☰ உள்ளே....

என்னு நிண்டே மொய்தீன் பாடல்கள்


சென்ற பதிவில் இந்த திரைப்படத்தைப் பற்றி எழுதி இருந்தேன். படத்தின் பாடல்களைப் பற்றி தனியே எழுதவில்லை என்றால் தூக்கம் வராது போலிருந்தது. பாடல்களை கேட்டாலும் அப்படியேதான் இருக்கிறது. படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் இனிமையானதே. எது சிறந்தது என குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் குழந்தை கேட்கும் மிட்டாய் மாதிரி ஆகிவிடும். (இதுவா-அதுவா).

படத்திற்கு ஜெயச்சந்திரன், ரமேஷ் நாராயண் மற்றும் கோபி சுந்தர் என மூண்று இசையமைப்பாளர்கள். கோபி சுந்தர் மட்டும் பின்னனி இசை அமைத்திருந்தார். உயிரோட்டம் நிறைந்த கதைக்கு பாடல்கள் ஆக்ஜிசன் மாதிரி, கூட குறைச்சல் இருந்தால் மொத்த கதையும் சிதைந்து விடும். இந்தபடத்தில் பாடல்களை சரிவர பயன்படுத்தி இருக்கின்றனர். ஜாம்பவான் யேசுதாஸ் ஒரு பாடலை பாடியிருக்கிறார். மழையோடு அந்த பாடலில் நாமும் கரைந்துபோவது உறுதி. ஸ்ரேயாகோசல் இந்தியாவின் அத்துணை மொழிகளிலும் எப்படி உச்சரிப்பு பிழையின்றி பாடுகிறார் எனத் தெரியவில்லை. "காத்திருன்னு" பாடலில் காஞ்சனமாலாவின் சோகத்தை அப்படியே! குரலில் பிரதிபலிக்கிறார். விஜய் யேசுதாஸ் குரலை கேட்கும்போது சற்று சந்தேகம் வருகிறது பாடுவது அவரா அல்லது அவரது தந்தையா?என்று. மதுஸ்ரீ -யின் "பிரியமானவனே" பாடல் மனதை அள்ளிச்செல்கிறது. பாடல் வரிகளை புகழ் பொற்ற கவிஞர் ரஃபீக் அஹமத் எழுதியிருக்கிறார். "சாரதம்பரம் "பாடலை ஜெயச்சந்திரன் பாடியிருக்கிறார். மற்றும் சித்தாரா, சுஜாதா என மேலும் சில குரல்களும், பாடல்களும் கதைக்கு உயிர் ஊட்டுகின்றன. சென்ற வருடத்தில் அதிகம் கேட்டு ரசித்த பாடல்கள் இவை. அனைத்தும் ஒரே திரைப்படத்தில் இடம்பொற்றவை. "என்னு நிண்டே மொய்தீன்" எல்லோர் மனதிலும் நின்று விடுகிறான்.