☰ உள்ளே....

ஸ்னாக்ஸ் பாக்ஸ்....


சின்னச் சின்ன செய்திகள், தகவல்களை பத்திரிக்கை மட்டும் புத்தகங்களில் படிக்கும் போது வியப்பாக இருக்கும். அப்படி படிக்கும் சுவையான தகவல்களை பென்சிலால் கோடிட்டுக் கொள்வேன். அவற்றை எப்போதாவது திரும்ப படிக்கும் போது சுவாரசியமாக இருக்கும். இவற்றையெல்லாம் சேமித்து வைக்கவேண்டும் எனத் தோன்றியது. நம்மகிட்டதான் பெரிய குப்பைத் தொட்டி (Blogs) இருக்கிறதே என உடனே அதில் எழுதிவைக்க ஒரு தலைப்பை யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். அதுதான் "ஸ்னாக்ஸ் பாக்ஸ்".


ஏற்கனவே Blogs -ல் சில பதிவுகளை எழுதிவருகிறேன். சிலர் அதைப் படித்துவிட்டு பாராட்டுவார்கள். சிலருக்கு படிக்கும்போதே கொட்டாவி வந்துவிடும், சிலரோ! இவனுக்கு வேற வேலை வெட்டியே கிடையாது என கடந்து விடுவார்கள். நானும் சில பதிவுகளுக்காக தகவல்களை சேகரிக்க, ஆராய்ந்து சரிபார்க்க சில நாட்களை எடுத்துக் கொள்கிறேன். அதற்குப் பிறகு எழுதும்போது ஒருக்கால் மறந்தும், தவறுதலாகவும் எழுத்துப் பிழையோடு முடித்து விடுகிறேன். இவற்றை சரிசெய்யவும், படிப்பவர்களுக்கு அலுப்புத் தட்டாமல் இருக்கவும், என்னை புதுப்பித்துக் கொள்ளவும், இந்த ஸ்னாக்ஸ் பாக்ஸ் உதவும் என நம்புகிறேன். இதில் சின்ன சின்ன தகவல்கள் சுவையாகவும், அடடா! இதுவரைக்கும் நமக்கு தெரியாமல் இருந்ததே என, புதுமையாகவும் இருக்கும். அதாவது உங்களுக்கும் எனக்கும் ஒரு மாலைப் பொழுதில் தேனீருடன் கொறிக்கும் ஸ்னாக்ஸ் போல இருக்கும். அடிக்கடி என்ன இருக்கிறது என இந்த ஸ்னாக்ஸ் பாக்ஸை திறந்து பார்த்துக் கொள்ளுங்கள்.