☰ உள்ளே....

Lift (Elevator) ..


படிகளில் நடந்து போனால் 2 நிமிடம் ஆனால் லிப்டிற்காக 20 நிமிடம் காத்திருப்போம்.  இன்று லிப்ட் (Elevator) இல்லாத அடுக்குமாடி கிடையாது. படிக்கட்டுகளில் நடந்து பழகுங்கள் உடலுக்கு நல்லது என மருத்துவர்கள் அறிவுருத்துகின்றனர். இருந்தும் ஒருபக்கம் நமது கௌரவம், மறுபக்கம் பாவங்களின் மூட்டையான நமது தொப்பை, இரண்டையும் தூக்கிச் வர லிப்ட்டையே பயண்படுத்துகிறோம். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோய்வாய்ப் பட்டவர்களுக்கு இந்த லிப்ட் ஒரு வரப்பிரசாதமே அதை மறுப்பதற்கில்லை. ஆனால் மற்றவர்கள் கொஞ்சம் கொளுப்பு (Cholesterol ) குறைய நடக்கலாம்.

ஆர்கிமிடிஸ் தத்துவம்தான் இந்த லிப்டின் அடிப்படை, பண்டைய காலங்களில் பொருட்களை உயரே தூக்க லிப்ட்டை உருவாக்கினர். பல கண்டுபிடிப்பாளர்கள் அதை மாற்றம் செய்தனர். 1852 ஆம் ஆண்டு "Elisha Graves Otis" என்பவர்தான் மனிதர்களை தூக்கிச் செல்லும் இன்றைய லிப்டை (Elevator) வடிவமைத்தார். 1857 ஆம் ஆண்டு நியுயார்க்கில் உள்ள Crystal Palace கட்டிடத்தில் முதன் முதலில் பொருத்தி சோதனை செய்தார். இதுவே மனிதனை சுமந்து சென்ற முதல் லிப்ட். அதற்குப்பிறகு Otis புகழ் பரவியது தனியாக Otis Elevator Company என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனமே இன்று உலகின் நம்பர் ஒன் லிப்ட் தயாரிக்கும் நிறுவனமாகும். Eiffel Tower, Empire state, World Trade center (பின்லேடன்), CN Tower போன்ற புகழ்பெற்ற கட்டிடங்களில் இவர்கள்தான் லிப்ட் மெசின்களை பொருத்தியுள்ளனர். இன்று உலகமெங்கும் பல கிளைகளில் 64000 தொழிலாளர்களைக் கொண்டு 163 வருடங்களாக கொடிகட்டிப் பறக்கிறது இந்த நிறுவனம். வலிக்காமல் மேலும் கீழும் சென்றுவரும் லிப்டை கண்டுபிடித்த Otis -ன் வாழ்க்கை அதுபோல் சுலபமாக இருந்ததில்லை, சாதாரண குடும்பத்தில் பிறந்து, மரம் அறுவை செய்யும் வேலை செய்து, தன் மனைவியை இழந்து, எட்டு வயது மற்றும் ஐந்து வயது மகன்களை ஆளாக்கி, கஷ்டபட்டு காலம் தள்ளி , வெகு குறுகிய காலத்தில் பேரும் புகழும் அடைந்து, அதே வேகத்தில் உலகைவிட்டும் சென்றார். அவர் கண்டுபிடித்த லிப்ட் மட்டுமல்லாமல் அவரது வாழ்க்கையும் நமக்கு உதவும் மேலே கீழே சென்றுவர.