி, படம் பிளாப் என்றாலும் பாடல்கள் பிலிம்பேர் அவார்டுவரை சென்றது.


The Truth about Love என்ற ஆல்பத்தில் வெளிவந்த பாடல் Pink மற்றும் Nate Ruess எழுதியிருந்தனர். புகழ்பெற்ற பாடகர் Jason Chen மற்றும் Megan Nicole இவர்களின் குரலில் மெலடியாக ஒலிக்கிறது.