B/W memories with safe locked.

ஆழித்தேர்...


அட! நீங்க அந்த ஊரா? உங்கள் ஊரில் தேர் மிகவும் பிரபலமாச்சே "திருவாரூர் தேரழகு "என யாராவது சொல்லும் போது பெருமையாக இருக்கும், அதேசமயம் கழிவிரக்கம் தொற்றிக் கொள்ளும். உலகின் மிகப் பெரிய தேரான "ஆழித்தேர் " இங்குதான் இருக்கிறது. தேர் இழுக்கும் திருவிழாவை எங்கள் ஊரைப்போல் சிறப்பாக கொண்டாடுபவர் எவரும் இல்லை. பங்குனி மாதம் தொடங்கி 55 நாட்கள் நடைபெரும் பங்குனி உத்திர விழாவின் 27 ஆம்நாள் நிகழ்ச்சியான இந்த தேர் பவனி குறிப்பிட்ட நட்சத்திரத்தில், குறிப்பிட்ட  நாளில் நடப்பது ஐதீகம். ஆனால் தற்போதைய நிலைமை வேறு, அரசியலும், மதமும், நவீனமும் தேருக்கான புகழை சிலவருடங்களாக இழுக்காமல் நிறுத்தியே வைத்திருக்கின்றன. சென்ற வருடம் இரண்டு கோடிக்குமேல் செலவு செய்து தேரை புதுப்பித்து வெள்ளோட்டம் விட்டனர், ஆனால் இன்றுவரை திருவிழா பற்றிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. தற்போது பங்குனியும் நெருங்கிவிட்டது தேர்தலும் வருகிறது இந்த வருடமாவது தேர் வீதிக்கு வருமா? என்றால் அந்த ஆருரானுக்கே வெளிச்சம். பழமைவாய்ந்த  உலகப் புகழ்பெற்ற ஆழித்தேர் திருவிழாவில் இன்று மிஞ்சியிருப்பது பால்யகால நினைவுகள் மட்டுமே.

அந்த குண்டு பையன்..


அந்த குண்டு பையனுக்கு பிறந்ததிலிருந்து இசை மீது அவ்வளவு ஆர்வம். பாகிஸ்தானி இந்தியரான அவனுடைய அப்பாவிற்கு வசதிவாய்ப்புகள் ஒன்றும் குறைவில்லை லண்டனில் வசதியாக வாழ்ந்து வந்தனர். பத்துவதில் R.D பர்மனின் இசைநிகழ்ச்சியில் அந்த பையன் தன் இசைத் திறமையை காட்ட அதில் கலந்து கொண்ட பாடகி ஆஷா போன்ஸ்லேவிற்கு இவன் ஒருநாள் பெரிய ஆளாக வருவான் என பொறிதட்டியது. அதற்குப் பிறகு பையனுக்கு சுக்கிரன் உச்சத்தில். பியானோ, கீ போர்டு, கிட்டார், அக்கார்டின், சாக்ஸபோன், வயலின், டிரம்ஸ், தபேலா, ஹார்மோணியம், சித்தார், சந்தூர் போன்ற 35 க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை வாசிக்க பழகினான். பாடல்களைப் பாட சங்கீதமும் முறையாக கற்றுக் கொண்டான். ஜலதோசம் பிடித்த மூண்றாம் நாள் குரல்போல அவனது குரல் தனித்திருந்தது, அழகாய் இருந்தது, அதுவே அடையாளமாக மாறியது. 

மஞ்சள் வெயில், மதியப் பொழுது..


ஃபுல்கட்டு கட்டிவிட்டு கண்ணை சொருகும் ஏதுமற்ற ஆசுவாசமான மதியப் பொழுதுகள் சிலசமயம் கிடைக்கும். சற்று தூங்கலாம் என்றால் இரவு பயமுறுத்தும். அடியேன் கும்பகர்ணன் வழித்தோன்றல் படுத்தால் எழுப்புவது சிரமம் முப்படைகளும் வேண்டும். பகலில் தூங்கினால் பிறகு இரவு விழித்தபடி விட்டத்தை பார்க்க வேண்டியதாக இருக்கும். எதாவது புத்தகம் படிக்கலாம் என்றால் அதுவும் தூக்கத்தையே தழுவும். சரி எழுதலாம் என நினைத்தால் வயிறு நிறைந்திருந்தால் வார்த்தைகளுக்கு செரிமானம் ஆகாது. என்னதான் செய்வது வேறு எதுவும் வழியில்லை இந்த தருணத்திற்கு ராஜாவே சரணாகதி. எல்லா தருணங்களுக்குத் தக்கவாறு தாலாட்ட ராஜாவால் மட்டுமே முடியும். 
மஞ்சள் வெளிச்சத்தில், ஜன்னலை வெறித்தபடி, ராஜாவின் ரம்மியத்தில் தொலைந்து போகும் சில பாடல்கள் இவை. 

Lift (Elevator) ..



படிகளில் நடந்து போனால் 2 நிமிடம் ஆனால் லிப்டிற்காக 20 நிமிடம் காத்திருப்போம்.  இன்று லிப்ட் (Elevator) இல்லாத அடுக்குமாடி கிடையாது. படிக்கட்டுகளில் நடந்து பழகுங்கள் உடலுக்கு நல்லது என மருத்துவர்கள் அறிவுருத்துகின்றனர். இருந்தும் ஒருபக்கம் நமது கௌரவம், மறுபக்கம் பாவங்களின் மூட்டையான நமது தொப்பை, இரண்டையும் தூக்கிச் வர லிப்ட்டையே பயண்படுத்துகிறோம். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோய்வாய்ப் பட்டவர்களுக்கு இந்த லிப்ட் ஒரு வரப்பிரசாதமே அதை மறுப்பதற்கில்லை. ஆனால் மற்றவர்கள் கொஞ்சம் கொளுப்பு (Cholesterol ) குறைய நடக்கலாம்.

கஷ்டப்"பட்டு".



2007 ஆம் ஆண்டு சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார் தங்களுடைய காஞ்சிபுரம் பட்டு நெசவாலையில் 30 பணியாளர்களைக் கொண்டு, 4780 மணிநேரம் வேலை செய்து, 7 மாதத்தில், 8 கிலோ எடையுள்ள பட்டுப்புடவையை தயாரித்தனர். எதற்கு என்கிரீர்களா? கணவன்மார்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ளத்தான். அதில் அப்படி என்ன விசேஷம்.

CBS Evening News..


தேர்தல் ஆரம்பித்து விட்டது இனி வீட்டில் உள்ள பெருசுகளின் இம்சை தாங்க முடியாது. டிவியை ஆன் செய்தால் நீயூஸ் சேனல் வை என மிரட்டுவார்கள். முன்பெல்லாம் செய்திகளைப் பார்க்க இரவு எட்டுமணிவரை காத்திருக்க வேண்டும். வரதராஜனும், சோபனா ரவியும் தூர்தர்சனில் வருவார்கள். அவர்கள் சொல்லுவதுதான் அன்றைய உலக நிகழ்வு. ஆனால் தற்போது அப்படியில்லை செய்திகளுக்கு என்று 24 சேனல்கள், 24 மணிநேரமும் ஓடிக் கொண்டிருக்கிறது. கொட்டாம்பட்டியில் ஓடிப்போன கள்ளக்காதலர்களைப் பற்றி கோயம்பேட்டில் உள்ளவர்களுக்கு அடுத்த ஐந்து நிமிடத்தில் தெரிந்துவிடுகிறது. அழகான பெண்கள் எதையும் மூடி மறைக்காமல் செய்திகளை இரவு பகலாக வாசித்துக் கொண்டே இருக்கின்றனர். ஆளும் கட்சி, எதிர்க் கட்சி, அந்த கட்சி, இந்த கட்சி, என, ஆளுக்கொரு சேனல் வைத்திருக்கிறார்கள். முக்கியமான ஒரு செய்தியை, அகிரா குரோசவா படம் பார்பதுபோல் ஏழு எட்டு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. சில சமயம் எது? உண்மை என்றே தெரியவில்லை. அது போகட்டும் நமக்கேன் வம்பு, விசயத்திற்கு வருவோம்.

புதுசு..


பழைய பாடல்களின் நினைவில் மூழ்கினாலும், புதிய பாடல்களுக்கான தேடல் எப்போதும் மிதந்து கொண்டே இருக்கும். இதற்காக ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் என மேய்வேன். சில புதிய பாடல்களை கேட்கும்போது அட! இதை எங்கேயோ கேட்டிருக்கோமே எனத் தோன்றும். பெரிய கொடுமை என்னவென்றால்  அந்த பாடல்கள்தான் ஹிட் ஆகும். டிவி ரேடியோ என எதைத் தொறந்தாலும் காற்றில் வருவதால் சில பாடல்கள் சலிப்புத் தட்டிவிடுகிறது. சில பாடல்கள் ஒரே மாதிரியாக இருக்கிறது. அதையும் தாண்டி சில புதிய இசை, புதிய குரல், எதார்த்த வரிகள் என சில பாடல்கள் வெளிவந்து மனதை கொள்ளையடிக்கின்றன. அப்படி மனதை கொள்ளையடித்த சில புதிய பாடல்கள் இவை. 
தினமும் மூண்று வேளை சாப்பிட மறந்தாலும் ஆறு வேளையாவது இந்த பாடல்களை கேட்டுவிடுகிறேன்.. 
.............

The 33 (los 33).


நமக்கெல்லாம் இருட்டை கண்டாலே பயம் அதனால்தான் சூரியன் அந்த பக்கம் சென்றவுடன் கனவை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிவிடுகிறோம். ஆனால் சிலருக்கு இருள்தான் வாழ்க்கையே. குறிப்பாக சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கை எலிகளைப் போல் பகல் எது? இரவு எது? எனத் தெரியாது பூமிக்கடியில் அன்றாடம் வாழ்வா சாவா என அலைந்துக் கொண்டிருக்கும். நாம் ஆசையாக அணியும் தங்கம், வைரம் போன்ற ஆபரணங்கள் முதல், சாதாரண குண்டூசிவரை தயாரிக்க இந்த பூமியைக் குடைந்தே ஆகவேண்டும். இதற்காக உலகமெங்கும் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையை பணயம் வைக்கின்றனர். ஆண்டிற்கு சுமார் 12000 தொழிலாளர்கள் சுரங்க விபத்துகளில் உயிரிழப்பதாக ஆய்வரிக்கை கூறுகிறது. இதில் அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும் சில விபத்துகளை சுரங்கத்தோடு யாருக்கும் தெரியாமல் மூடிவிடுவதுண்டு. இன்று சுரங்கத் தொழில் என்பது பணம் காய்க்கும் மரம். ஆனால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும், அமைதியான சூழலும் இருக்கிறதா? எனக் கேட்டால் மௌன விரதம்தான். விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்த பின்னரே எல்லோருக்கும் தலையில் மணியடிக்கிறது. இந்த சுரங்கத் தொழிலாளர்களின் இருட்டு வாழ்கையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய நிகழ்வுதான் 2010 ஆம் ஆண்டு சிலியில் நடந்த "Copiapo" சுரங்க விபத்து. அந்த விபத்தைப் பற்றிய உண்மைத் திரைப்படம்தான் The 33 ( Los 33).

Flush out Toilet ..



"John Haringten" என்பவருக்கு கழிவறையில் உட்கார்ந்த கணப்பொழுதில் மகா யோசனை தோன்றியது. தினமும் காலையில் ஒரு பக்கெட் நிறைய தண்ணியையும் சொம்பையும் தூக்கிக்கிட்டு இங்கு வருகிறோம். போகும் போது எல்லாவற்றையும் காலிசெய்துவிட்டு போகிறோம். கார்பரேசன் தண்ணீர் சில நாட்கள் சரியாக வருவதில்லை. நீரை சேமியுங்கள் என ஒருபக்கம் சிலர் தவளையாக கத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த பக்கெட்டை நாலாவது மாடிக்கு தினமும் சுமக்க கடினமாக இருக்கிறது. பழைய டாய்லெட்டில் வசதியாக காலை நீட்டி, மடக்கி உட்காரவும் முடிவதில்லை. காலைக்கடன் பெருங்கடனாக இருக்கிறது. இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என நினைத்தார்.



Hip... Hop....


99, 66, 107 என நம்பர் வரையப்பட்ட அன்சைஸ் பனியன் போட்டுக் கொண்டு. நகைக்கடை விளம்பர மாடல் மாதிரி கையில, காதுல, கழுத்துல நகைகள் மாட்டி, பரட்டை தலையோடு, பாதியில் எழுந்து வந்த சேவிங் பன்னாத மூஞ்சியை, ஸ்கிரீனுக்கு முன்னாடி குளோசா காட்டி, வெரும் கர்ச்சிப்பை மட்டும் இழுத்து போர்த்திக்கொண்ட பெண்களை பக்கத்தில் ஆடவிட்டு, புரியாத வார்த்தையை கிடுகிடுன்னு ஸ்பீடா இசையோடு சேர்த்து பாடுவார்கள் அல்லது படிப்பார்கள். என்ன கருமம் இது என்றால் அதுதான் Hip Hop பாடல்.


சிறிய பறவை.

Growth (My click)

சிறுதுளி பெருவெள்ளம் (சென்னை அனுபவம்-8)..


மடிப்பாக்கத்தில் உள்ள பள்ளியில் இருந்து அதன் முதல்வர் போனில் அழைத்தார் உங்களை சந்திக்க விரும்புவதாக கூறினார். தனிப்பட்ட முறையிலா அல்லது அலுவலக வேலைக்காகவா என்றேன் அலுவலக வேலை என்றால் மீட்டர், வெயிட்டிங் சார்ஜ் எல்லாம் போடுவேன் என்றபோது சிரித்துக் கொண்டார். தனிப்பட்ட முறையில் ஒரு மாலையில் அவரை சந்திக்க பள்ளிக்குச் சென்றேன் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு கருத்தரங்கிற்காக இந்த பள்ளிக்கு வந்தது நினைவுக்குள் சுழன்றது. 


1001 அரேபிய இரவுகள்.


சித்தப்பா கதை சொல்லுங்கள் என சுபிக்ஷாவும் மானஷாவும் கழுத்தைக் கட்டிக்கொள்வார்கள். சிலசமயம் வளர்ந்த அவளுக்கும் கதை சொல்வேன். சிக்கலான புத்தகங்களை வாசித்து களித்தபின் எனக்கும் ஆறுதலாக சில கதைகள் தேவைப்படும். இதற்காகவே சில சிறுவர்கள் மற்றும் நீதிக் கதை புத்தகங்களை வாசிப்பேன். அப்படி சமீபத்தில் வாசித்த புத்தகம்தான் 1001 இரவுகள் (1001 அரேபிய இரவுகள்).

உலகின் சிறந்த பொக்கிஷங்கள் சிலவற்றில் இதுவும் ஒன்று. பாரசீகம், அரேபியா, இந்தியா மற்றும் ஆசிய நாடுகள் சொல்லப்பட்ட கதைகளின் தொகுப்பே இந்த 1001 அரேபிய இரவுகள். உலகின் பல மொழிகளில் வெளிவந்த இந்த கதைகள் தலைமுறை தலைமுறையாக சொல்லப்பட்டு வருகின்றன. கட்டுக்கதை, காதல், நகைச்சுவை, நீதி, என உள்ளடக்கிய இந்த கதைகளின் அடிப்படை புத்திமதி என்பதாகும். மனித வாழ்க்கையில் எது உயர்வானது, எது இன்பமானது என்பதை அழகாக விளக்குகிறது. இந்த கதைகளை கேட்போரும், படிப்போரும், கலை, தந்திரம், மாயாஜாலம் என ஒருசேர தனி உலகத்தில் தாங்களும் இருப்பதாக உணர்வார்கள்.


மகா (மக) குளம்..

முதல் "கட்டிங்" மருத்துவமனை..



1925- ல் டாக்டர் R.D.Curve என்பவர் மும்பையில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். மருத்துவ வசதிகள் இல்லாத காலகட்டத்தில் அவர் தொடங்கியதற்கு நிறைய நோயாளிகள் வந்திருக்க வேண்டும், அவரும் ஏரியாவில் பாப்புலர் ஆகியிருக்க வேண்டும் ஆனால் நடந்ததோ வேறு. அவரது மருத்துவமனை பக்கம் யாரும் கால் வைக்கவில்லை. பேய் குடியிருக்கும் அரண்மனை போல அந்த வழியாக நடந்து செல்வதைக் கூட தவிர்த்தனர். அவரும் அனைத்து உத்திகளைக் கையாண்டார். பிரிட்டிஷார் ஆட்சியில் இருந்த சமயம் அரசிடம் சென்று முறையிட்டார். சுவர் விளம்பரம் செய்யப்பட்டது, வலுக்கட்டாயமாக ஆட்களை பிடித்து வந்தனர், மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு பரிசுப் பொருட்களும் கொடுக்கப்பட்டது. ஆனாலும் கடையில் வியாபாரம் ஒன்றும் ஆகவில்லை. கல்லாவும் நிறையவில்லை. முதலில் மும்பையில் ஒரு மருத்துவமனை பிறகு சென்னை, கொல்கத்தா என திட்டத்தோடு வந்த டாக்டருக்கு தோல்வியே மிஞ்சியது. அவர் அப்படி என்ன அதிசயமான மருத்துவமனை ஆரம்பித்தார்?. 

சன்னலோர இருக்கை..

புயலின் முதல் முகவரி.


R.K.சேகர் (1933- 1976) அறுபதுகளில் மலையாள திரையுலகின் நம்பர் ஒன் மியூசிக் டைரக்டர். ராஜகோபால குலசேகரா என்ற பெயரின் சுருக்கமே R.K.சேகர். அந்தக் காலகட்டத்தில் இவரது பாடல்கள் கொடிகட்டி பறந்தது. பழஷிராஜா என்ற படம்தான் இவருக்கு முதல் வாய்ப்பு கொடுத்து. அதற்குப்பின் டாக்ஸி கார், மிஸ் மேரி போன்ற படங்கள் செம ஹிட். மொத்தம் 52 படங்கள் மலையாளத்தில் மட்டும் 23 என 127 பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். குறுகிய காலத்தில் வாழ்கையில் முன்னேறிய அவர் வாழ்க்கையும்  குறுகிய காலத்திலே முடிந்தது. தான் நோய்வாய்ப்பட்ட கடைசி நிமிடத்திலும் சோட்டாணிக்கரை அம்மே என்ற படத்திற்கு இசையமைத்துத் தந்தார். அவர் இசையமைத்த "பெண்படா" என்ற திரைப்படத்தில் இசைக்குழுவோடு சேர்ந்து அவரது பத்துவயது மகன் திலிப் சேகர், "வெள்ளித் தேன் கிண்ணம் போல்" என்ற பாடலுக்கு கீ-போர்டு வாசித்தான். ஓரளவுக்கு அப்பாவின் இசை ஞானம் அவனுக்கு இருந்தது. தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு குடும்பச் சுமை முழுவதும் திலீப்பின் தலையிலே விழுந்தது. ஓ!.. சேகர் பையனா என, சிலர் மீயுசிக் கம்போசிங்களுக்கு அவனுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள். அவனும் வாசித்தபின் அவர்கள் கொடுக்கும் பணத்தை எண்ணிப் பார்க்காமல் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து தன் அம்மா கஸ்தூரியிடம் நீட்டுவான். சில வருடங்கள் அந்த அழகிய குடும்பம் இந்த சிறுவனால் ஜீவித்து வந்தது.


கிராமத்து நினைவுகள்...

வைரம்..


நூறு வருடங்களுக்கு முன்பு Stepanazin என்ற 15 வயது சிறுவன் ஆப்பிரிக்காவில் உள்ள ஆராஞ்சு ஆற்றங்கரையில் (Orange River) விளையாடிக் கொண்டிருந்தான். கரையில் இருக்கும் ஒவ்வொரு கல்லாக எடுத்து ஆற்றில் எறிந்து அது தவளைபோல் தண்ணீரில் தாவிச் செல்லும் அழகில் மூழ்கியிருந்தான். அப்போது அவனது கைக்கு பளபளக்கும் சிறிய கல் ஒன்று கிடைத்தது. ஜொலிக்கும் அந்தக் கல்லை ஆற்றில் வீசாமல் தன் பக்கத்து வீட்டுக்காரனிடம் கொண்டுவந்து கொடுத்தான். அந்த பக்கத்து வீட்டுக்காரர் அந்த அழகிய கல்லை விற்றால் இன்றிரவு ஒரு கட்டிங் சரக்கு கிடைக்கும் என நினைத்து ஊரில் இருக்கும் நகை வியாபாரியிடம் கொண்டு சென்றான். நகை வியாபாரி தன் பங்கிற்கு இன்று ஒரு புல்லே கிடைக்கும் என நினைத்து நகரத்தில் இருக்கும் பெரிய வியாபாரியிடம் அந்த கல்லைக் கொடுத்தான். அந்த கல் ஜொலிக்கும் "வைரம்". இந்த நிகழ்வுதான் ஆப்பிரிக்காவில் வைரம் கொட்டிக் கிடக்கிறது என்பதற்கு அடித்தளமான அமைந்தது. அதற்குப் பின் உலக பணக்கார நாடுகள் பல பல் இளித்துக்கொண்டு ஆப்பிரிக்காவை சல்லடை போட்டு சலிக்க ஆரம்பித்துவிட்டன. இன்று ஆப்பிரிக்க நாடுகள்தான் வைரம் வெட்டி எடுப்பதில் முன்னோடியாக திகழ்கின்றன.

சிறுதுளி பெருவெள்ளம் (சென்னை அனுபவம் - 7).


நான்கு செங்கல் கொஞ்சம் சிமென்ட் கலவை இருந்தால் போதும் பூசி மொழுகிவிடலாம் புதிதாக ஏதாவது செய்யவேண்டும் என நினைத்து நேரம்தான் கடந்து கொண்டிருந்தது. பழந் தமிழர்களின் நீர் மேலாண்மையைப் பற்றி தெரிந்துகொள்ள சில நாட்கள் பிடித்தது. இருக்கும் இடத்திலிருந்து கூகுளில் தட்டினால் எல்லாம் கிடைத்துவிடும் என நினைத்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தேடலில் அதிக தகவல்கள் கிடைக்கவில்லை புத்தகங்களை புரட்டினால் மட்டுமே தகவல்களை பெற முடியும் அதற்கு நூலகம் செல்ல முடிவு செய்தேன். ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் இங்குதான் இருக்கிறது அது அங்குதான் இருக்கிறதா? என சந்தேகம் வந்தது. சென்னையில் இருக்கும் நூலகத்தை வைத்து அரசியல் செய்தது அனைவரும் அறிவோம் நம் ஊரில்தான் அரண்மனை முதல் அடுப்படி வரை அரசியல் புகுந்துகொள்கிறது.


Ajaya...Roll of the Dice..

தமிழில் - கௌரவன் (உருண்டன பகடைகள்) .


ஹீரோக்களின் கதை அழகானது அதைவிட வில்லன்களின் கதை சுவாரசியமானது. ஹீரோக்கள் செய்யும் செயல்களுக் கெல்லாம் நியாயம், தர்மம், விதி, அதிசயம், தெய்வீகம் என சப்பைக்கட்டு கட்டிவிடப்படும் ஆனால் வில்லன்களுக்கு அந்த புண்ணாக்குகள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. ஹீரோக்கள் பிறந்ததிலிருந்து நன்கு பதப்படுத்தப்பட்டு ஒரு இங்குபேட்டர் பேபிபோல வளர்க்கப் படுவார்கள். வில்லன்கள் வாழ்க்கையோ அதற்கு எதிராக காட்டாற்று வெள்ளம் போல் இருக்கும். ஹீரோக்கள் உருவாக ஏழு நட்சத்திரம் ஒன்று கூடி ஜாதகத்தில் ஏழு எட்டு கட்டங்கள் சரியாக இருக்க பிறந்தால் போதும். வில்லன்கள் உருவாகுவதற்கு அவர்களுடைய பிறப்பு மட்டுமின்றி வளர்ந்த விதம், இந்த புரையோடிப் போன சமுதாயம், மதம், கடவுள், பழமை, சட்டதிட்டம், என அனைத்தும் காரணமாக இருக்கும். சமீபத்தில் வெளிவந்த தனிஒருவன் திரைப்படத்தில் அழகான வில்லன் அரவிந்தசாமியை நாமெல்லாம் ரசித்தோம் இல்லையா?. இந்த வில்லன்கள் இல்லை என்றால் புராண இதிகாச கதைகள் முதல் சாதாரண பெட்டிக்கடை கதை வரை எதுவுமே இருக்காது. அதனால்தான் வில்லன்கள் வாழ்க்கை கதை சுவாரசியமானது.