☰ உள்ளே....

Flush out Toilet .."John Haringten" என்பவருக்கு கழிவறையில் உட்கார்ந்த கணப்பொழுதில் மகா யோசனை தோன்றியது. தினமும் காலையில் ஒரு பக்கெட் நிறைய தண்ணியையும் சொம்பையும் தூக்கிக்கிட்டு இங்கு வருகிறோம். போகும் போது எல்லாவற்றையும் காலிசெய்துவிட்டு போகிறோம். கார்பரேசன் தண்ணீர் சில நாட்கள் சரியாக வருவதில்லை. நீரை சேமியுங்கள் என ஒருபக்கம் சிலர் தவளையாக கத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த பக்கெட்டை நாலாவது மாடிக்கு தினமும் சுமக்க கடினமாக இருக்கிறது. பழைய டாய்லெட்டில் வசதியாக காலை நீட்டி, மடக்கி உட்காரவும் முடிவதில்லை. காலைக்கடன் பெருங்கடனாக இருக்கிறது. இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என நினைத்தார்.

யோசனை தோன்றியவுடன் வசதியாக உட்கார்ந்து பேப்பர் படித்தவாறு கடனை முடித்துவிட்டு, எளிதில் தானாகவே சுத்தம் செய்து கொள்ளும் பிளஷ் அவுட் டாய்லெட் (Flush out Toilet) இரண்டை வடிவமைத்தார். அதுதான் தற்போது நாம் பயன்படுத்தும் இன்றைய பிளஷ் அவுட் டாய்லெட்டின் முன்னோடி. அவ்வாறு அவர் உருவாக்கிய இரண்டு டாய்லெட்டில் ஒன்றை அவருக்காக பயன்படுத்திக்கொண்டார் மற்றொன்றை அழகாக பேக்கிங் செய்து, சின்னதாக ஒருகவிதை எழுதி, என்றும் அன்புடன் என கையெழுத்துப் போட்டு எலிசபெத் இராணிக்கு பரிசாக வழங்கினார். அடப்பாவி! இதெல்லாம் கிப்டா கொடுப்பாங்களா? எனக்கேட்டால், அவர் கொடுத்த கிப்ட் இன்று பலருக்கும் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. நாமெல்லாம் John Haringten - க்கு (காலைக்) கடன் பட்டிருக்கிறோம்.