☰ உள்ளே....

வைரம்..


நூறு வருடங்களுக்கு முன்பு Stepanazin என்ற 15 வயது சிறுவன் ஆப்பிரிக்காவில் உள்ள ஆராஞ்சு ஆற்றங்கரையில் (Orange River) விளையாடிக் கொண்டிருந்தான். கரையில் இருக்கும் ஒவ்வொரு கல்லாக எடுத்து ஆற்றில் எறிந்து அது தவளைபோல் தண்ணீரில் தாவிச் செல்லும் அழகில் மூழ்கியிருந்தான். அப்போது அவனது கைக்கு பளபளக்கும் சிறிய கல் ஒன்று கிடைத்தது. ஜொலிக்கும் அந்தக் கல்லை ஆற்றில் வீசாமல் தன் பக்கத்து வீட்டுக்காரனிடம் கொண்டுவந்து கொடுத்தான். அந்த பக்கத்து வீட்டுக்காரர் அந்த அழகிய கல்லை விற்றால் இன்றிரவு ஒரு கட்டிங் சரக்கு கிடைக்கும் என நினைத்து ஊரில் இருக்கும் நகை வியாபாரியிடம் கொண்டு சென்றான். நகை வியாபாரி தன் பங்கிற்கு இன்று ஒரு புல்லே கிடைக்கும் என நினைத்து நகரத்தில் இருக்கும் பெரிய வியாபாரியிடம் அந்த கல்லைக் கொடுத்தான். அந்த கல் ஜொலிக்கும் "வைரம்". இந்த நிகழ்வுதான் ஆப்பிரிக்காவில் வைரம் கொட்டிக் கிடக்கிறது என்பதற்கு அடித்தளமான அமைந்தது. அதற்குப் பின் உலக பணக்கார நாடுகள் பல பல் இளித்துக்கொண்டு ஆப்பிரிக்காவை சல்லடை போட்டு சலிக்க ஆரம்பித்துவிட்டன. இன்று ஆப்பிரிக்க நாடுகள்தான் வைரம் வெட்டி எடுப்பதில் முன்னோடியாக திகழ்கின்றன.


இன்றைய ஆப்பிரிக்காவின் பஞ்சம், படுகொலை, தீவிரவாதம், அரசியல் எல்லாவற்றிற்கும் மூலகாரணம் இந்த வைரம். அங்குள்ள மக்களில் இரத்தத்தால் பெறப்படும் வைரங்களை பிளட் டைமண்ட் (Blood Diamond)  என்கிறார்கள். இதைவைத்து ஆஸ்கார் நாயகன் டிகாப்ரியோ நடிக்க திரைப்படமாக எடுத்தனர். Stepanazin மட்டும் அந்த கல்லை ஆற்றில் எறிந்திருந்தால் ஆப்பிரிக்காவிற்குள் சோகங்கள் நிறைந்திருக்காது. எட்டா கனியாக இருந்த வைரமும் பாப்புலர் ஆகியிருந்திருக்காது. அடுத்தமாதம் எனக்கு பிறந்தநாள் வருது வைர மூக்குத்தி வாங்கித்தாங்க என மனைவியும்  நச்சரித்திருக்கமாட்டாள்.