சுஜாதாவின் குறுநாவல்கள்.



சரித்திரமும், விளிம்பு மனிதர்களின் வாழ்க்கையும் நாவல்களாக வெளிவந்துகொண்டிருந்த காலகட்டத்தில் சுஜாதாவின் எழுத்து புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. காதல், காமம், விஞ்ஞானம், சஸ்பென்ஸ், திரில்லர் கலந்த அவரது கட்டுரைகளும், சிறுகதைகளும், நாவல்களும் ஒவ்வொன்றும் முத்திரை பதிப்பவையே.

No  rules என்பதுதான் அவரது சிறப்பு. கடந்துபோகும் மனிதர்கள், உதிர்ந்துவிழும் வார்த்தைகள், பிரம்பிப்பூட்டும் விஞ்ஞானம். தொழில்நுட்பத்தின் அப்டேட், என அவரது எழுத்துக்கள் தனித் தன்மையானதே. எழுபது மற்றும் என்பதுகளில் வார பத்திரிக்கை முழுவதையும் அழங்கரித்தவர். அவரது கதைகளுக்காக காத்துகிடந்த அத்தைகளும், மாமாக்களும் அதிகம். அவ்வாறு வெளிவந்த நான்கே வாரத்தில் முடிந்துவிடக் கூடிய அவரது குறுநாவல்கள் சிலவற்றை திரைப்படமகவும் எடுத்திருந்தனர்.

என்னைப்போன்று Blogger மற்றும் சோசியல் மீடியாக்களில் கிறுக்குபவர்களுக்கு அவரே இன்றைக்கும் ரோல்மாடல். புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தொடங்கிய புதிதில் சுஜாதாவின் கட்டுரைகளையும், பதில்களை விரும்பி படிப்பேன். புத்தகங்களுக்கான தோடுதல் அதிகரித்தபோது சுஜாதா இன்னும் நெருக்கமானார். புத்தக திருவிழாக்களிலோ, போருந்து, இரயில் நிலைய புத்தக சாலைகளிலோ, சுஜாதா சிரிக்கலாமா வேண்டாமா என கண்ணத்தில் கைவைத்தபடி அமர்ந்திருப்பார். சில காத்திருப்புகள், பணங்கள், கொஞ்சம் ஆசுவாசம் கிடைத்தால் போதும் அவரது புத்தகங்களை வாசித்துவிடுவேன். அவரது படைப்புகளைப் பற்றி ஒவ்வொன்றாக குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் அது அனுமார் வாலை பின்தொடர்வது போலாகிவிடும். நான் ரசித்த சில அவரது குறுநாவல்கள் சிலவற்றை பகிர்கிறேன். வாசிக்கும் பழக்கத்தை தொடங்கி இருப்பவர்களுக்கு இவை சுஜாதாவை பற்றிய சிறு அறிமுகமாக இருக்கும்.

1. கரையெல்லாம் செண்பகப்பூ.
2. மீண்டும் ஒரு குற்றம்.
3. மூண்று நாள் சொர்க்கம்.
4. கடவுள் வந்திருக்கிறார்.
5. ஜன்னல் மலர்.
6. விரும்பி சொன்ன பொய்கள்.
7. காயத்ரி.
8. நிர்வாண நகரம்.
9. அனிதா - இளம் மனைவி.
10. ரோஜா.
11. விக்ரம்.
12. விடிவதற்குள் வா.