இடுகைகள்

February, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
☰ உள்ளே....

முத்தச் சோறு..

படம்

நகம்..

படம்
நடக்க, ஓட, பற்றிக்கொள்ள, தன்னை தற்காத்துக்கொள்ள, உணவை கிழித்து சாப்பிட என இதற்காக இயற்கை படைத்த ஆயுதம்தான் நகங்கள். ஓடுவது, தாவுவது, தவழ்வது, பறப்பது என அனைத்து உயிரினங்களிலும் இருக்கும் Attached weapon. நம் மனித இனம் சிம்பன்சியின் அப்டேட் வெர்சன் என்பதால் நாமும் இந்த லிஸ்டில் உண்டு. ஆனால் மற்ற உயிரினங்களைப் போல் நாம் நகங்களை உருப்படியாக பயன்படுத்துவதில்லை எப்போதாவது முதுகு அரித்தால் சொறிந்து கொள்வோம் அவ்வளவுதான். அதனால்தான் சும்மா வளரும் நகங்களுக்கு வண்ணம் பூசி, படம் வரைந்து பாகங்களைக் குறித்து, பளபளப்பாக வைத்திருக்கிறோம்.

நகம் "கெராட்டின்" (Keratin) என்ற புரதத்தால் ஆனது. உடலில் உயிர் இருக்கும் வரை அது வளர்ந்து கொண்டே இருக்கும். சாராசரியாக மனிதனின் நகம் மாதத்திற்கு 3 மில்லிமீட்டர் அளவு வளரும் என கணித்து வைத்திருக்கிறார்கள். நமது விரல்களில் நடுவிரல் நகம்தான் வேகமாக வளருமாம், கட்டைவிரல் இதில் ஸ்லோ. நகம் முழுவதும் விழுந்து செல்கள் உயிர்ப்புடன் இருந்தால் ஆறுமாத காலத்திற்குள் திரும்ப முளைத்துவிடும். நகம் உடலில் இருக்கும் வரை எந்த ஆபத்தும் இல்லை( யாரையாவது பிராண்டும் வரை) அதுவே …

மணல் வீடு..

படம்

சில்லுனு ஒரு பீர்..

படம்
ஸ்னாக்ஸ் பாக்ஸின் முதல் பதிவை மங்கலகரமாக, இந்த வெய்யிலுக்கு ஏற்றமாதிரி சில்லுனு ஆரம்பிப்போம்.

ஒரு கப் பார்லியை எடுத்துக் கொள்ளுங்கள் (தோராயமாக 100 கிராம்) அதனுடன் ஒரு லிட்டர் தண்ணீரை சேர்த்து நன்றாக கூழ்போல் அரைத்துக் கொள்ளவும் பிறகு அதை நன்கு கொதிக்க வைக்கவும். கொதிக்கும் இந்த கலவையில் 50 கிராம் ஈஸ்டை சேர்க்கவும். நுரைத்து பொங்கும் அளவிற்கு வந்தவுடன் அதனுடன் 10 கிராம் ஹாப்சை(Hops) போட்டு கொதிப்பதை நிறுத்திவிடவும். பிறகு ஆரவைத்து குளிவிக்கவும். சுவையான சொந்த தாயாரிப்பு "பீர் " ரெடி. இதுதாங்க வீட்டிலிருந்தபடியே பீர் தயாரிக்கும் எளிய முறை.

பல நாடுகளில் மளிகை சாமான்கள் வாங்கும்போதே இந்த மூலப் பொருட்களையும் சேர்த்து வாங்கிவிடுவார்கள். பீர் தயாரிக்க எளிமையான இயந்திரமும் அங்கு கிடைக்கிறது அதை வைத்து வீட்டிலேயே பிரஷ்சாக பீர் தயாரிக்கின்றனர். அதற்கு அந்த நாடுகளின் சட்டமும் அனுமதிக்கிறது. நாம் காலையில் எழுந்து  காஃபி போட்டு குடிப்பதைப்போல அவர்கள் பீர் குடிக்கிறார்கள். ம்..ம் நம்ம நாட்டுக்கு எப்பதான் இதுபோல வரப்போகுதோ, நம்ம எப்பதான் வல்லரசு ஆகப்போகிறோமோ தெரியலவில்லை. அதுவரைக்கும் சில…

ஸ்னாக்ஸ் பாக்ஸ்....

படம்
சின்னச் சின்ன செய்திகள், தகவல்களை பத்திரிக்கை மட்டும் புத்தகங்களில் படிக்கும் போது வியப்பாக இருக்கும். அப்படி படிக்கும் சுவையான தகவல்களை பென்சிலால் கோடிட்டுக் கொள்வேன். அவற்றை எப்போதாவது திரும்ப படிக்கும் போது சுவாரசியமாக இருக்கும். இவற்றையெல்லாம் சேமித்து வைக்கவேண்டும் எனத் தோன்றியது. நம்மகிட்டதான் பெரிய குப்பைத் தொட்டி (Blogs) இருக்கிறதே என உடனே அதில் எழுதிவைக்க ஒரு தலைப்பை யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். அதுதான் "ஸ்னாக்ஸ் பாக்ஸ்".

ஏற்கனவே Blogs -ல் சில பதிவுகளை எழுதிவருகிறேன். சிலர் அதைப் படித்துவிட்டு பாராட்டுவார்கள். சிலருக்கு படிக்கும்போதே கொட்டாவி வந்துவிடும், சிலரோ! இவனுக்கு வேற வேலை வெட்டியே கிடையாது என கடந்து விடுவார்கள். நானும் சில பதிவுகளுக்காக தகவல்களை சேகரிக்க, ஆராய்ந்து சரிபார்க்க சில நாட்களை எடுத்துக் கொள்கிறேன். அதற்குப் பிறகு எழுதும்போது ஒருக்கால் மறந்தும், தவறுதலாகவும் எழுத்துப் பிழையோடு முடித்து விடுகிறேன். இவற்றை சரிசெய்யவும், படிப்பவர்களுக்கு அலுப்புத் தட்டாமல் இருக்கவும், என்னை புதுப்பித்துக் கொள்ளவும், இந்த ஸ்னாக்ஸ் பாக்ஸ் உதவும் என நம்புகிறேன். இதில் ச…

வழிவிடுங்கடா பசிக்கிறது..

பெரும் பசியோடு சாப்பிட கைக்கழுவ நிற்கையில், ஹோட்டல் வாஷ்பேஷனில் சிலர் பல்லு விலக்கி, முகம்கழுவி சோப்புபோட்டு குளிக்கிறார்கள்.. - வழிவிடுங்கடா பசிக்கிறது..

ஊஞ்சல்...

படம்

நடுநிசி நகரம்..

படம்

அந்த டிரான்சிஸ்டரும் பழைய ஹிந்திப் பாடல்களும்..

படம்
சிறுவயதில் பக்கத்து வீட்டில் வசித்துவந்த சாந்தா அத்தை பழைய டிரான்சிஸ்டர் ரேடியோ ஒன்று வைத்திருந்தாள். இராணுவத்தில் வேலைசெய்த தன் கணவனின் நினைவாக அவளிடம் இருந்தது அது ஒன்று மட்டுமே. இராணுவத்திலிருந்து சொந்த ஊருக்கு வந்த சினிமா கதாநாயகன் போல் எப்போதும் அது பச்சை உடையில் இருக்கும். சரோஜ் நாராயணசுவாமியின் குரலில் விடிந்த பகல்பொழுது கடைசியாக தூர்தர்ஷனின் செய்திக்குப்பின் மெல்ல இருளும் அப்போது ஆரம்பிக்கும் அந்த டிரான்சிஸ்டரின் கச்சேரி. பகல் முழுவதும் முற்றத்தில் காய்ந்த பேட்டரிகளை எடுத்துப்போட்டு, ஒரு குலுக்கு குலுக்கி, தலையில் செல்லமாகத் தட்டி, அதன் ஒற்றைக் கொம்பை தூக்கிவிட்டு, காதை மெல்லத் திருகி பாடவிடுவாள் சாந்தா அத்தை. முகமது ரஃபி, கிஷோர் குமார், லாதா மங்கேஷ்கருடன் ஹிந்தி பாடகர்கள் மெல்ல காற்றில் தவழ்ந்து வருவார்கள். சப்தம் குறைவாக இருந்தால் R.D பர்மன், மதன் மோகன் போன்ற இசையமைப்பாளர்கள் தாளம் போட்டு தாலாட்டுவார்கள். அதைக் கேட்டுக்கொண்டே உறங்கும் எங்களது இரவு.

Exposure ..(My Click) .

படம்

ஊடல்....

படம்

காய்ச்சல் ..

படம்

மொபைல் கேம்கள்.

படம்
கையடக்க சாதனத்தில் ஆரம்பித்தது எலெக்ட்ரானிக் கேம் (வீடியோ கேம்) விளையாடும் பழக்கம். பிளேஸ்டேசன் வந்ததிற்குப் பிறகு டீவிக்கு அப்படியே தாவியது. ஜாய் ஸ்டிக்கை வைத்துக் கொண்டு நானும் தம்பியும் தட்டிக் கொண்டிருந்த பால்ய காலங்கள் நினைவில் இருக்கிறது. அதற்குப் பின் WWF, Assassain, Cricket, Car Race, Wise city என, கம்பியூட்டரில் ஹோம் தியோட்டரை இணைத்து விடிய விடிய வீடியோ கேம் விளையாடி வீட்டில் திட்டு வாங்கியிருக்கிறேன். தற்போது அனைத்தும் மொபைல்போன் மயம். மீண்டும் கேம்கள் கையடக்க வடிவிற்கு வந்துவிட்டது. Candy crush மற்றும் Temple Run கேம்தான் இன்றைய மொபைல் உலகின் டாப் மோஸ்ட் கேம். Candy crush குழந்தைகள் விளையாட்டு போலிருக்கும், நிஜ வாழ்க்கையில் தினமும் ஓடிக் கொண்டிருப்பதால் Temple Run- னும் விளையாடுவதில்லை. ஆனாலும் இந்த கேம் விளையாடும் மோகம் இன்னும் குறையவில்லை. சில காத்திருப்புகள், கொஞ்சம் சலனம், கோபம், தூக்கம் பிடிக்காத தருணங்களில் தற்போதும் சிறுபிள்ளையாக விளையாடுவதுண்டு. இதற்காக சில கேம்களை மொபைலில் சேமித்து வைத்துள்ளேன் அவ்வபோது விளையாடுவேன். அப்படி விளையாடும் சில மொபைல் கேம்கள்.
D- Day : F…

எலிவால் தூரிகை (Mobile Art) .

படம்

குட்டி தேவதையின் ஓவியம்..

படம்

கற்கள்..

படம்

காதல் பேச்சு..

படம்

In the Garden (My Click) .

படம்

இடைவெளி..

படம்

காஃபி ராகம்..

படம்
காலைப் பொழுது அழகானது (அதற்கு சீக்கிரமாக எழுந்திரிக்க வேண்டும்). அதிலும் மார்கழி, தை மாதங்களில் கூடுதல் அழகு. இவையே கிராமத்தில் அமைந்தால் அடடா! பேரழகு.
சன்னலின் வழியே நுழையும் வெளிச்சம், பனித்துளி, தும்பைப்பூ, வாசல் தெளித்த சாணம், அது கலந்த மண்வாசனை,  பக்கத்து வீட்டு சேவலின் அலாரம் டோன். அதன் பெட்டை ஜோடியின் ரிங்கிங் டோன் காதல் சிட்டுகளின் கி.கீ.கு.கூ. அடுப்படி காஃபி வாசம். கலர் கோலம், அப்பாவின் சட்டையையையோ, அண்ணனின் டீசர்ட்டையோ போட்டுக்கொண்டு கோலமிடும் ஆண்டாள்கள், சுப்ரபாரதம், நாதஸ்வரம், ஐய்கிரி நந்தினி, என ஒவ்வொருநாள் பொழுதும் இப்படியே விடிய வேண்டும். 

காபி ராகம்...

படம்
காஃபி ராகம் என வேடிக்கையாக எழுதியிருந்தேன். ராகங்களின் வகைகளில் காபி ராகம் என்று ஒன்று இருக்கிறது. அந்த நிஜ காபி ராகத்தை சுவைத்துவிட நினைத்தேன்.

"கரஹரப்பிரியா " ராகத்தின் ஜன்ய ராகம்தான் இந்த காபி ராகம்.  தாய் ராகங்கள் என சொல்லப்படுகின்ற ராகங்களின் ஸ்வரங்களின் எண்ணிக்கையை மாற்றியமைப்பதின் மூலம் பிறப்பவை "ஜன்ய ராகங்கள்".  22 வது மேளகர்த்தாவான கரஹரப்பிரியா ராகத்தினை மாற்றியமைத்து பிறந்த ஜன்யராகம்தான் இந்த காபி. ஸ்ருங்கார ரசத்திற்கு பொருத்தமான ராகம். ஸ்ருங்காரம் என்றால் கோவம், அழுகை, சிரிப்பு, மகிழ்ச்சி, போன்ற நவரசங்கள். இதை பாடலாக வெளிப்படுத்த இந்த ராகம் உகந்தது. இதில் அன்னிய ஸ்வரங்கள் அதிகம் வரும். இதில் வரும் ஸ்வரங்கள் ஷட்ஜமம், சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், அர்தர காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம், சுத்த தைவதம், சதுஸ்ருதி, தைவதம், கைஷிகி நிஷாதம், மற்றும் காகலி நிஷாதம் என்பனவாகும்.

ஸ்பரிசம் ..

படம்

Just a Moment (My Click) .

படம்

காதல் குழந்தை..

படம்

ஜாம்பவான்...

படம்
திரை உலகின் ஜாம்பவான், கிரிக்கெட்டின் ஜாம்பவான், கால்பந்தாட்ட ஜாம்பவான், இசை உலகின் ஜாம்பவான் என்று அவரவர் துறையில் அசைக்க முடியாது சிறந்து விளங்கும் நபரை "ஜாம்பவான்" என புகழ்வோம். யார் இந்த ஜாம்பவான்?.

புராணத்திலும், இதிகாசங்களிலும் வரும் அட்வெஜ்சர் ஹீரோதான் நம்ம ஜாம்பவான்.
ஒருமுறை சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து போர் அடிக்கிறது என்று காட்டிற்கு பிக்னிக் சென்றனர். தங்களுடைய உருவமும் காஸ்டியுமும் அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதால் கரடியாக உருமாறினர். இயற்கையோடு கலந்து மகிழ்ந்த போது அவர்களுக்கு மனிதனும் கரடியும் கலந்த குழந்தை பிறந்தது. அந்த குழந்தையே ஜாம்பவான் "The Beer king" என்கின்ற வாய்வழி கதை சொல்லப்படுகிறது.
ஜாம்பவான் என்றால் அசைக்க முடியாத பலம் பொருந்தியவன் என்று பொருள் . இவரே கரடிகளின் அரசன். ஜாம்பவான் அந்த கால WWF -ல் (மல்யுத்தத்தில்) யாரும் வெல்ல முடியாத வீரராக இருந்திருக்கிறார். தேவர்களும் அசுரர்களும் பார்க்கடலை கடையும்போது அவர்களுக்கு ஜாம்பவான் உதவியிருக்கிறார் . வாமன அவதாரத்தில் ஜாம்பவான் அவரை ஏழுமுறை சுற்றி வந்ததாகவும் தொன்மக் கதைகள் கூறு…

நட.

படம்

வேண்டுதல்..

படம்

Soft and Touch..

படம்
அதிரடி, கட்ட குரல், கெட்ட வார்த்தை, விளங்காத ராப், டெக்னாலஜியின் இரைச்சல் இவற்றைத் தாண்டி அடியேன் ரசிக்கும் சில ஆங்கில Soft and Touch பாடல்கள்.
சிறுதுளி பெருவெள்ளம் ( சென்னை அனுபவம் - 6)..

படம்
தலைமை அலுவலகத்தில் இருந்து அழைத்திருந்தனர் சென்னை வந்து மூன்று நாட்களுக்குப் பிறகுதான் முதன்முறையாக அங்கு சென்றேன். பெருந்தலைகள் அனைவரும் ஆஜராகி இருந்தனர் வழக்கத்திற்கு மாறாக அனைவரும் ஜீன்ஸ் டீ-சர்ட்டில் ஹவாய் பீச்சில் பிக்னிக் வந்தது போல் காணப்பட்டனர் (மழை வெள்ளம் காரணமாக). நான் ஒருவன் மட்டும் சற்று நனைந்த ரைமண்ட் மாடல் கோழி போல் சென்றிருந்தேன். அடச்சே! தெரிந்திருந்தால் ரூமில் போட்டிருந்த டவுசருடன் வந்திருப்பேன் என நொந்து கொண்டேன். எல்லா தலைகளும் வாய்நிரைய முதலை பற்கள் தெரியும்படி சிரித்துக் கொண்டிருந்ததை பார்க்கும் போது ஏதாவது பெரிய மீன் மாட்டியிருக்கும் என யூகித்தேன்.

காட்டுப்பூ ( My Clicks) ..

படம்

யாதுமாகி..

படம்

நாக் அவுட் (இறுதிச் சுற்று)...

படம்
பெண் இயக்குனர் என்றால் பெண்களின் சோக வாழ்க்கையை படமாக எடுப்பார்கள். இவர் சற்று வித்தியாசமாக விளையாட்டை கையில் எடுத்திருக்கிறார். வழக்கமான சக்தே இன்டியா பார்முலா கதைதான், ஆனாலும் மீனவ குப்பத்திலிருந்து பாக்ஸிங் மேடைவரை கொண்டு சென்ற திரைக்கதை படத்தின் அழகு.

பலியாத் ஜெயச்சந்திர குட்டன்...

படம்
காலையில் எதேச்சையாக கேட்ட பாடல் சில நேரங்களில் அந்த நாள் தூங்கும் வரை மனதிற்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும். இன்று அப்படித்தான் முத்து அண்ணாவின் டீக்கடையில் கேட்ட அந்த பாடல்  திரும்பத் திரும்ப மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது.
"யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு,
நீதானே கண்ணே நான் வாழும் மூச்சி.
வாழ்ந்தாக வேண்டும்
வா வா பெண்னே".

102 - வது கவிதை..

படம்

முப்பதாம் தேதி.

படம்

உலகின் இறுதி நாள்..

படம்
முதன் முதலில் உலகம் அழியும் என வெடிகுண்டு திரியை கொளுத்திப் போட்டவர் கலிலியன் இனத்தை சேர்ந்த "ராபி ஜோஸ்". அவர் அழியக்கூடும் என கூறிய வருடம் கி.பி 130. அதற்கு பின் கி.பி 381, 500, 1000, 1306, 1881, 1914, 1967, 2000 (இன்னும் இருக்கிறது) மற்றும் 2012 இதெல்லாம் உலகம் அழிந்துவிடும் என நம்பப்பட்ட வருடங்கள். ராபி ஜோஸ் கொளுத்திய திரி இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது. இதையும் தாண்டி நாம் 24 மணிநேரம் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு 365 1/4 நாட்கள் சூரியனையும் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறோம். 
நமக்கு தெரிந்து 2000 வருடம் உலகம் அழிந்துவிடும் என பரவலாக பேசப்பட்டது. நாமும் ஆவலாக இருந்தோம். சரியாக 12.00 மணிக்கு போர்வையை இறுக்கி மூடிக்கொண்டு கடிகாரமும் கையுமாக விழித்துக் கொண்டிருந்த பால்யகால நினைவுகள் நியாபகம் வருகிறது. மறுநாள் எழுந்து பல்லு விளக்கும் போது அய்யய்யோ ! இன்னைக்கு ஹோம்வொர்க் எழுதலையே! என வழக்கம் போல் பதறியடித்துக் கொண்டு பள்ளிக்கூடம் சென்று பதினாறு வருடங்கள் கழிந்து விட்டது. 2012-ல் பூமாதேவி வாயை பிளக்கப் போகிறாள் நாமெல்லாம் உள்ள போகப் போகிறோம் என மீண்டும் ஒரு புரளியை கிளப்பிவிட்…

அடுத்த கவிதை.

படம்

Canvas ..

படம்