☰ உள்ளே....

நகம்..


நடக்க, ஓட, பற்றிக்கொள்ள, தன்னை தற்காத்துக்கொள்ள, உணவை கிழித்து சாப்பிட என இதற்காக இயற்கை படைத்த ஆயுதம்தான் நகங்கள். ஓடுவது, தாவுவது, தவழ்வது, பறப்பது என அனைத்து உயிரினங்களிலும் இருக்கும் Attached weapon. நம் மனித இனம் சிம்பன்சியின் அப்டேட் வெர்சன் என்பதால் நாமும் இந்த லிஸ்டில் உண்டு. ஆனால் மற்ற உயிரினங்களைப் போல் நாம் நகங்களை உருப்படியாக பயன்படுத்துவதில்லை எப்போதாவது முதுகு அரித்தால் சொறிந்து கொள்வோம் அவ்வளவுதான். அதனால்தான் சும்மா வளரும் நகங்களுக்கு வண்ணம் பூசி, படம் வரைந்து பாகங்களைக் குறித்து, பளபளப்பாக வைத்திருக்கிறோம்.

நகம் "கெராட்டின்" (Keratin) என்ற புரதத்தால் ஆனது. உடலில் உயிர் இருக்கும் வரை அது வளர்ந்து கொண்டே இருக்கும். சாராசரியாக மனிதனின் நகம் மாதத்திற்கு 3 மில்லிமீட்டர் அளவு வளரும் என கணித்து வைத்திருக்கிறார்கள். நமது விரல்களில் நடுவிரல் நகம்தான் வேகமாக வளருமாம், கட்டைவிரல் இதில் ஸ்லோ. நகம் முழுவதும் விழுந்து செல்கள் உயிர்ப்புடன் இருந்தால் ஆறுமாத காலத்திற்குள் திரும்ப முளைத்துவிடும். நகம் உடலில் இருக்கும் வரை எந்த ஆபத்தும் இல்லை( யாரையாவது பிராண்டும் வரை) அதுவே உடைந்துவிட்டால் சிதைய ஆரம்பிக்கும் அப்போது கெராட்டின் புரதம் விஷத்தன்மை கொண்டதாக மாறிவிடும் அதனால்தான் நகம் கடிக்காதே, இரவில் நகம் வெட்டாதே, பெண்கள் நகம் வளர்க்கக் கூடாது என கன்டிசன் போடுகிறார்கள். இந்த கன்டிசனை மீறி சொல்பேச்சு கேட்காமல், இந்தியாவை சேர்ந்த Shridhar Chillal என்பவர் தன் நகங்களை 20 அடி 2.25 அங்குலம் (615.32 cm) அளவிற்கு வளர்த்து கின்னஸ் சாதனைப் படைத்திருக்கிறார். பெண்களில் அமேரிக்காவைச் சேர்ந்த Lee Redmond என்பவர் 28 அடி (850 cm) வளர்த்திருக்கிறார். இவங்களுக்கு கொசுகடித்தால் என்ன செய்வார்கள்..? .?..?. நாம இதுபோல வளர்க்காமல் கொஞ்சமா, எப்போதாவது அரித்தால் இதமாக சொறிந்துகொள்ளும் அளவிற்கு ஆயுதத்தை தீட்டுவோம்..