☰ உள்ளே....

CBS Evening News..


தேர்தல் ஆரம்பித்து விட்டது இனி வீட்டில் உள்ள பெருசுகளின் இம்சை தாங்க முடியாது. டிவியை ஆன் செய்தால் நீயூஸ் சேனல் வை என மிரட்டுவார்கள். முன்பெல்லாம் செய்திகளைப் பார்க்க இரவு எட்டுமணிவரை காத்திருக்க வேண்டும். வரதராஜனும், சோபனா ரவியும் தூர்தர்சனில் வருவார்கள். அவர்கள் சொல்லுவதுதான் அன்றைய உலக நிகழ்வு. ஆனால் தற்போது அப்படியில்லை செய்திகளுக்கு என்று 24 சேனல்கள், 24 மணிநேரமும் ஓடிக் கொண்டிருக்கிறது. கொட்டாம்பட்டியில் ஓடிப்போன கள்ளக்காதலர்களைப் பற்றி கோயம்பேட்டில் உள்ளவர்களுக்கு அடுத்த ஐந்து நிமிடத்தில் தெரிந்துவிடுகிறது. அழகான பெண்கள் எதையும் மூடி மறைக்காமல் செய்திகளை இரவு பகலாக வாசித்துக் கொண்டே இருக்கின்றனர். ஆளும் கட்சி, எதிர்க் கட்சி, அந்த கட்சி, இந்த கட்சி, என, ஆளுக்கொரு சேனல் வைத்திருக்கிறார்கள். முக்கியமான ஒரு செய்தியை, அகிரா குரோசவா படம் பார்பதுபோல் ஏழு எட்டு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. சில சமயம் எது? உண்மை என்றே தெரியவில்லை. அது போகட்டும் நமக்கேன் வம்பு, விசயத்திற்கு வருவோம்.

அமேரிக்க டிவி சேனலான CBS Television Network - ன் "CBS Evening News" என்ற நிகழ்ச்சிதான் உலகின் மிகவும் பழமையான டிவி செய்தி நிகழ்ச்சி. 1948 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை அதே நேரத்தில் மாலை 6.30 மணிக்கு தவறாமல் செய்திகளை ஒளிபரப்புகின்றனர். இதில் சிறப்பு என்னவென்றால் இந்த 68 வருடத்தில் மொத்தம் ஆறு செய்தி வாசிப்பாளர்கள் மட்டுமே செய்திகளை வாசித்திருக்கின்றனர்.

1948 - 1962 Douglas Edwards
1962 - 1981 Walter Crokite.
1981 - 1993 Dan Rather.
1993 - 1995 Dan Rather & Connie Chang.
1995 - 2005 Dan Rather.
2005 - 2006 Bob Schieffer.
2006 - 2011 Katie Couric.
2011 - still.  Scott Pelley.

நம்ம ஊரு மாதிரி, கணவன் வெட்டிக்கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது, பிரபல சாமியார் சல்லாபம், யார் யாருடன் ஓடிப் போகிறார்கள் என்றெல்லாம் அங்கு செய்தி இருக்காது. அவங்க ஸ்டைலில் எங்க என்ன? இருக்கிறது, எண்ணெய் இருக்கிறது என்ற செய்திகளை 68 வருடங்களாக போரடிக்காமல் தந்து கொண்டிருக்கிறார்கள்.