☰ உள்ளே....

சில்லுனு ஒரு பீர்..ஸ்னாக்ஸ் பாக்ஸின் முதல் பதிவை மங்கலகரமாக, இந்த வெய்யிலுக்கு ஏற்றமாதிரி சில்லுனு ஆரம்பிப்போம்.

ஒரு கப் பார்லியை எடுத்துக் கொள்ளுங்கள் (தோராயமாக 100 கிராம்) அதனுடன் ஒரு லிட்டர் தண்ணீரை சேர்த்து நன்றாக கூழ்போல் அரைத்துக் கொள்ளவும் பிறகு அதை நன்கு கொதிக்க வைக்கவும். கொதிக்கும் இந்த கலவையில் 50 கிராம் ஈஸ்டை சேர்க்கவும். நுரைத்து பொங்கும் அளவிற்கு வந்தவுடன் அதனுடன் 10 கிராம் ஹாப்சை(Hops) போட்டு கொதிப்பதை நிறுத்திவிடவும். பிறகு ஆரவைத்து குளிவிக்கவும். சுவையான சொந்த தாயாரிப்பு "பீர் " ரெடி. இதுதாங்க வீட்டிலிருந்தபடியே பீர் தயாரிக்கும் எளிய முறை.

பல நாடுகளில் மளிகை சாமான்கள் வாங்கும்போதே இந்த மூலப் பொருட்களையும் சேர்த்து வாங்கிவிடுவார்கள். பீர் தயாரிக்க எளிமையான இயந்திரமும் அங்கு கிடைக்கிறது அதை வைத்து வீட்டிலேயே பிரஷ்சாக பீர் தயாரிக்கின்றனர். அதற்கு அந்த நாடுகளின் சட்டமும் அனுமதிக்கிறது. நாம் காலையில் எழுந்து  காஃபி போட்டு குடிப்பதைப்போல அவர்கள் பீர் குடிக்கிறார்கள். ம்..ம் நம்ம நாட்டுக்கு எப்பதான் இதுபோல வரப்போகுதோ, நம்ம எப்பதான் வல்லரசு ஆகப்போகிறோமோ தெரியலவில்லை. அதுவரைக்கும் சில்லு பீருக்கு டாஸ்மாக் மட்டுமே சரணாகதி.